Chapter 9

Kannan embracing Yashoda - (வட்டு நடுவே)

புறம் புல்கல்
Kannan embracing Yashoda - (வட்டு நடுவே)
A child enjoys running and hugging his mother’s back. The mother enjoys it as well. Similarly, Kannan would slowly walk behind His mother, without making any sound, without her spotting Him and hug her from behind. Āzhvār wishes to enjoy the way Yashoda enjoyed that moment.
குழந்தை ஓடி வந்து தாயின் முதுகைக் கட்டிக்கொண்டு மகிழும்; தாயும் மகிழ்வாள். கண்ணனும் தாய்க்குத் தெரியாமல் பின்புறத்தே மெல்ல நடந்து வந்து தாயின் முதுகைக் கட்டிக்கொள்வான். அந்நிலையை விரும்பி யசோதை மகிழ்ந்ததுபோல் ஆழ்வார் தாமும் விரும்புகிறார்.
Verses: 108 to 117
Grammar: Veṇṭaḷaiyālvanta Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā (117) / வெண்டளையால்வந்த கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா (117)
Recital benefits: Will get good children and live happily
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 1.9.1

108 வட்டுநடுவே வளர்கின்ற * மாணிக்க
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல் *
சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க * என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2)
108 ## வட்டு நடுவே * வளர்கின்ற * மாணிக்க
மொட்டு நுனையில் * முளைக்கின்ற முத்தே போல் **
சொட்டுச் சொட்டு என்னத் * துளிக்கத் துளிக்க * என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான் * கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான் (1)
108 ## vaṭṭu naṭuve * val̤arkiṉṟa * māṇikka-
mŏṭṭu nuṉaiyil * mul̤aikkiṉṟa mutte pol **
cŏṭṭuc cŏṭṭu ĕṉṉat * tul̤ikkat tul̤ikka * ĕṉ
kuṭṭaṉ vantu ĕṉṉaip puṟampulkuvāṉ * kovintaṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (1)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

108. Like the pearl-like drops that fall from the tops of shining diamond-like buds in a garden, my child comes from behind, as his ornaments dangle with a thud (chottu, chottu) and embraces me. Govindan comes and embraces me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வட்டு நடுவே ரத்ன வட்டுக்கள் நடுவில்; வளர்கின்ற வளரும்; மாணிக்க மாணிக்க; மொட்டு நுனியில் அரும்பின் நுனியில்; முளைக்கின்ற முளைக்கும்; முத்தேபோல் முத்துக்கள் போன்று; சொட்டு மெல்லிய; சொட்டு என்ன சொட்டு சொட்டு என்று தண்ணீர்; துளிக்கத் துளிக்க என் துளிக்கத் துளிக்க; குட்டன் வந்து என் மதலை; என்னை என் முதுகை; புறம்புல்குவான் கட்டிக் கொள்வான்; கோவிந்தன் கண்ணன்; என்னை என்னுடைய; புறம்புல்குவான் முதுகை கட்டிக் கொள்வான்
muttepol like pearls; mul̤aikkiṉṟa that grows and falls; mŏṭṭu nuṉiyil from the tip of the buds of; māṇikka emeralds; val̤arkiṉṟa that grows; vaṭṭu naṭuve in the forest of gemstones; kuṭṭaṉ vantu Lord Krishna comes; ĕṉṉai from behind and; puṟampulkuvāṉ embraces from my back; cŏṭṭu while small; cŏṭṭu ĕṉṉa water droplets drips; tul̤ikkat tul̤ikka ĕṉ drips and drips from Him; kovintaṉ Lord Krishna; puṟampulkuvāṉ will embrace me from behind; ĕṉṉai mine

PAT 1.9.2

109 கிங்கிணிகட்டிக் கிறிகட்டி * கையினில்
கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி *
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து *
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
109 கிண்கிணி கட்டிக் * கிறி கட்டிக் * கையினில் *
கங்கணம் இட்டுக் * கழுத்தில் தொடர் கட்டி **
தன் கணத்தாலே * சதிரா நடந்து வந்து *
என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான் * எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (2)
109 kiṇkiṇi kaṭṭik * kiṟi kaṭṭik * kaiyiṉil *
kaṅkaṇam iṭṭuk * kazhuttil tŏṭar kaṭṭi **
taṉ kaṇattāle * catirā naṭantu vantu *
ĕṉ kaṇṇaṉ ĕṉṉaip puṟampulkuvāṉ * ĕmpirāṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (2)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

