PT 6.7.2

நறையூர் நம்பிதான் பரசுராமன்

1509 முனியாய்வந்துமூவெழுகால் முடிசேர்மன்னருடல்துணிய *
தனிவாய்மழுவின்படையாண்டதாரார்தோளான், வார்புறவில் *
பனிசேர்முல்லைபல்லரும்பப் பானல்ஒருபால்கண்காட்ட *
நனிசேர்கமலம்முகங்காட்டும் நறையூர்நின்றநம்பியே.
1509 muṉi āy vantu mūvĕzhukāl *
muṭi cer maṉṉar uṭal tuṇiya *
taṉi vāy mazhuviṉ paṭai āṇṭa *
tār ār tol̤āṉ-vār puṟavil **
paṉi cer mullai pal arumpap *
pāṉal ŏrupāl kaṇ kāṭṭa *
naṉi cer kamalam mukaṅ kāṭṭum *
naṟaiyūr niṉṟa nampiye-2

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1509. The Nambi with a thulasi garland on his chest who took the form of BalaRāman, carried a sharp mazhu weapon and killed many crowned kings over many ages stays in Thirunaraiyur where mullai flowers dripping with dew bloom like the teeth of women and dark kuvalai blossoms bloom like their eyes, and the lovely lotuses bloom like their faces.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முனியாய் பரசுராமனாய்; வந்து அவதரித்து; மூவெழுகால் இருபத்தொரு முறை; முடி சேர் மன்னர் க்ஷத்ரிய அரசர்கள்; உடல் துணிய மாள; தனிவாய் ஒப்பற்ற கூர்மையான; மழுவின் கோடாலியை; படை ஆயுதமாக; ஆண்ட கொண்டவனும்; தாரார் மாலையணிந்த; தோளான் தோள்களையுடைய பெருமான்; வார் புறவில் அகன்ற சோலையின்; ஒருபால் ஒருபுறத்தில்; பனி சேர் குளிர்ந்த; முல்லை முல்லைப் பூக்கள்; பல் பெண்களின் பற்கள் போன்ற; அரும்ப அரும்புடையதும்; பானல் நெய்தல் போன்ற பானல் பூக்கள்; கண் பெண்களின் கண்களை; காட்ட போன்றும்; நனி சேர் பெருமையுள்ள; கமலம் தாமரைப் பூக்கள்; முகம் பெண்களின் முகம்; காட்டும் காட்டுவது போன்று இருக்கும்; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!