Chapter 7

Thirunaraiyur 4 - (ஆளும் பணியும்)

திருநறையூர் 4
Thirunaraiyur 4 - (ஆளும் பணியும்)
In these verses, the āzhvār sings the glories of the Lord Nambi, who resides in the temple at Thirunaraiyur.
திருநறையூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நம்பியின் பெருமைகளை இங்கே ஆழ்வார் பாடியுள்ளார்.
Verses: 1508 to 1517
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: செந்திருத்தி
Recital benefits: Will not get affected by the results of karma and will rule the world of Gods
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 6.7.1

1508 ஆளும்பணியும்அடியேனைக்கொண்டான் * விண்டநிசாசரரை
தோளும்தலையும்துணிவெய்தச் சுடுவெஞ்சிலைவாய்ச்சரந்துரந்தான் *
வேளும்சேயும்அனையாரும் வேற்கணாரும்பயில்வீதி *
நாளும்விழவினொலியோவா நறையூர்நின்றநம்பியே. (2)
1508 ## ஆளும் பணியும் அடியேனைக்
கொண்டான் * விண்ட நிசாசரரை *
தோளும் தலையும் துணிவு எய்தச் *
சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான் **
வேளும் சேயும் அனையாரும் *
வேல் கணாரும் பயில் வீதி *
நாளும் விழவின் ஒலி ஓவா *
நறையூர் நின்ற நம்பியே 1
1508 ## āl̤um paṇiyum aṭiyeṉaik
kŏṇṭāṉ * viṇṭa nicācararai *
tol̤um talaiyum tuṇivu ĕytac *
cuṭu vĕm cilaivāyc caram turantāṉ ** -
vel̤um ceyum aṉaiyārum *
vel-kaṇārum payil vīti *
nāl̤um vizhaviṉ ŏli ovā *
naṟaiyūr niṉṟa nampiye-1

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1508. The Nambi who shot arrows from his cruel bow and cut off the arms and heads of the Rākshasas in Lankā rules me and made me his devotee, ordering me to serve him. He stays in Thirunaraiyur where heroic men, handsome as Murugan and Kāma, and women with spear-like eyes walk on the streets and the noise of festivals does not stop all day.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்ட நிசாசரரை எதிர்த்த அசுரர்களின்; தோளும் தோள்களும்; தலையும் தலைகளும்; துணிவும் எய்த துண்டாம்படியாக; சுடு வெஞ் மிகக்கொடூரமான; சிலை வாய் வில்லிலிருந்து; சரம் அம்புகளை; துரந்தான் பிரயோகித்த பெருமான் யாரெனில்; வேளும் சேயும் மன்மதனும் முருகனும்; அனையாரும் அனைவரும்; வேல் வேல்போன்ற; கணாரும் கண்களையுடைய பெண்களும்; பயில் வீதி வாழும் வீதிகளையுடையதும்; நாளும் விழவின் விழாக்களின் உத்சவங்களும்; ஒலி ஓவா ஆரவாரம் தொடர்ந்திருக்கும்; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே; அடியேனை என்னையும்; ஆளும் பணியும் என் பணியையும்; கொண்டான் ஏற்றுகொண்ட பெருமான்

PT 6.7.2

1509 முனியாய்வந்துமூவெழுகால் முடிசேர்மன்னருடல்துணிய *
தனிவாய்மழுவின்படையாண்டதாரார்தோளான், வார்புறவில் *
பனிசேர்முல்லைபல்லரும்பப் பானல்ஒருபால்கண்காட்ட *
நனிசேர்கமலம்முகங்காட்டும் நறையூர்நின்றநம்பியே.
1509 முனி ஆய் வந்து மூவெழுகால் *
முடி சேர் மன்னர் உடல் துணிய *
தனி வாய் மழுவின் படை ஆண்ட *
தார் ஆர் தோளான் வார் புறவில் **
பனி சேர் முல்லை பல் அரும்பப் *
பானல் ஒருபால் கண் காட்ட *
நனி சேர் கமலம் முகங் காட்டும் *
நறையூர் நின்ற நம்பியே 2
1509 muṉi āy vantu mūvĕzhukāl *
muṭi cer maṉṉar uṭal tuṇiya *
taṉi vāy mazhuviṉ paṭai āṇṭa *
tār ār tol̤āṉ-vār puṟavil **
paṉi cer mullai pal arumpap *
pāṉal ŏrupāl kaṇ kāṭṭa *
naṉi cer kamalam mukaṅ kāṭṭum *
naṟaiyūr niṉṟa nampiye-2

