PT 6.2.7

திருவிண்ணகரானே! நீயே சரணம்

1464 வேறாயானிரந்தேன் வெகுளாதுமனக்கொள்எந்தாய்! *
ஆறாவெந்நரகத்து அடியேனையிடக்கருதி *
கூறாஐவர்வந்து குமைக்கக்குடிவிட்டவரை *
தேறாதுஉன்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1464 veṟā yāṉ iranteṉ * vĕkul̤ātu maṉakkŏl̤ ĕntāy *
āṟā vĕm narakattu * aṭiyeṉai iṭak karuti **
kūṟā aivar vantu kumaikkak * kuṭiviṭṭavarai *
teṟātu uṉ aṭainteṉ * -tiruviṇṇakar meyavaṉe-7

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1464. You are my father. Don’t be angry with me if I ask you for something different than what others want in this world. You created the five senses, but they will put me, your slave, in cruel hell. I don’t trust them and they will not help me reach your feet. I don’t know what to do. I come to you and worship your feet, O god of Thiruvinnagar. I am your slave. You are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எந்தாய்! என் தந்தையே!; யான் வேறா நான் உண்மையாக; இரந்தேன் யாசிக்கிறேன்; வெகுளாது சீற்றமின்றி; மனக்கொள் மனம்கொள்ள வேண்டும்; ஆறா வெம் ஓய்வில்லாத கொடிய; நரகத்து ஸம்ஸார நரகத்திலே; அடியேனை அடியேனை; இடக் கருதி தள்ள நினைத்து; ஐவர் ஐம்புலன்கள் வந்து; வந்து என்னை தங்களுக்கு; கூறா பாகமாக்கிக் கொண்டு; குமைக்க துன்புறுத்த; குடிவிட்டவரை இந்த இந்திரியங்களை; தேறாது நம்பாமல் நான்; உன் அடைந்தேன் உன்னைச் சரண் அடைந்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!