Chapter 2

Thiruvinnagar 2 - (பொறுத்தேன் புன்சொல்)

திருவிண்ணகர் 2
Thiruvinnagar 2 - (பொறுத்தேன் புன்சொல்)
These verses are from Thiruvannagar Pasurams. Previously, the āzhvār expressed a desire to renounce household life, saying "I do not want a worldly life." The Lord did not immediately come running to grant grace. Now, the āzhvār prays, "Do not consider my faults. Accept me, thinking of me as one associated with the Goddess," beseeching the Lord for His grace.
ஈண்டு உள்ளனவும் திருவண்ணகர்ப் பாசுரங்களே. முன்பு ஆழ்வார் வேண்டேன் மனை வாழ்க்கையை என்றார். பகவான் ஒடி வந்து அருள் கொடுக்கவில்லை. என் குற்றங்களைப் பாராதே பிராட்டியைச் சேர்ந்தவன் எனக்கருதி என்னை ஏற்றுக் கொள் என்று அவர் ஈண்டு வேண்டுகிறார்.
Verses: 1458 to 1467
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 6.2.1

1458 பொறுத்தேன்புன்சொல்நெஞ்சில் பொருளின்பமெனஇரண்டும்
இறுத்தேன் * ஐம்புலன்கட்கடனாயின வாயிலொட்டி
அறுத்தேன் * ஆர்வச்செற்றமவை தன்மைமனத்தகற்றி
வெறுத்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே! (2)
1458 ## பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் * பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் * ஐம்புலன்கள் கடன் ஆயின * வாயில் ஒட்டி
அறுத்தேன் ** ஆர்வச் செற்றம் அவை தம்மை * மனத்து அகற்றி
வெறுத்தேன் * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 1
1458 ## pŏṟutteṉ puṉcŏl nĕñcil * pŏrul̤ iṉpam ĕṉa iraṇṭum
iṟutteṉ * aimpulaṉkal̤ kaṭaṉ āyiṉa * vāyil ŏṭṭi
aṟutteṉ ** ārvac cĕṟṟam avai-tammai * maṉattu akaṟṟi
vĕṟutteṉ * niṉ aṭainteṉ * -tiruviṇṇakar meyavaṉe-1

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1458. Before I wanted wealth and the pleasures that the five senses gave. Even though I was hurt again and again, I did not stop enjoying those pleasures. I was friendly with people I liked and I hated those I did not like. Now, I have come to understand that those pleasures were evil and I have removed them from my mind. O lord of Thiruvinnagar, now I hate the deeds I did and I come to you, my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புன் அற்பமான; சொல் வார்த்தைகளை; நெஞ்சில் மனத்தில்; பொறுத்தேன் பொறுத்துக் கொண்டேன்; பொருள் இன்பம் பொருள் இன்பம்; என இரண்டும் என்ற இரண்டையும்; ஐம்புலன்கள் ஐம்புலன்களுக்காக; இறுத்தேன் பொறுத்துக் கொண்டு; கடன் ஆயின அனுபவித்தேன்; ஆர்வச் செற்றம் விருப்பு வெறுப்பு ராக துவேஷம்; வாயில் ஒட்டி நிறைவேற்றுவது கடமை; அறுத்தேன் என்று நிறைவேற்றினேன்; அவை தம்மை அவைகள் அனைத்தையும்; மனத்து அகற்றி வளர்த்து மனதிலிருந்து நீக்கி; வெறுத்தேன் வெறுத்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!; நின் அடைந்தேன் உன்னைச் சரணம் புகுந்தேன்

PT 6.2.2

1459 மறந்தேன்உன்னைமுன்னம் மறந்தமதியின்மனத்தால் *
இறந்தேன்எத்தனையும் அதனால்இடும்பைக்குழியில் *
பிறந்தேஎய்த்தொழிந்தேன் பெருமானே! திருமார்பா! *
சிறந்தேன்நின்னடிக்கே திருவிண்ணகர்மேயவனே!
1459 மறந்தேன் உன்னை முன்னம் * மறந்த மதி இல் மனத்தால் *
இறந்தேன் எத்தனையும் * அதனால் இடும்பைக் குழியில் **
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் * பெருமான் திரு மார்பா *
சிறந்தேன் நின் அடிக்கே * திருவிண்ணகர் மேயவனே
1459 maṟanteṉ uṉṉai muṉṉam * maṟanta mati il maṉattāl *
iṟanteṉ ĕttaṉaiyum * ataṉāl iṭumpaik kuzhiyil **
piṟante ĕyttu ŏzhinteṉ * pĕrumāṉ tiru mārpā *
ciṟanteṉ niṉ aṭikke * -tiruviṇṇakar meyavaṉe

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1459. You, the highest, embrace Lakshmi on your chest. I forgot you in all my births and until now never thought of you in my heart. I was born to be in the depths of sorrow again and again and I am weak, but I have become your good devotee. O god of Thiruvinnagar, I come to your feet—you are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உன்னை முன்னம் உன்னை பலகாலமாக; மறந்தேன் மறந்தேன்; மறந்த இப்படி மறந்தோமே; மதியின் என்கிற உணர்வுமில்லாமல்; மனத்தால் மனம் வருந்தியதால்; எத்தனையும் ஞானமின்றி; இறந்தேன் துன்பப் பட்டேன்; அதனால் அதனால்; இடும்பைக் குழியில் கர்ப்பக் குழியில்; பிறந்தே பிறந்து; எய்த்து ஒழிந்தேன் இளைத்து ஒழிந்தேன்; திருமார்பா! திருமகளை மார்பிலுடைய; பெருமான்! பெருமானே!; நின் அடிக்கே இப்போது உன் பாதங்களை; சிறந்தேன் பற்ற தகுந்தவனானேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!

PT 6.2.3

1460 மானேய்நோக்கியர்தம் வயிற்றுக்குழியிலுழைக்கும் *
ஊனேயாக்கைதன்னை உதவாமைஉணர்ந்துணர்ந்து *
வானே! மாநிலமே! வந்துவந்துஎன்மனத்திருந்த
தேனே! * நின்னடைந்தேன் திருவிண்ண்ணகர்மேயவனே!
1460 மான் ஏய் நோக்கியர் தம் * வயிற்றுக் குழியில் உழைக்கும் *
ஊன் ஏய் ஆக்கை தன்னை * உதவாமை உணர்ந்து உணர்ந்து **
வானே மா நிலமே * வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே! * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 3
1460 māṉ ey nokkiyar-tam * vayiṟṟuk kuzhiyil uzhaikkum *
ūṉ ey ākkai-taṉṉai * utavāmai uṇarntu uṇarntu ** -
vāṉe mā nilame * vantu vantu ĕṉ maṉattu irunta
teṉe! * -niṉ aṭainteṉ * -tiruviṇṇakar meyavaṉe-3

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1460. You are the sky, the earth, and honey. You came to me, entered my heart and remained there. I stayed in the womb of doe-eyed women and I stayed in this body made of flesh and I realized that births and this body will not give me the spiritual world. O god of Thiruvinnagar, I come to you—you are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானே! விண் உலகுக்கும்; மானிலமே! மண் உலகுக்கும் தலைவனே!; வந்து வந்து நீ மனமுவந்து வந்து; என் மனத்திருந்த தேனே! என் மனத்தில் இருப்பவனே!; மான் ஏய் மானைப் போன்ற கண்களையுடைய; நோக்கியர் தம் பெண்களின்; வயிற்றுக் குழியில் கர்ப்பக் குழியில்; உழைக்கும் இருந்து துன்பப் படும்; ஊன் ஏய் ஆக்கை தன்னை சரீரத்தின்; உதவாமை ஸாதனம் ஆகாமையை உதவாமையை; உணர்ந்து உணர்ந்து நன்கு உணர்ந்து; நின் அடைந்தேன் உன்னை வந்து அடைந்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!

