PT 9.8.2

பாம்பணைப் பள்ளிகொண்டவன் கோயில் இது

1819 இண்டையும்புனலும்கொண்டிடையின்றி
எழுமினோதொழுதுமென்று * இமையோர்
அண்டரும்பரவஅரவணைத்துயின்ற
சுடர்முடிக்கடவுள்தம்கோயில் *
விண்டலர்தூளிவேய்வளர்புறவில்
விரைமலர்க்குறிஞ்சியின்நறுந்தேன் *
வண்டமர்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1819 ## iṇṭaiyum puṉalum kŏṇṭu iṭai iṉṟi *
ĕzhumiṉo tŏzhutum ĕṉṟu * imaiyor
aṇṭarum parava aravaṇait tuyiṉṟa *
cuṭar muṭik kaṭavul̤-tam koyil- **
viṇṭu alar tūl̤i vey val̤ar puṟavil *
virai malark kuṟiñciyiṉ naṟun teṉ *
vaṇṭu amar cāral māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-2

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1819. Thirumālirunjolai is the temple where the gods worship, telling all in the sky, “Come and let us go and worship the lord, ” carrying garlands and pure water and going to praise our lord adorned with shining crowns and resting on a snake bed. There bees drink sweet honey from the fragrant kurinji flowers blooming in the forests and bamboo plants growing on the sloping hills split apart and throw out pearls. O ignorant heart, come, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான மனமே!; இண்டையும் பூமாலையையும்; புனலும் நீரையும்; கொண்டு கொண்டு; இடை இன்றி இடைவிடாமல்; என்று இமையோர் நித்யஸூரிகளும்; அண்டரும் பரவ தேவர்களும் நாமும்; தொழுதும் தொழுது; எழுமினோ எழுவதற்கு ஏற்ப; அரவணைத் ஆதிசேஷன் மேல்; துயின்ற துயின்ற; சுடர் முடி ஒளிமயமான கிரீடமணிந்த; கடவுள் தம் பெருமானின்; கோயில் கோயிலான; விண்டு விரியாத மலர்; அலர் தூளி துகள்களையுடைய; வேய் வளர்ந்த மூங்கில்; வளர் மரங்களோடும்; புறவில் சுற்றுப்பக்கங்களில்; விரை மலர் மணம் மிக்க; குறிஞ்சியின் குறிஞ்சி மலரின்; நறுந் தேன் இனிய தேன் பருகும்; வண்டு அமர் வண்டுகள் வாழும்; சாரல் சாரலையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா