PT 9.8.4

தாடகையை வதைத்தவர் இடம் மாலிருஞ்சோலை

1821 சூர்மயிலாயபேய்முலைசுவைத்துச்
சுடுசரமடுசிலைத்துரந்து *
நீர்மையிலாததாடகைமாள
நினைந்தவர்மனம்கொண்டகோயில் *
கார்மலிவேங்கைகோங்கலர்புறவில்
கடிமலர்குறிஞ்சியின்நறுந்தேன் *
வார்புனல்சூழ்தண்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1821 cūrmaiyil āya pey mulai cuvaittuc *
cuṭu caram aṭu cilait turantu *
nīrmai ilāta tāṭakai māl̤a *
niṉaintavar maṉam kŏṇṭa koyil- **
kār mali veṅkai koṅku alar puṟavil *
kaṭi malark kuṟiñciyiṉ naṟun teṉ *
vār puṉal cūzh taṇ māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-4

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1821. The lord who drank milk from the breasts of Putanā, and shot fearful arrows at the evil Thādagai and killed her stays in the temple in Thirumālirunjolai surrounded with cool flowing water where sweet honey from fragrant kurinji flowers drips on the blossoms of vengai trees over which clouds float. O ignorant heart, come let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! மட நெஞ்சே!; சூர்மையில் ஆய கொடிய ஸ்வபாவமுடைய; பேய் முலை பூதனையின்; சுவைத்து பாலை சுவைத்தவரும்; அடு கொல்லும் திறமை வாய்ந்த; சுடு நெருப்பை உமிழும்; சரம் அம்புகளை; சிலை வில்லிலே; துரந்து தொடுத்து; நீர்மை இலாத இரக்கமற்ற; தாடகை மாள தாடகைமுடியும்படி; நினைந்தவர் திருவுள்ளம்பற்றிய; மனம் கொண்ட பெருமான் விரும்பி; கோயில் இருக்குமிடம்; கார் மேகமண்டலம்வரை; மலி ஓங்கிவளர்ந்த; வேங்கை மூங்கில் மரங்களும்; கோங்கு கோங்கு மரங்களின்; அலர் மலர்; புறவில் சோலைகளில்; கடிமலர் மணம் மிக்க; குறிஞ்சியின் குறிஞ்சியின்; நறுந் தேன் இனிய தேனின்; வார் புனல் குளிர்ந்த; சூழ் தண் பிரவாஹம் சூழ்ந்த; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா