ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத –நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய — ஆகதோ மதுராம் புரீம் சர்வ நியாந்தா கிருஷ்ணனாய் பிறந்து நியாம்யனாய் இருந்த வ்ருத்தாந்தம் –
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள் கயிற்றால் விளியா வார்க்க வாப்புண்டு விம்மி யழுதான் மென் மலர் மேல் கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே