பிராப்த விஷயத்தை வணங்கிலும் வணங்குகிறாய் தவிரிலும் தவிருகிராய் – இதர விஷயங்களை முந்துற முன்னம் விட்டுக் கொடு நிற்கப் பாராய் -என்கிறார் –
முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடு தடுமாறல் அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில் சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1-
விசிஷ்ட