PT 6.7.7

நறையூர் நம்பிதான் பார்த்தசாரதி

1514 மிடையாவந்தவேல்மன்னர்வீய விசயன்தேர்கடவி *
குடையாவரையொன்றெடுத்துஆயர்கோவாய்நின்றான் கூராழிப்
படையான் * வேதம்நான்குஐந்துவேள்வி அங்கமாறு இசையேழ் *
நடையாவல்லஅந்தணர்வாழ் நறையூர்நின்றநம்பியே.
1514 miṭaiyā vanta vel maṉṉar
vīya * vicayaṉ ter kaṭavi *
kuṭaiyā varai ŏṉṟu ĕṭuttu * āyar
-ko āy niṉṟāṉ kūr āzhip
paṭaiyāṉ ** -vetam nāṉku aintu
vel̤vi * aṅkam āṟu icai ezh *
naṭaiyā valla antaṇar vāzh *
naṟaiyūr niṉṟa nampiye-7

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1514. The lord with a sharp discus who drove the chariot for Arjunā and destroyed the kings when they came to fight with spears in the Bhārathā war and as the king of the cowherds carried Govardhanā mountain as an umbrella to protect the cows and cowherds from the storm stays in Thirunaraiyur where Vediyars recite the four Vedās, perform the five sacrifices, recite the six Upanishads and sing the seven kinds of music.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மிடையா வந்த கூட்டங்கூட்டமாக வந்த; வேல் வேல்படைகளையுடைய; மன்னர் வீய அரசர்கள் அழியும்படி; விசயன் அர்ஜுனனுடைய; தேர் கடவி தேரை நடத்தினவனும்; ஒன்று வரை ஒரு மலையை; குடையா எடுத்து குடையாக எடுத்து; ஆயர் இடையர்களுக்கு; கோ ஆய் நின்றான் ரக்ஷகனாய் நின்றவனும்; கூர் ஆழி கூரிய சக்கரத்தை; படையான் ஆயுதமாக உடையவனும்; வேதம் நான்கு நான்கு வேதம்; ஐந்து வேள்வி ஐந்து வேள்வி; அங்கம் ஆறு ஆறு அங்கம்; இசைஏழ் ஏழ்ஸவரங்கள் ஆகியவைகளை; நடையா எப்போதும் நடத்த; வல்ல வல்லவர்களான; அந்தணர் வாழ் வைதிகர்கள் வாழும்; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!