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1509. The Nambi with a thulasi garland on his chest who took the form of BalaRāman, carried a sharp mazhu weapon and killed many crowned kings over many ages stays in Thirunaraiyur where mullai flowers dripping with dew bloom like the teeth of women and dark kuvalai blossoms bloom like their eyes, and the lovely lotuses bloom like their faces.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முனியாய் பரசுராமனாய்; வந்து அவதரித்து; மூவெழுகால் இருபத்தொரு முறை; முடி சேர் மன்னர் க்ஷத்ரிய அரசர்கள்; உடல் துணிய மாள; தனிவாய் ஒப்பற்ற கூர்மையான; மழுவின் கோடாலியை; படை ஆயுதமாக; ஆண்ட கொண்டவனும்; தாரார் மாலையணிந்த; தோளான் தோள்களையுடைய பெருமான்; வார் புறவில் அகன்ற சோலையின்; ஒருபால் ஒருபுறத்தில்; பனி சேர் குளிர்ந்த; முல்லை முல்லைப் பூக்கள்; பல் பெண்களின் பற்கள் போன்ற; அரும்ப அரும்புடையதும்; பானல் நெய்தல் போன்ற பானல் பூக்கள்; கண் பெண்களின் கண்களை; காட்ட போன்றும்; நனி சேர் பெருமையுள்ள; கமலம் தாமரைப் பூக்கள்; முகம் பெண்களின் முகம்; காட்டும் காட்டுவது போன்று இருக்கும்; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!

PT 6.7.3

1510 தெள்ளார்கடல்வாய் விடவாயசினவாளரவில்துயிலமர்ந்து *
துள்ளாவருமான்விழ வாளிதுரந்தான், இரந்தான்மாவலிமண் *
புள்ளார்புறவில்பூங்காவி புலங்கொள்மாதர்கண்காட்ட *
நள்ளார்கமலம்முகங்காட்டும் நறையூர்நின்றநம்பியே.
1510 தெள் ஆர் கடல்வாய் விட வாய *
சின வாள் அரவில் துயில் அமர்ந்து *
துள்ளா வரு மான் விழ வாளி
துரந்தான் * இரந்தான் மாவலி மண் **
புள் ஆர் புறவில் பூங் காவி *
புலங்கொள் மாதர் கண் காட்ட *
நள் ஆர் கமலம் முகம் காட்டும் *
நறையூர் நின்ற நம்பியே 3
1510 tĕl̤ ār kaṭalvāy viṭa vāya *
ciṉa vāl̤ aravil tuyil amarntu *
tul̤l̤ā varu māṉ vizha vāl̤i
turantāṉ * irantāṉ māvali maṇ ** -
pul̤ ār puṟavil pūṅ kāvi *
pulaṅkŏl̤ mātar kaṇ kāṭṭa *
nal̤ ār kamalam mukam kāṭṭum *
naṟaiyūr niṉṟa nampiye-3

