கர்ப்ப வாசம் எண்ணி பயப்பட்டேன் ஈஸ்வராய நிவேதிதே -என்று அன்றோ உம்மை ஸ்ருஷ்டித்தது கைங்கர்யம் செய்யவே என்றாலும் அப்படி உதவ வில்லையே -என்று வருந்துகிறேன் –
மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும் ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து வானே மா நிலமே வந்து உவந்து என் மனத்து இருந்த தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3-
வானே-நித்ய விபூதிக்கு நிர்வாஹகனே