109. My dear child Kannan, wears jingling bells on His waist, coral bracelets on His wrists, Kankan on His shoulders and with many more ornaments, dances and comes walking beautifully and embraces me from behind. My lovely child, embraces me from behind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கிங்கிணி கட்டி இடுப்பில் சதங்கையைக் கட்டி; கிறி கட்டி கையினிற் பவளத்தை முன் கையினில் கட்டி; கங்கணம் இட்டு புஜத்தில் கங்கணம் கட்டி; கழுத்தில் தொடர் கட்டி கழுத்தில் சங்கிலி அணிந்து; தன் கணத்தாலே மற்ற ஆபரணங்களுடன்; சதிரா நடந்து வந்து நளினமாக நடந்து வந்து; என் கண்ணன் என் கண்மணி; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்; எம்பிரான் என் பெருமான்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
ĕṉ kaṇṇaṉ my Kannan; kiṅkiṇi kaṭṭi wears jingling bells on His waist; kiṟi kaṭṭi kaiyiṉiṟ coral bracelets on His wrists; kaṅkaṇam iṭṭu Kankan on His shoulders; kaḻuttil tŏṭar kaṭṭi chain on His neck; taṉ kaṇattāle and other ornaments; catirā naṭantu vantu comes walking beautifully; pulkuvāṉ embrances me from; ĕṉṉaip puṟam my behind; ĕmpirāṉ my Lord; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind

PAT 1.9.3

110 கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம் *
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான் *
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய *
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்.
110 கத்தக் கதித்துக் * கிடந்த பெருஞ்செல்வம் *
ஒத்துப் பொருந்திக்கொண்டு * உண்ணாது மண் ஆள்வான் **
கொத்துத் தலைவன் * குடிகெடத் தோன்றிய *
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் * ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் (3)
110 kattak katittuk * kiṭanta pĕruñcĕlvam *
ŏttup pŏruntikkŏṇṭu * uṇṇātu maṇ āl̤vāṉ **
kŏttut talaivaṉ * kuṭikĕṭat toṉṟiya *
attaṉ vantu ĕṉṉaip puṟampulkuvāṉ * āyarkal̤ eṟu ĕṉ puṟampulkuvāṉ (3)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

110. The supreme lord was born to destroy the clan of the evil king Duryodhanā, who kept his abundant wealth and lands for himself, without sharing them with the Pāndavas. He comes and embraces me from behind, He is the mighty bull among the cowherds, He embraces me from behind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கத்தக் கதித்துக் கிடந்த மிகவும் திரண்டு கிடந்த; பெருஞ்செல்வம் அளவற்ற செல்வத்தை; ஒத்து பாண்டவர்களோடு; பொருதிந்து கொண்டு இணைந்து கொண்டு; உண்ணாது அனுபவித்து உண்ணாமல்; மண் ஆள்வான் அரசாண்டிருந்த; கொத்து நூற்றுவர் தலைவன்; தலைவன் துரியோதனனின்; குடிகெட குடி அழிய; தோன்றிய தோன்றிய; அத்தன் வந்து என் பெருமான் வந்து; என்னைப் புறம் என் முதுகை கட்டிக் கொள்வான்; ஆயர்கள் ஏறு யாதவர்குலக் காளை!; என் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
attaṉ vantu my Lord; toṉṟiya incarnated to; kuṭikĕṭa destroy the clan of; talaivaṉ Duryodhana; kŏttu the leader of 100 Gauravas; maṇ āl̤vāṉ who ruled; uṇṇātu and enjoyed; kattak katittuk kiṭanta the expanside and; pĕruñcĕlvam abundant wealth; pŏrutintu kŏṇṭu without sharing; ŏttu with the Pandavas; ĕṉṉaip puṟam embrances me from behind; āyarkal̤ eṟu the mighty bull among the cowherds!; pulkuvāṉ He will embrance me from; ĕṉ puṟam my behind

PAT 1.9.4

111 நாந்தகமேந்திய நம்பிசரணென்று *
தாழ்ந்த தனஞ்சயற்காகி * தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர் *
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
111 நாந்தகம் ஏந்திய * நம்பி சரண் என்று *
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி * தரணியில் **
வேந்தர்கள் உட்க * விசயன் மணித் திண்தேர் *
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் * உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் (4)
111 nāntakam entiya * nampi caraṇ ĕṉṟu *
tāzhnta taṉañcayaṟku āki * taraṇiyil **
ventarkal̤ uṭka * vicayaṉ maṇit tiṇter *
ūrntavaṉ ĕṉṉaip puṟampulkuvāṉ * umparkoṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (4)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