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1510. Our lord Nambi who rests on the shining snake Adisesha on the clear milky ocean shot his arrow and killed Marisan when the Raksasan came in the form of a swiftly running deer and went to king Mahabali as a dwarf, asked for three feet of land, and measured the world and the sky with his two feet. He stays in Thirunaraiyur where in the groves filled with birds, kāvi flowers bloom like the eyes of beautiful women and lotuses bloom like their faces.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெள் ஆர் தெளிந்த; கடல் வாய் பாற்கடலில்; விட வாய் விஷம் கக்கும்; சின சீற்றமுடைய; வாள் அரவில் ஒளியுள்ள ஆதிசேஷன் மீது; துயில் அமர்ந்து சயனித்தவனும்; துள்ளா துள்ளிவிளையாடிக்கொண்டு; வரு மான் வந்த மாய மான்; விழ வாளி மாளும் படி அம்பு; துரந்தான் எய்தவனுமான; இரந்தான் மஹாபலியினிடம்; மாவலி மண் பூமி யாசித்த பெருமான்; புள் ஆர் பட்சிகள் நிறைந்த; புறவில் சோலைகளில்; பூங்காவி அழகிய செங்கழுநீர்ப் பூக்கள்; புலன் கொள் மாதர் அழகிய பெண்களின்; கண் காட்ட கண்களைப் போன்றும்; நள் ஆர் இதழ்ச் செறிவையுடைய; கமலம் தாமரைப்பூக்கள்; முகம் அவர்களது முகங்கள்; காட்டும் போன்றும் இருக்கும்; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!

PT 6.7.4

1511 ஓளியாவெண்ணெயுண்டானென்று உரலோடாய்ச்சியொண்கயிற்றால் *
விளியாஆர்க்கஆப்புண்டு விம்மியழுதான், மென்மலர்மேல் *
களியாவண்டுகள்ளுண்ணக் காமர்தென்றல்அலர்தூற்ற *
நளிர்வாய்முல்லைமுறுவலிக்கும் நறையூர்நின்றநம்பியே.
1511 ஒளியா வெண்ணெய் உண்டான் என்று *
உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் *
விளியா ஆர்க்க ஆப்புண்டு *
விம்மி அழுதான் மென் மலர்மேல் **
களியா வண்டு கள் உண்ண *
காமர் தென்றல் அலர் தூற்ற *
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் *
நறையூர் நின்ற நம்பியே 4
1511 ŏl̤iyā vĕṇṇĕy uṇṭāṉ ĕṉṟu *
uraloṭu āycci ŏṇ kayiṟṟāl *
vil̤iyā ārkka āppuṇṭu *
vimmi azhutāṉ-mĕṉ malarmel **
kal̤iyā vaṇṭu kal̤ uṇṇa *
kāmar tĕṉṟal alar tūṟṟa *
nal̤irvāy mullai muṟuvalikkum *
naṟaiyūr niṉṟa nampiye-4

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1511. When our Nambi ate the butter that Yashodā hid she was angry and tied him with a strong rope to a mortar and he sobbed, crying and crying. He stays in Thirunaraiyur where a cool breeze moistens the mullai flowers, bees are intoxicated as they drink honey and the opening jasmine flowers smile like lovely women.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒளியா மறைந்து நின்று; வெண்ணெய் வெண்ணெயை; உண்டான் என்று உண்டான் என்று; உரலோடு ஆய்ச்சி உரலோடு ஆய்ச்சி; ஒண் கயிற்றால் அழகிய கயிற்றால்; விளியா ஆர்க்க கோபித்து கட்ட; ஆப்புண்டு விம்மி கட்டுண்டு விம்மி; அழுதான் அழுத பெருமான்; மென் மென்மையான; மலர் மேல் பூக்களின் மேல் அமர்ந்து; களியா வண்டு களித்து வண்டுகள்; கள் உண்ண தேன் பருக; காமர் தென்றல் தென்றல் காற்று; அலர் தூற்ற புஷ்பங்களை வீசியிறைக்க; நளிர்வாய் பெருமையுள்ள முகத்தையுடைய; முல்லை முல்லைப் பூக்கள்; முறுவலிக்கும் புன்சிரிப்புச் செய்யும்; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!

PT 6.7.5

1512 வில்லார்விழவில்வடமதுரைவிரும்பி விரும்பாமல்லடர்த்து *
கல்லார்திரள்தோள்கஞ்சனைக்காய்ந்தான் பாய்ந்தான்காளியன்மேல் *
சொல்லார்சுருதிமுறையோதிச் சோமுச்செய்யும்தொழிலினோர் *
நல்லார்மறையோர்பலர்வாழும்நறையூர்நின்றநம்பியே.
1512 வில் ஆர் விழவில் வட மதுரை *
விரும்பி விரும்பா மல் அடர்த்து *
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்
காய்ந்தான் * பாய்ந்தான் காளியன்மேல் **
சொல் ஆர் சுருதி முறை ஓதிச் *
சோமுச் செய்யும் தொழிலினோர் *
நல்லார் மறையோர் பலர் வாழும் *
நறையூர் நின்ற நம்பியே 5
1512 vil ār vizhavil vaṭa maturai *
virumpi virumpā mal aṭarttu *
kal ār tiral̤ tol̤ kañcaṉaik
kāyntāṉ * pāyntāṉ kāl̤iyaṉmel ** -
cŏl ār curuti muṟai otic *
comuc cĕyyum tŏzhiliṉor *
nallār maṟaiyor palar vāzhum *
naṟaiyūr niṉṟa nampiye-5

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1512. Our lord who went to northern Madhura, joined the festival of the bow competition, fought with the wrestlers there and defeated them, and who jumped into the pond and danced on the heads of Kālingan stays in Thirunaraiyur where many good Vediyars recite the divine Vedās well and perform Soma sacrifices.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வட மதுரை வட மதுரையில்; வில் ஆர் கம்ஸன் நடத்தின வில்; விழவில் விழாவில்; விரும்பி விரும்பி கலந்து கொள்ளப் போன கண்ணன்; விரும்பா எதிரிகளான; மல் அடர்த்து மல்லர்களை முடித்து; கல் ஆர் மலை போன்று; திரள் தோள் திரண்ட தோள்களையுடைய; கஞ்சனை கம்சனை; காய்ந்தான் சீறி கொன்றவனும்; காளியன் மேல் காளியன் மேல்; பாய்ந்தான் பாய்ந்தவனும்; சொல் ஆர் குற்றமற்ற சொற்களையுடைய; சுருதி வேதங்களை; முறை ஓதி முறையாக ஓதி; சோமுச் செய்யும் சோமயாகம் செய்யும்; தொழிலினோர் தொழிலையுடைய; நல்லார் நல்லவர்களான; மறையோர் வைதிகர்கள்; பலர் வாழும் பலர் வாழுமிடமான; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!

PT 6.7.6

1513 வள்ளிகொழுநன்முதலாய மக்களோடுமுக்கணான்
வெள்கியோட * விறல்வாணன்வியன்தோள்வனத்தைத் துணித்துகந்தான் *
பள்ளிகமலத்திடைப்பட்ட பகுவாயலவன்முகம்நோக்கி *
நள்ளியூடும்வயல்சூழ்ந்த நறையூர்நின்றநம்பியே.
1513 வள்ளி கொழுநன் முதலாய *
மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட * விறல் வாணன் *
வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான் **
பள்ளி கமலத்திடைப் பட்ட *
பகு வாய் அலவன் முகம் நோக்கி *
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த *
நறையூர் நின்ற நம்பியே 6
1513 val̤l̤i kŏzhunaṉ mutalāya *
makkal̤oṭu mukkaṇāṉ
vĕl̤ki oṭa * viṟal vāṇaṉ *
viyaṉ tol̤ vaṉattait tuṇittu ukantāṉ ** -
pal̤l̤i kamalattiṭaip paṭṭa *
paku vāy alavaṉ mukam nokki *
nal̤l̤i ūṭum vayal cūzhnta *
naṟaiyūr niṉṟa nampiye-6

