PT 6.2.10

தேவர் உலகு சேர்வர்

1467 தேனார்பூம்புறவில் திருவிண்ணகர்மேயவனை *
வானாரும்மதிள்சூழ் வயல்மங்கையர்கோன் * மருவார்
ஊனார்வேல்கலியன் ஒலிசெய்தமிழ்மாலைவல்லார் *
கோனாய். வானவர்தம் கொடிமாநகர்கூடுவரே. (2)
1467 ## teṉ ār pūm puṟavil * tiruviṇṇakar meyavaṉai *
vāṉ ārum matil̤ cūzh * vayal maṅkaiyar-koṉ maruvār **
ūṉ ār vel kaliyaṉ * ŏlicĕy tamizh-mālai vallār *
koṉ āy vāṉavar-tam * kŏṭi mā nakar kūṭuvare-10

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1467. Kaliyan with a spear smeared with flesh, the chief of Thirumangai surrounded with flourishing fields and walls that touch the sky, composed a garland of ten Tamil poems praising the god of Thiruvinnagar, surrounded with groves blooming with flowers that drip with honey. If devotees learn and recite these pāsurams well, they will become kings on this earth and go to the world of the victorious gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேன் ஆர் தேன்நிறைந்த; பூம் பூக்களையுடைய; புறவில் சோலைகள் நிறைந்த; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானைக் குறித்து; வான் ஆரும் ஆகாசத்தை அளாவியிருக்கும்; மதிள் சூழ் மதிள் சூழ்ந்த; வயல் வயல்களையுடைய; மங்கையர் கோன் திருமங்கைத் தலைவன்; மருவார் பகைவருடைய; ஊன் ஆர் உடலில் புகும்படியான; வேல் வேற்படையையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலிசெய் அருளிச்செய்த; தமிழ் மாலை தமிழ்ப் பாசுரங்களை; வல்லார் ஓத வல்லார்கள்; கோன் ஆய் ஸ்வாமியாய்; வானவர் தேவர்களிருக்கும்; தம் கொடி கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட; மா நகர் வைகுண்ட மா நகரத்தை; கூடுவரே அடைவார்கள்