111. “O lord with the sword Nāndagam, you are the best among men and my refuge, "said Arjunā and worshipped Him, the king of the gods, and asked for help. He drove Arjunā's strong jeweled chariot, terrified the enemy kings of the Pāndavās and defeated them. He, the king of gods embraces me from behind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாந்தகம் ஏந்திய நாந்தகம் என்னும் வாளை ஏந்திய; நம்பி! சரண் என்று கண்ணனே சரண் என்று; தாழ்ந்த வணங்கி நின்ற; தனஞ்சயற்கு ஆகி அர்ஜுனனுக்காக; தரணியில் இப்பூமியில்; வேந்தர்கள் வேந்தர்கள்; உட்க உளுத்துப் போவதற்கு; விசயன் மணித் திண் தேர் அர்ஜூனனின்; ஊர்ந்தவன் தேரை ஓட்டியவன்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்; உம்பர் கோன் தேவபிரான்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
taṉañcayaṟku āki Arjuna; tāḻnta bowed and; nampi! caraṇ ĕṉṟu Surrendered to Kannan; nāntakam entiya the Lord with Nāndagam sword; ūrntavaṉ He drove the charot; vicayaṉ maṇit tiṇ ter of Arjuna; uṭka to destroy; ventarkal̤ the enemy kings; taraṇiyil in this world; pulkuvāṉ He embrances me from; ĕṉṉaip puṟam my behind; umpar koṉ the divine Lord; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind

PAT 1.9.5

112 வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி *
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ் *
பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப * பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான் வாமனன்என்னைப்புறம்புல்குவான்.
112 வெண்கலப் பத்திரம் கட்டி * விளையாடி *
கண் பல செய்த * கருந்தழைக் காவின் கீழ் **
பண் பல பாடிப் * பல்லாண்டு இசைப்ப * பண்டு
மண் பல கொண்டான் புறம்புல்குவான் * வாமனன் என்னைப் புறம்புல்குவான் (5)
112 vĕṇkalap pattiram kaṭṭi * vil̤aiyāṭi *
kaṇ pala cĕyta * karuntazhaik kāviṉ kīzh **
paṇ pala pāṭip * pallāṇṭu icaippa * paṇṭu
maṇ pala kŏṇṭāṉ puṟampulkuvāṉ * vāmaṉaṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (5)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

112. Wearing a bronze leaf on the waist, singing songs under the flourishing groves that look like an umbrella of peacock feathers, he played. He is the one who measured the worlds once. He will embrace me from the back. He who came as Vāmanā will embrace me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெண்கல வெண்கலத்தால் செய்யப்பட்ட; பத்திரம் இலையை; கட்டி விளையாடி அரையில் கட்டிக் கொண்டு; கண் பல மயில் பீலிகளால்; பல செய்த உருவான குடை போன்ற; கருந்தழை அடர்ந்த சோலை; காவின் கீழ் நிழலின் கீழே; பண் பல பாடி பலவித பாடல்களைப் பாடி; பல்லாண்டு இசைப்ப மங்களசாஸனம் செய்ய; பண்டு முன்னொரு காலத்தில்; மண் பல கொண்டான் உலகங்களை அளந்தவன்; புறம் புல்குவான் என் முதுகை கட்டிக் கொள்வான்; வாமனன் வாமனப் பெருமான்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
pallāṇṭu icaippa Kannan; pattiram with leaf; vĕṇkala made of bronze; kaṭṭi vil̤aiyāṭi on His waist; paṇ pala pāṭi sang many songs; kāviṉ kīḻ in the shadow of; karuntaḻai dense groves; pala cĕyta that resembled an umbrella made of; kaṇ peacock feathers; paṇṭu once upon a time; maṇ pala kŏṇṭāṉ He measured the worlds; puṟam pulkuvāṉ He will embrace me from behind; vāmaṉaṉ He who came as Vamana; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind