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1513. Our Nambi fought with the heroic Vānāsuran and cut off his thousand strong arms when Murugan, the husband of Valli, Shivā, the three-eyed god, and the other warriors came to help Vānāsuran in battle, lost the war fighting with him and, ashamed, retreated from the battlefield. Our lord stays in Thirunaraiyur surrounded with fields where a female crab looks at the face and large mouth of a male crab, caught in a lotus plant and starts a love fight with him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வள்ளி வள்ளி; கொழு நன் வள்ளி கணவன் முருகன்; முதலாய மக்களோடு முதலானவர்களோடு; முக்கணான் சிவன் போரில் தோற்றுபோய்; வெள்கி வெட்கமடைந்து; ஓட ஓடிப்போக; விறல் பலிஷ்டனான; வாணன் பாணாஸுரனுடைய; வியன் தோள் தோள்களாகிய; வனத்தை வனத்தை; துணித்து அறுத்து; உகந்தான் உகந்த பெருமான்; பள்ளி கமலத்து தாமரைப்பூவிலே; இடை போய்ப் படுத்துக்கொண்டு; பட்ட திரும்பிவந்த; பகு வாய் பெரிய வாயையுடைய; அலவன் ஆண் நண்டின்; நள்ளி முகம் முகத்தை பெண் நண்டானது; நோக்கி நோக்கி; ஊடும் சிறு பிணக்குடன் உள்ளே சென்ற; வயல் சூழ்ந்த வயல்களினால் சூழ்ந்த; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே

PT 6.7.7

1514 மிடையாவந்தவேல்மன்னர்வீய விசயன்தேர்கடவி *
குடையாவரையொன்றெடுத்துஆயர்கோவாய்நின்றான் கூராழிப்
படையான் * வேதம்நான்குஐந்துவேள்வி அங்கமாறு இசையேழ் *
நடையாவல்லஅந்தணர்வாழ் நறையூர்நின்றநம்பியே.
1514 மிடையா வந்த வேல் மன்னர்
வீய * விசயன் தேர் கடவி *
குடையா வரை ஒன்று எடுத்து * ஆயர்
கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
படையான் ** வேதம் நான்கு ஐந்து
வேள்வி * அங்கம் ஆறு இசை ஏழ் *
நடையா வல்ல அந்தணர் வாழ் *
நறையூர் நின்ற நம்பியே 7
1514 miṭaiyā vanta vel maṉṉar
vīya * vicayaṉ ter kaṭavi *
kuṭaiyā varai ŏṉṟu ĕṭuttu * āyar
-ko āy niṉṟāṉ kūr āzhip
paṭaiyāṉ ** -vetam nāṉku aintu
vel̤vi * aṅkam āṟu icai ezh *
naṭaiyā valla antaṇar vāzh *
naṟaiyūr niṉṟa nampiye-7

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1514. The lord with a sharp discus who drove the chariot for Arjunā and destroyed the kings when they came to fight with spears in the Bhārathā war and as the king of the cowherds carried Govardhanā mountain as an umbrella to protect the cows and cowherds from the storm stays in Thirunaraiyur where Vediyars recite the four Vedās, perform the five sacrifices, recite the six Upanishads and sing the seven kinds of music.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மிடையா வந்த கூட்டங்கூட்டமாக வந்த; வேல் வேல்படைகளையுடைய; மன்னர் வீய அரசர்கள் அழியும்படி; விசயன் அர்ஜுனனுடைய; தேர் கடவி தேரை நடத்தினவனும்; ஒன்று வரை ஒரு மலையை; குடையா எடுத்து குடையாக எடுத்து; ஆயர் இடையர்களுக்கு; கோ ஆய் நின்றான் ரக்ஷகனாய் நின்றவனும்; கூர் ஆழி கூரிய சக்கரத்தை; படையான் ஆயுதமாக உடையவனும்; வேதம் நான்கு நான்கு வேதம்; ஐந்து வேள்வி ஐந்து வேள்வி; அங்கம் ஆறு ஆறு அங்கம்; இசைஏழ் ஏழ்ஸவரங்கள் ஆகியவைகளை; நடையா எப்போதும் நடத்த; வல்ல வல்லவர்களான; அந்தணர் வாழ் வைதிகர்கள் வாழும்; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!

