PT 6.7.9

சிவபிரானின் குறை தீர்த்தவன் இவன்

1516 ஆறும்பிறையும்அரவமும்அடம்பும் சடைமேலணிந்து * உடலம்
நீறும்பூசியேறூரும்இறையோன் சென்றுகுறையிரப்ப *
மாறொன்றில்லாவாசநீர் வரைமார்வகலத்தளித்துகந்தான் *
நாறும்பொழில்சூழ்ந்தழகாய நறையூர்நின்றநம்பியே.
1516 āṟum piṟaiyum aravamum *
aṭampum caṭaimel aṇintu * uṭalam
nīṟum pūci eṟu ūrum *
iṟaiyoṉ cĕṉṟu kuṟai irappa **
māṟu ŏṉṟu illā vāca nīr *
varai mārvu akalattu al̤ittu ukantāṉ * -
nāṟum pŏzhil cūzhntu azhaku āya *
naṟaiyūr niṉṟa nampiye-9

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1516. Shivā the bull rider, with his matted hair adorned with the crescent moon and the flowing Ganges, wearing a snake as his ornament and a kondrai garland, his body smeared with vibhuti ?? went to our god and asked him to remove the curse that Nānmuhan had given him. Nambi, the god of Thirunaraiyur - surrounded with fragrant beautiful groves, took blood from his mountain-like chest, poured it into Nānmuhan’s skull that was stuck to Shivā’s hand and made it fall.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆறும் கங்கை நதியையும்; பிறையும் சந்திரனையும்; அரவமும் பாம்பையும்; அடம்பும் அடம்பப் பூவையும்; சடைமேல் அணிந்து சடைமேல் அணிந்து; உடலம் நீறும் பூசி உடலில் விபூதி பூசி; ஏறு ஊரும் ரிஷபத்தின் மேலேறி; இறையோன் வரும் சிவன்; சென்று வந்து தனது பிரமஹத்தி சாபம்; குறை விடு படுமாறு; இரப்ப பிரார்த்திக்க; வரை மார்வு மலைபோன்ற; அகலத்து மார்பிலிருந்து; மாறு ஒன்று ஒப்பற்ற மணம் மிக்க; இல்லா வாச நீர் வியர்வையை; அளித்து கொடுத்து; உகந்தான் உகந்த பெருமான்; நாறும் நறுமணம்மிக்க; பொழில் சோலைகளால்; சூழ்ந்து அழகு ஆய சூழ்ந்த அழகிய; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!