PT 6.2.4

1461 பிறிந்தேன்பெற்றமக்கள்பெண்டிரென்றிவர் பின்னுதவாது
அறிந்தேன் * நீபணித்தஅருளென்னும் ஓள்வாளுருவி
எறிந்தேன் * ஐம்புலன்கள்இடர்தீரஎறிந்துவந்து
செறிந்தேன் * நின்னடிக்கே திருவிண்ணகர்மேயவனே!
1461 பிறிந்தேன் பெற்ற மக்கள் * பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன் * நீ பணித்த அருள் என்னும் * ஒள் வாள் உருவி
எறிந்தேன் ** ஐம்புலன்கள் இடர் தீர * எறிந்து வந்து
செறிந்தேன் * நின் அடிக்கே * திருவிண்ணகர் மேயவனே 4
1461 piṟinteṉ pĕṟṟa makkal̤ * pĕṇṭir ĕṉṟu ivar piṉ utavātu
aṟinteṉ * nī paṇitta arul̤ ĕṉṉum * ŏl̤ vāl̤ uruvi
ĕṟinteṉ ** aimpulaṉkal̤ iṭar tīra * ĕṟintu vantu
cĕṟinteṉ * niṉ aṭikke * -tiruviṇṇakar meyavaṉe-4

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1461. I left my wife and children realizing that they cannot help me attain Mokshā. Through your grace I threw away pleasures to rid myself of the troubles that my five senses gave that shine like swords. I come to you and worship your feet. O god of Thiruvinnagar, I am your slave. You are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெற்ற மக்கள் பிறந்த பிள்ளைகள்; பெண்டிர் மனைவி; என்று இவர் என்று இவர்கள்; பின் முடிவு காலத்துக்கு; உதவாது உதவமாட்டார்கள் என்பதை; அறிந்தேன் அறிந்து அவர்களை; பிறிந்தேன் விட்டுப் பிரிந்தேன்; நீ பணித்த நீ அர்ஜுனனுக்கு அருளிய; அருள் என்னும் சரம ஸ்லோகமான அருள் என்னும்; ஒள் வாள் உருவி ஒரு வாளை உருவி; ஐம்புலன்கள் ஐம்புலன்களால்; இடர் தீர உண்டாகிற துயர் தீர; எறிந்தேன் எறிந்தேன்; எறிந்து வந்து எறிந்த பின் வந்து; நின் அடிக்கே உன் திருவடிகளில்; செறிந்தேன் சரண் அடைந்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!

PT 6.2.5

1462 பாண்தேன்வண்டறையும்குழலார்கள் பல்லாண்டிசைப்ப *
ஆண்டார்வையமெல்லாம் அரசாகி * முன்னாண்டவரே
மாண்டாரென்றுவந்தார் அந்தோ மனைவாழ்க்கைதன்னை
வேண்டேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1462 பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் * பல்லாண்டு இசைப்ப *
ஆண்டார் வையம் எல்லாம் * அரசு ஆகி முன் ஆண்டவரே **
மாண்டார் என்று வந்தார் * அந்தோ மனைவாழ்க்கை தன்னை
வேண்டேன் * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 5
1462 pāṇ teṉ vaṇṭu aṟaiyum kuzhalārkal̤ * pallāṇṭu icaippa *
āṇṭār vaiyam ĕllām * aracu āki muṉ āṇṭavare **
māṇṭār ĕṉṟu vantār * anto maṉaivāzhkkai-taṉṉai
veṇṭeṉ * niṉ aṭainteṉ * -tiruviṇṇakar meyavaṉe-5

