PT 9.8.10

இவற்றைப் பாடுவோர் உலகை ஆள்வர்

1827 வண்டமர்சாரல்மாலிருஞ்சோலை
மாமணிவண்ணரைவணங்கும் *
தொண்டரைப்பரவும்சுடரொளிநெடுவேல்
சூழ்வயல்ஆலிநன்னாடன் *
கண்டல்நல்வேலிமங்கையர்தலைவன்
கலியன்வாயொலிசெய்தபனுவல் *
கொண்டுஇவைபாடும்தவமுடையார்கள்
ஆள்வர்இக்குரைகடலுலகே. (2)
1827 ## vaṇṭu amar cāral māliruñcolai *
mā maṇi vaṇṇarai vaṇaṅkum *
tŏṇṭaraip paravum cuṭar ŏl̤i nĕṭu vel *
cūzh vayal āli nal nāṭaṉ **
kaṇṭal nal veli maṅkaiyar talaivaṉ *
kaliyaṉ vāy ŏlicĕyta paṉuval *
kŏṇṭu ivai pāṭum tavam uṭaiyārkal̤ *
āl̤var-ik kurai kaṭal ulake-10

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1827. Kaliyan with a long shining spear, the chief of Thirumangai in Thiruvāli country surrounded with good fences of thazai flowers, composed pāsurams on the beautiful sapphire-colored god describing how his devotees praise and worship him in Thirumālirunjolai where bees sing on the slopes. If devotees learn and recite these ten pāsurams they will rule this world surrounded by the sounding oceans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு அமர் வண்டுகள் படிந்த; சாரல் சாரல்களையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; மா மணி நீலமணி வண்ணரான; வண்ணரை வடிவுடையவரை குறித்து; வணங்கும் வணங்கும்; தொண்டரை பாகவதர்களை; பரவும் துதிப்பவரும்; சுடர் ஒளி ஒளி மிக்க; நெடு வேல் வேல் படையை உடையவரும்; சூழ் பரந்த வயல்களை; வயல் உடையவருமான; ஆலி நல் ஆலி நாட்டு; நாடன் தலைவரும்; கண்டல் தாழைச் செடிகளை; நல் வேலி வேலியாகக் கொண்ட; மங்கையர் திருமங்கை; தலைவன் தலைவன்; கலியன் வாய் திருமங்கை ஆழ்வார்; ஒலி செய்த அருளிச்செய்த; பனுவல் பாசுரங்களை; கொண்டு பரம பக்தியுடன்; இவை பாடும் பாடும்; தவம் பாக்கியம்; உடையார்கள் உடையவர்கள்; இக் குரை ஒலிக்கின்ற; கடல் கடலால் சூழப்பட்ட; உலகே இவ்வுலகை; ஆள்வர் ஆள்வர்