PT 6.7.8

1515 பந்தார்விரலாள்பாஞ்சாலி கூந்தல்முடிக்கப், பாரதத்து *
கந்தார்களிற்றுக்கழல்மன்னர்கலங்கச் சங்கம்வாய்வைத்தான் *
செந்தாமரைமேலயனோடு சிவனும் அனையபெருமையோர் *
நந்தாவண்கைமறையோர்வாழ் நறையூர்நின்றநம்பியே.
1515 பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி *
கூந்தல் முடிக்க பாரதத்து *
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர்
கலங்கச் * சங்கம் வாய் வைத்தான் **
செந்தாமரைமேல் அயனோடு *
சிவனும் அனைய பெருமையோர் *
நந்தா வண் கை மறையோர் வாழ் *
நறையூர் நின்ற நம்பியே 8
1515 pantu ār viralāl̤ pāñcāli *
kūntal muṭikka pāratattu *
kantu ār kal̤iṟṟuk kazhal maṉṉar
kalaṅkac * caṅkam vāy vaittāṉ ** -
cĕntāmaraimel ayaṉoṭu *
civaṉum aṉaiya pĕrumaiyor *
nantā vaṇ kai maṟaiyor vāzh *
naṟaiyūr niṉṟa nampiye-8

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1515. When Panjali who plays ball with her hands had promised that she would tie her hair up until the Kauravās lost the Bhārathā war, Kannan went to fight, blew the conch on the battlefield, terrified the ankleted Kauravās as they rode on elephants and defeated them. Our Nambi stays in Thirunaraiyur where Vediyars with hands that never stop giving, are as great as Nānmuhan on his beautiful lotus and the mighty Shivā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பந்து ஆர் பந்து விளையாடும்; விரலாள் விரல்களையுடைய; பாஞ்சாலி த்ரெளபதி; கூந்தல் முடிக்க கூந்தல் முடிக்க; பாரதத்து பாரத; கந்து ஆர் போரில் மதஜலத்தின் துர்நாற்றத்தாலே; களிற்று யானைகளின் மேலேறியிருப்பவர்களும்; கழல் வீரக்கழலையுடைய; மன்னர் கலங்க அரசர்கள் மதி கலங்கும்படி; சங்கம் சங்கை; வாய் வைத்தான் ஊதிய பெருமான்; செந்தாமரை செந்தாமரை; மேல் மேல் தோன்றிய; அயனோடு பிரமனோடும்; சிவனும் அனைய சிவனோடும் ஒத்த; பெருமையோர் பெருமையுடைய; நந்தா அழியாத; வண் கை உதாரமனப்பான்மையுடைய; மறையோர் வாழ் வைதிகர்கள் வாழும்; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!

PT 6.7.9

1516 ஆறும்பிறையும்அரவமும்அடம்பும் சடைமேலணிந்து * உடலம்
நீறும்பூசியேறூரும்இறையோன் சென்றுகுறையிரப்ப *
மாறொன்றில்லாவாசநீர் வரைமார்வகலத்தளித்துகந்தான் *
நாறும்பொழில்சூழ்ந்தழகாய நறையூர்நின்றநம்பியே.
1516 ஆறும் பிறையும் அரவமும் *
அடம்பும் சடைமேல் அணிந்து * உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும் *
இறையோன் சென்று குறை இரப்ப **
மாறு ஒன்று இல்லா வாச நீர் *
வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான் *
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய *
நறையூர் நின்ற நம்பியே 9
1516 āṟum piṟaiyum aravamum *
aṭampum caṭaimel aṇintu * uṭalam
nīṟum pūci eṟu ūrum *
iṟaiyoṉ cĕṉṟu kuṟai irappa **
māṟu ŏṉṟu illā vāca nīr *
varai mārvu akalattu al̤ittu ukantāṉ * -
nāṟum pŏzhil cūzhntu azhaku āya *
naṟaiyūr niṉṟa nampiye-9

