PT 9.8.7

மூட மனமே! மாலிருஞ்சோலையை வணங்கலாம்

1824 தேனுகனாவிபோயுகஅங்கு ஓர்
செழுந்திரள்பனங்கனியுதிர *
தானுகந்தெறிந்ததடங்கடல்வண்ணர்
எண்ணிமுன்இடங்கொண்டகோயில் *
வானகச்சோலைமரதகச்சாயல்
மாமணிக்கல்லதர்நிறைந்து *
மானுகர்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1824 teṉukaṉ āvi poy uka * aṅku or
cĕzhun tiral̤ paṉaṅkaṉi utira *
tāṉ ukantu ĕṟinta taṭaṅ kaṭal vaṇṇar *
ĕṇṇi muṉ iṭam kŏṇṭa koyil- **
vāṉakac colai maratakac cāyal *
mā maṇik kal atar nuzhaintu *
māṉ nukar cāral māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-7

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1824. The dark ocean-colored one who threw ripe palm fruits at the Asuran Thenugasuran and killed him stays in the temple in Thirumālirunjolai filled with flourishing emerald-colored groves where deer walk on stony paths and graze on the grass on the slopes. O ignorant heart, come let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான மனமே!; தேனுகன் தேநுகாஸுரனின்; ஆவி போய் உக உயிர் மாள; அங்கு ஓர் அங்கு அழகாக; செழுந் திரள் திரண்டிருந்த; பனங்கனி உதிர பனம்பழங்கள் உதிர; எறிந்த அவனை பனங்கனிமேல் எறிந்து; தான் உகந்து தான் உகந்த பெருமான்; தடங் கடல் பெரும் கடல் போன்ற; வண்ணர் நிறமுடைய எம்பெருமான்; எண்ணி முன்பு இதுவே; முன் இடம் பாங்கான இடம்; கொண்ட என்று எண்ணி; கோயில் இருந்த இடம்; மரகதச் சாயல் மரகத ஒளியையுடைய நிறைய மான்கள்; வானக ஆகாசத்தளவும் ஓங்கி வள்ர்ந்த; சோலை சோலைகளின்; மா மணிக் பெரும்பாறை; கல் அதர் வழியாகப் புகுந்து; நுகர் சாரல் மேயும் சாரல்களையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா