PT 6.7.5

நறையூர் நம்பிதான் கம்சனைக் கொன்றவன்

1512 வில்லார்விழவில்வடமதுரைவிரும்பி விரும்பாமல்லடர்த்து *
கல்லார்திரள்தோள்கஞ்சனைக்காய்ந்தான் பாய்ந்தான்காளியன்மேல் *
சொல்லார்சுருதிமுறையோதிச் சோமுச்செய்யும்தொழிலினோர் *
நல்லார்மறையோர்பலர்வாழும்நறையூர்நின்றநம்பியே.
1512 vil ār vizhavil vaṭa maturai *
virumpi virumpā mal aṭarttu *
kal ār tiral̤ tol̤ kañcaṉaik
kāyntāṉ * pāyntāṉ kāl̤iyaṉmel ** -
cŏl ār curuti muṟai otic *
comuc cĕyyum tŏzhiliṉor *
nallār maṟaiyor palar vāzhum *
naṟaiyūr niṉṟa nampiye-5

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1512. Our lord who went to northern Madhura, joined the festival of the bow competition, fought with the wrestlers there and defeated them, and who jumped into the pond and danced on the heads of Kālingan stays in Thirunaraiyur where many good Vediyars recite the divine Vedās well and perform Soma sacrifices.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வட மதுரை வட மதுரையில்; வில் ஆர் கம்ஸன் நடத்தின வில்; விழவில் விழாவில்; விரும்பி விரும்பி கலந்து கொள்ளப் போன கண்ணன்; விரும்பா எதிரிகளான; மல் அடர்த்து மல்லர்களை முடித்து; கல் ஆர் மலை போன்று; திரள் தோள் திரண்ட தோள்களையுடைய; கஞ்சனை கம்சனை; காய்ந்தான் சீறி கொன்றவனும்; காளியன் மேல் காளியன் மேல்; பாய்ந்தான் பாய்ந்தவனும்; சொல் ஆர் குற்றமற்ற சொற்களையுடைய; சுருதி வேதங்களை; முறை ஓதி முறையாக ஓதி; சோமுச் செய்யும் சோமயாகம் செய்யும்; தொழிலினோர் தொழிலையுடைய; நல்லார் நல்லவர்களான; மறையோர் வைதிகர்கள்; பலர் வாழும் பலர் வாழுமிடமான; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!