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1462. We hear how many kings who ruled the world and were praised with “Pallāndu” by women with beautiful hair swarming with honey-drinking bees have all passed from this earth. I do not want the impermanent life of this world and I come to you and worship your feet. O god of Thiruvinnagar, I am your slave. You are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாண் இசையுடன்; தேன் தேனை; வண்டு பருகும் வண்டுகள்; அறையும் கூச்சலிடும்; குழலார்கள் கூந்தலையுடைய பெண்கள்; பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும்; இசைப்ப என்று வாழ்த்திய; வையம் எல்லாம் உலகை எல்லாம்; ஆண்டார் ஆண்ட அரசர்கள்; அரசு ஆகி அரசர்களாகி; முன் ஆண்டவரே உலகை ஆண்டவர்களே; மாண்டார் மாண்டுபோனார்கள்; என்று வந்தார் நிலையில்லாத வாழ்வு என்று வந்தனர்; அந்தோ! மனை ஆதலால் இல்லறம்; வேண்டேன் வேண்டேன் கைங்கர்யம் விரும்பியதால்; நின் அடைந்தேன் உன்னைச் சரண் அடைந்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!

PT 6.2.6

1463 கல்லாஐம்புலன்களவை கண்டவாறுசெய்யகில்லேன் *
மல்லா! மல்லமருள்மல்லர்மாள மல்லடர்த்த
மல்லா! * மல்லலம்சீர் மதிள்நீரிலங்கையழித்த
வில்லா! * நின்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1463 கல்லா ஐம்புலன்கள் அவை * கண்டவாறு செய்யகில்லேன் *
மல்லா மல் அமருள் மல்லர் மாள * மல் அடர்த்த
மல்லா ** மல்லல் அம் சீர் * மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 6
1463 kallā aimpulaṉkal̤-avai * kaṇṭavāṟu cĕyyakilleṉ *
mallā mal amarul̤ mallar māl̤a * mal aṭartta
mallā ** mallal am cīr * matil̤ nīr ilaṅkai azhitta
villā * niṉ aṭainteṉ * -tiruviṇṇakar meyavaṉe-6

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1463. I do not want to do the things that my five unknowing senses want. You, a fighter, battled with the strong wrestlers and the Asurans and defeated them and you shot your arrows and destroyed Lankā surrounded by wide oceans and strong forts. I come to you and worship your feet, O god of Thiruvinnagar. I am your slave. You are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல்லா சாஸ்திர நெறிப்படி நடக்காத; ஐம்புலன்கள் ஐம்புலன்களும்; அவை கண்டவாறு அவை நினைத்தவாறு நான்; செய்யகில்லேன் செய்யவில்லை; மல்லா! வலிமையுள்ள பெருமானே!; மல் அமருள் மல் யுத்தத்தில்; மல்லர் மாள மல்லர்கள் மாள; மல் அடர்த்த அவர்களை அழித்த; மல்லா! மல் யுத்த வல்லவனே!; மல்லல் அம் சீர் அழகிய செல்வத்தையுடைய; மதிள் மதிள்கள் சூழ்ந்த; நீர் சுற்றிலும் நீருடைய; இலங்கை அழித்த இலங்கையை அழித்த; வில்லா! வில்லையுடையவனே!; நின் அடைந்தேன் உன்னை சரண் அடைந்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!

PT 6.2.7

1464 வேறாயானிரந்தேன் வெகுளாதுமனக்கொள்எந்தாய்! *
ஆறாவெந்நரகத்து அடியேனையிடக்கருதி *
கூறாஐவர்வந்து குமைக்கக்குடிவிட்டவரை *
தேறாதுஉன்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1464 வேறா யான் இரந்தேன் * வெகுளாது மனக்கொள் எந்தாய் *
ஆறா வெம் நரகத்து * அடியேனை இடக் கருதி **
கூறா ஐவர் வந்து குமைக்கக் * குடிவிட்டவரை *
தேறாது உன் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 7
1464 veṟā yāṉ iranteṉ * vĕkul̤ātu maṉakkŏl̤ ĕntāy *
āṟā vĕm narakattu * aṭiyeṉai iṭak karuti **
kūṟā aivar vantu kumaikkak * kuṭiviṭṭavarai *
teṟātu uṉ aṭainteṉ * -tiruviṇṇakar meyavaṉe-7

