நம் காலில் -கைங்கர்யம் செய்யவே இவற்றை நாமே குடி வைத்தோம் என்று அறிந்தால் அவை வேறே குமைக்கும் காரணம் என்ன -என்ன வல் வினையார் -கர்மமே காரணம் என்கிறார் –
தீவாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர் போல் மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார் மூவா வானவர் தம் முதல்வா மதி கோள் விடுத்த தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-8-
தீவாய் அனல் ஆஸ்ரயராய்த்து நெருப்பை உமிழா