PT 6.2.5

எதுவும் நிலையாது; எனவே நின்னைச் சேர்ந்தேன்

1462 பாண்தேன்வண்டறையும்குழலார்கள் பல்லாண்டிசைப்ப *
ஆண்டார்வையமெல்லாம் அரசாகி * முன்னாண்டவரே
மாண்டாரென்றுவந்தார் அந்தோ மனைவாழ்க்கைதன்னை
வேண்டேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
1462 pāṇ teṉ vaṇṭu aṟaiyum kuzhalārkal̤ * pallāṇṭu icaippa *
āṇṭār vaiyam ĕllām * aracu āki muṉ āṇṭavare **
māṇṭār ĕṉṟu vantār * anto maṉaivāzhkkai-taṉṉai
veṇṭeṉ * niṉ aṭainteṉ * -tiruviṇṇakar meyavaṉe-5

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1462. We hear how many kings who ruled the world and were praised with “Pallāndu” by women with beautiful hair swarming with honey-drinking bees have all passed from this earth. I do not want the impermanent life of this world and I come to you and worship your feet. O god of Thiruvinnagar, I am your slave. You are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாண் இசையுடன்; தேன் தேனை; வண்டு பருகும் வண்டுகள்; அறையும் கூச்சலிடும்; குழலார்கள் கூந்தலையுடைய பெண்கள்; பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும்; இசைப்ப என்று வாழ்த்திய; வையம் எல்லாம் உலகை எல்லாம்; ஆண்டார் ஆண்ட அரசர்கள்; அரசு ஆகி அரசர்களாகி; முன் ஆண்டவரே உலகை ஆண்டவர்களே; மாண்டார் மாண்டுபோனார்கள்; என்று வந்தார் நிலையில்லாத வாழ்வு என்று வந்தனர்; அந்தோ! மனை ஆதலால் இல்லறம்; வேண்டேன் வேண்டேன் கைங்கர்யம் விரும்பியதால்; நின் அடைந்தேன் உன்னைச் சரண் அடைந்தேன்; திருவிண்ணகர் திருவிண்ணகர்; மேயவனே பெருமானே!