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1464. You are my father. Don’t be angry with me if I ask you for something different than what others want in this world. You created the five senses, but they will put me, your slave, in cruel hell. I don’t trust them and they will not help me reach your feet. I don’t know what to do. I come to you and worship your feet, O god of Thiruvinnagar. I am your slave. You are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எந்தாய்! என் தந்தையே!; யான் வேறா நான் உண்மையாக; இரந்தேன் யாசிக்கிறேன்; வெகுளாது சீற்றமின்றி; மனக்கொள் மனம்கொள்ள வேண்டும்; ஆறா வெம் ஓய்வில்லாத கொடிய; நரகத்து ஸம்ஸார நரகத்திலே; அடியேனை அடியேனை; இடக் கருதி தள்ள நினைத்து; ஐவர் ஐம்புலன்கள் வந்து; வந்து என்னை தங்களுக்கு; கூறா பாகமாக்கிக் கொண்டு; குமைக்க துன்புறுத்த; குடிவிட்டவரை இந்த இந்திரியங்களை; தேறாது நம்பாமல் நான்; உன் அடைந்தேன் உன்னைச் சரண் அடைந்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!

PT 6.2.8

1465 தீவாய்வல்வினையார் உடநின்று சிறந்தவர்போல் *
மேவாவெந்நரகத்து இடஉற்றுவிரைந்துவந்தார் *
மூவாவானவர்தம்முதல்வா! மதிகோள்விடுத்த
தேவா! * நின்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1465 தீ வாய் வல் வினையார் * உடன் நின்று சிறந்தவர்போல் *
மேவா வெம் நரகத்து இட * உற்று விரைந்து வந்தார் **
மூவா வானவர் தம் முதல்வா * மதி கோள் விடுத்த
தேவா * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 8
1465 tī vāy val viṉaiyār * uṭaṉ niṉṟu ciṟantavarpol *
mevā vĕm narakattu iṭa * uṟṟu viraintu vantār **
mūvā vāṉavar-tam mutalvā * mati kol̤ viṭutta
tevā * niṉ aṭainteṉ * -tiruviṇṇakar meyavaṉe-8

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1465. My bad acts, like fires, stayed with me pretending they were good friends. They came hurrying to me and thought that they could put me in a cruel hell where no one wants to go. You are the divine lord of the everlasting gods who released the moon from its curse. I come to you and worship your feet, O god of Thiruvinnagar. I am your slave. You are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீ வாய் நெருப்பையுமிழும்; வல்வினையார் கொடிய பாபங்கள்; சிறந்தவர் போல் உறவினர்களைப்போல்; உடன் நின்று உடன் நின்று; வெம் நரகத்து கொடிய நரகத்திலே; மேவா என்னை; இட உற்று தள்ள முயன்று; விரைந்து வந்தார் விரைந்து வந்தனர்; மூவா கிழத்தனம் மூப்பு இல்லாத; வானவர் தம் முதல்வா! தேவாதி தேவனே!; மதி சந்திரனுடைய; கோள் விடுத்த துயரத்தை போக்கினவனே!; தேவா! பெருமானே!; நின் அடைந்தேன் உன்னைச் சரண் அடைந்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!

PT 6.2.9

1466 போதார்தாமரையாள் புலவிக்குலவானவர்தம்
கோதா! * கோதில்செங்கோல் குடைமன்னரிடைநடந்த
தூதா! * தூமொழியாய்! சுடர்போலென்மனத்திருந்த
வேதா! * நின்னடைந்தேன் திரு விண்ணகர்மேயவனே!
1466 போது ஆர் தாமரையாள் * புலவி குல வானவர் தம்
கோதா * கோது இல் செங்கோல் * குடை மன்னர் இடை நடந்த
தூதா ** தூ மொழியாய் சுடர்போல் * என் மனத்து இருந்த
வேதா * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 9
1466 potu ār tāmaraiyāl̤ * pulavi kula vāṉavar-tam
kotā * kotu il cĕṅkol * kuṭai maṉṉar iṭai naṭanta
tūtā ** tū mŏzhiyāy cuṭarpol * ĕṉ maṉattu irunta
vetā * niṉ aṭainteṉ * -tiruviṇṇakar meyavaṉe-9

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1466. You, the king who embraces Lakshmi are worshiped by the gods in the sky. You went as a messenger to help the Pāndavās to the unfriendly Kauravās with their scepters and royal umbrellas and you spoke pure and true words to them. You the lamp that brightens my mind, taught the Vedās to the sages. I come to you and worship your feet, O god of Thiruvinnagar. I am your slave. You are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போது ஆர் மலர்ந்த; தாமரையாள் தாமரையிலிருக்கும் திருமகளுக்கும்; புலவி பூதேவிக்கும்; குல வானவர் தம் சிறந்த நித்யஸூரிகளுக்கும்; கோதா! மகிழ்ச்சி அளிப்பவனே!; கோது இல் தடையின்றி குற்றமில்லாத; செங்கோல் செங்கோல் செலுத்தும்; குடை கொற்றக் குடையையுடைய; மன்னர் இடை அரசர்களிடத்தில்; நடந்த தூதா! தூது சென்றவனே!; தூ தூய சொற்களை; மொழியாய்! மொழிந்தவனே!; சுடர் போல் ஒளிமயமாக; என் மனத்து என் மனத்தில்; இருந்த இருப்பவனே!; வேதா! வேத வேத்யனே!; நின் அடைந்தேன் உன்னைச் சரண் அடைந்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!

PT 6.2.10

1467 தேனார்பூம்புறவில் திருவிண்ணகர்மேயவனை *
வானாரும்மதிள்சூழ் வயல்மங்கையர்கோன் * மருவார்
ஊனார்வேல்கலியன் ஒலிசெய்தமிழ்மாலைவல்லார் *
கோனாய். வானவர்தம் கொடிமாநகர்கூடுவரே. (2)
1467 ## தேன் ஆர் பூம் புறவில் * திருவிண்ணகர் மேயவனை *
வான் ஆரும் மதிள் சூழ் * வயல் மங்கையர் கோன் மருவார் **
ஊன் ஆர் வேல் கலியன் * ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் *
கோன் ஆய் வானவர் தம் * கொடி மா நகர் கூடுவரே 10
1467 ## teṉ ār pūm puṟavil * tiruviṇṇakar meyavaṉai *
vāṉ ārum matil̤ cūzh * vayal maṅkaiyar-koṉ maruvār **
ūṉ ār vel kaliyaṉ * ŏlicĕy tamizh-mālai vallār *
koṉ āy vāṉavar-tam * kŏṭi mā nakar kūṭuvare-10

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1467. Kaliyan with a spear smeared with flesh, the chief of Thirumangai surrounded with flourishing fields and walls that touch the sky, composed a garland of ten Tamil poems praising the god of Thiruvinnagar, surrounded with groves blooming with flowers that drip with honey. If devotees learn and recite these pāsurams well, they will become kings on this earth and go to the world of the victorious gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேன் ஆர் தேன்நிறைந்த; பூம் பூக்களையுடைய; புறவில் சோலைகள் நிறைந்த; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானைக் குறித்து; வான் ஆரும் ஆகாசத்தை அளாவியிருக்கும்; மதிள் சூழ் மதிள் சூழ்ந்த; வயல் வயல்களையுடைய; மங்கையர் கோன் திருமங்கைத் தலைவன்; மருவார் பகைவருடைய; ஊன் ஆர் உடலில் புகும்படியான; வேல் வேற்படையையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலிசெய் அருளிச்செய்த; தமிழ் மாலை தமிழ்ப் பாசுரங்களை; வல்லார் ஓத வல்லார்கள்; கோன் ஆய் ஸ்வாமியாய்; வானவர் தேவர்களிருக்கும்; தம் கொடி கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட; மா நகர் வைகுண்ட மா நகரத்தை; கூடுவரே அடைவார்கள்