PT 9.8.3

திரிவிக்கிரமன் கோயில் இதுதான்

1820 பிணிவளராக்கைநீங்கநின்றேத்தப்
பெருநிலமருளின்முன்னருளி *
அணிவளர்குறளாய்அகலிடம்முழுதும்
அளந்தஎம்மடிகள்தம்கோயில் *
கணிவளர்வேங்கைநெடுநிலமதனில்
குறவர்தம்கவணிடைத்துரந்த *
மணிவளர்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1820 piṇi val̤ar ākkai nīṅka niṉṟu ettap *
pĕru nilam arul̤iṉ muṉ arul̤i *
aṇi val̤ar kuṟal̤ āy akal-iṭam muzhutum *
al̤anta ĕm aṭikal̤-tam koyil- **
kaṇi val̤ar veṅkai nĕṭu nilam-ataṉil *
kuṟavar-tam kavaṇiṭait turanta *
maṇi val̤ar cāral māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-3

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1820. Our dear lord who removes the sickness of his devotees if they worship him and who gives his grace to all went to Mahabali as a small, handsome dwarf and measured the whole world with his two feet. He stays in the temple of Thirumālirunjolai where hunters shoot their arrows on the slopes and precious stones grow and vengai trees flourish. O ignorant heart, come let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! மட நெஞ்சே!; பிணி துன்பத்தை; வளர் ஆக்கை வளர்க்கும் உடலை; நீங்க நின்று நீக்கி நின்று; ஏத்த துதிப்பதற்காக; பெரு நிலம் பரந்த பூமியை; அருளின் தன் கிருபையால்; முன் முன்பே; அருளி தந்தருளினவனும்; அணி வளர் அழகிய; குறள் ஆய் வாமநனாய்; அகல் இடம் பூமி; முழுதும் முழுவதையும்; அளந்த அளந்தவனுமான; எம் அடிகள் தம் பெருமானின்; கோயில் இருப்பிடம்; கணி காலம் உணர்த்தும் வகையில்; வளர் வளர்ந்துள்ள; வேங்கை மூங்கில் மரங்களையுடைய; நெடு விசாலமான; நிலம்அதனில் பூமியில்; குறவர் தம் குறவர்கள் தங்கள்; கவணிடை கல்லெறியும் கயிற்றில்; துரந்த வைத்து உண்டிவில் எறிந்த; மணி வளர் மணிகளின் ஒளி; சாரல் மிகுதியையுடைய சாரல்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா