PT 6.2.6

மல்லர்களை அடர்த்தவனே! சரணம்

1463 கல்லாஐம்புலன்களவை கண்டவாறுசெய்யகில்லேன் *
மல்லா! மல்லமருள்மல்லர்மாள மல்லடர்த்த
மல்லா! * மல்லலம்சீர் மதிள்நீரிலங்கையழித்த
வில்லா! * நின்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1463 kallā aimpulaṉkal̤-avai * kaṇṭavāṟu cĕyyakilleṉ *
mallā mal amarul̤ mallar māl̤a * mal aṭartta
mallā ** mallal am cīr * matil̤ nīr ilaṅkai azhitta
villā * niṉ aṭainteṉ * -tiruviṇṇakar meyavaṉe-6

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1463. I do not want to do the things that my five unknowing senses want. You, a fighter, battled with the strong wrestlers and the Asurans and defeated them and you shot your arrows and destroyed Lankā surrounded by wide oceans and strong forts. I come to you and worship your feet, O god of Thiruvinnagar. I am your slave. You are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல்லா சாஸ்திர நெறிப்படி நடக்காத; ஐம்புலன்கள் ஐம்புலன்களும்; அவை கண்டவாறு அவை நினைத்தவாறு நான்; செய்யகில்லேன் செய்யவில்லை; மல்லா! வலிமையுள்ள பெருமானே!; மல் அமருள் மல் யுத்தத்தில்; மல்லர் மாள மல்லர்கள் மாள; மல் அடர்த்த அவர்களை அழித்த; மல்லா! மல் யுத்த வல்லவனே!; மல்லல் அம் சீர் அழகிய செல்வத்தையுடைய; மதிள் மதிள்கள் சூழ்ந்த; நீர் சுற்றிலும் நீருடைய; இலங்கை அழித்த இலங்கையை அழித்த; வில்லா! வில்லையுடையவனே!; நின் அடைந்தேன் உன்னை சரண் அடைந்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!