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1516. Shivā the bull rider, with his matted hair adorned with the crescent moon and the flowing Ganges, wearing a snake as his ornament and a kondrai garland, his body smeared with vibhuti ?? went to our god and asked him to remove the curse that Nānmuhan had given him. Nambi, the god of Thirunaraiyur - surrounded with fragrant beautiful groves, took blood from his mountain-like chest, poured it into Nānmuhan’s skull that was stuck to Shivā’s hand and made it fall.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆறும் கங்கை நதியையும்; பிறையும் சந்திரனையும்; அரவமும் பாம்பையும்; அடம்பும் அடம்பப் பூவையும்; சடைமேல் அணிந்து சடைமேல் அணிந்து; உடலம் நீறும் பூசி உடலில் விபூதி பூசி; ஏறு ஊரும் ரிஷபத்தின் மேலேறி; இறையோன் வரும் சிவன்; சென்று வந்து தனது பிரமஹத்தி சாபம்; குறை விடு படுமாறு; இரப்ப பிரார்த்திக்க; வரை மார்வு மலைபோன்ற; அகலத்து மார்பிலிருந்து; மாறு ஒன்று ஒப்பற்ற மணம் மிக்க; இல்லா வாச நீர் வியர்வையை; அளித்து கொடுத்து; உகந்தான் உகந்த பெருமான்; நாறும் நறுமணம்மிக்க; பொழில் சோலைகளால்; சூழ்ந்து அழகு ஆய சூழ்ந்த அழகிய; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!

PT 6.7.10

1517 நன்மையுடையமறையோர்வாழ் நறையூர்நின்றநம்பியை *
கன்னிமதில்சூழ்வயல்மங்கைக் கலியனொலிசெய்தமிழ்மாலை *
பன்னிஉலகில்பாடுவார் பாடுசாராபழவினைகள் *
மன்னிஉலகம்ஆண்டுபோய் வானோர்வணங்கவாழ்வாரே. (2)
1517 ## நன்மை உடைய மறையோர் வாழ் *
நறையூர் நின்ற நம்பியை *
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் *
கலியன் ஒலிசெய் தமிழ் மாலை **
பன்னி உலகில் பாடுவார் *
பாடு சாரா பழ வினைகள் *
மன்னி உலகம் ஆண்டு போய் *
வானோர் வணங்க வாழ்வாரே 10
1517 ## naṉmai uṭaiya maṟaiyor vāzh *
naṟaiyūr niṉṟa nampiyai *
kaṉṉi matil̤ cūzh vayal maṅkaik *
kaliyaṉ ŏlicĕy tamizh-mālai **
paṉṉi ulakil pāṭuvār *
pāṭu cārā pazha viṉaikal̤ *
maṉṉi ulakam āṇṭu poy *
vāṉor vaṇaṅka vāzhvāre-10

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1517. Kaliyan the chief of Thirumangai surrounded with fields and strong walls composed a garland of Tamil pāsurams praising Nambi, the lord of Thirunaraiyur where good Vediyars recite the Vedās. If devotees sing these pāsurams and worship the lord, they will not experience the results of their karmā. They will rule this world, go to the spiritual world and be worshiped by the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நன்மை பயனை எதிர்பாரமல்; உடைய நன்மை செய்யும்; மறையோர் வாழ் வைதிகர்கள் வாழும்; நறையூர் நறையூர்; நின்ற நம்பியை நின்ற நம்பியைக் குறித்து; கன்னி மதிள் அழிவில்லாத மதிள்களாலும்; வயல் சூழ் வயல்களாலும் சூழ்ந்த; மங்கை திருமங்கைக்குத் தலைவனான; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலிசெய் அருளிச்செய்த; தமிழ் மாலை தமிழ்ப் பாசுரங்களை; பன்னி உலகில் பரிசீலித்து; பாடுவார் பாடுபவர்களின்; பழ வினைகள் பழைய தீவினைகள்; பாடு சாரா அணுகாது; மன்னி நெடுநாள்; உலகம் இவ்வுலகில் வாழ்ந்திருந்து; ஆண்டு போய் ஆண்டு பின்பு; வானோர் வணங்க வானோர் ஆதரிக்கும்படி; வாழ்வாரே வாழப்பெறுவர்