PAT 1.9.6

113 சத்திரமேந்தித் தனியொருமாணியாய் *
உத்தரவேதியில் நின்றஒருவனை *
கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட *
பத்திராகாரன்புறம்புல்குவான் பாரளந்தான்என்புறம்புல்குவான்.
113 சத்திரம் ஏந்தித் * தனி ஒரு மாணியாய் *
உத்தர வேதியில் * நின்ற ஒருவனை **
கத்திரியர் காணக் * காணி முற்றும் கொண்ட *
பத்திராகாரன் புறம்புல்குவான் * பார் அளந்தான் என் புறம்புல்குவான் (6)
113 cattiram entit * taṉi ŏru māṇiyāy *
uttara vetiyil * niṉṟa ŏruvaṉai **
kattiriyar kāṇak * kāṇi muṟṟum kŏṇṭa *
pattirākāraṉ puṟampulkuvāṉ * pār al̤antāṉ ĕṉ puṟampulkuvāṉ (6)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

113. Carrying an umbrella, He took the form of a handsome dwarf bachelor and went to king Māhabali’s sacrifice, asked for a boon, and as all the kings looked on He measured the world, taking the earth, the sky and all lands He comes and embraces me from behind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சத்திரம் ஏந்தி கையில் குடை ஏந்தி; தனி ஒரு மாணியாய் தனி ஒருவனாக வாமனனாக; உத்தர வேதியில் மகாபலியின் வேள்வியில்; நின்ற ஒருவனை சென்றவவரை; கத்திரியர் காண க்ஷத்திரியர்கள் காணும்படி; காணி முற்றும் உலகம் முழுவதையும்; கொண்ட நீரை ஏற்று வாங்கிக் கொண்ட; பத்திராகாரன் மங்களகரமான புருஷன்; புறம் புல்குவான் என் முதுகை கட்டிக் கொள்வான்; பார் அளந்தான் ஏழுலகை அளந்த பெருமான்; என் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
taṉi ŏru māṇiyāy the One who came alone as Vamana; cattiram enti with an umbrella in His hand; uttara vetiyil to King Mahabali's sacrifice; kattiriyar kāṇa and in front of the kings who; niṉṟa ŏruvaṉai participated in it; pattirākāraṉ the auspicious Lord; kŏṇṭa measured; kāṇi muṟṟum the entire world; pār al̤antāṉ the One who measured all seven worlds; puṟam pulkuvāṉ He will embrace me from behind; pulkuvāṉ He will embrance me from; ĕṉ puṟam my behind

PAT 1.9.7

114 பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி *
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும் *
மெத்தத்திருவயிறார விழுங்கிய *
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆழியான்என்னைப்புறம்புல்குவான்.
114 பொத்த உரலைக் கவிழ்த்து * அதன்மேல் ஏறி *
தித்தித்த பாலும் * தடாவினில் வெண்ணெயும் **
மெத்தத் திருவயிறு * ஆர விழுங்கிய *
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் * ஆழியான் என்னைப் புறம்புல்குவான் (7)
114 pŏtta uralaik kavizhttu * ataṉmel eṟi *
tittitta pālum * taṭāviṉil vĕṇṇĕyum **
mĕttat tiruvayiṟu * āra vizhuṅkiya *
attaṉ vantu ĕṉṉaip puṟampulkuvāṉ * āzhiyāṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (7)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

114. Standing on the upturned, old mortar with holes, He stole the sweet milk and butter from the pot, swallowed it all till His divine stomach got filled. He comes and embraces me from behind. The lord with the discus (chakra), embraces me from behind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொத்த அடி பொத்தலாகிப் போன; உரலை உரலைக்; கவிழ்த்து கவிழ்த்து; அதன் மேல் அதன் மேல்; ஏறி ஏறி நின்று கொண்டு; தித்தித்த உறியில் உள்ள இனிப்பான; பாலும் பாலையும்; தடாவினில் தயிர்ப்பானயில் இருக்கும்; வெண்ணெயும் வெண்ணெயையும்; மெத்தத் திருவயிறு ஆர வயிறு நிறையும்படி; விழுங்கிய விழுங்கின; அத்தன் வந்து என்னை தலவன் வந்து என்னுடைய; புறம் புல்குவான் முதுகை கட்டிக் கொள்வான்; ஆழியான் அழகிய ஆழியைக் கையிலுடையவன்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
eṟi He stood; ataṉ mel on top of an; kaviḻttu upturned; uralai mortar; pŏtta with holes in the bottom; viḻuṅkiya and drank; pālum sweet milk; tittitta from pots containing it; vĕṇṇĕyum had butter; taṭāviṉil from pots containing it; mĕttat tiruvayiṟu āra till His divine stomach was full; attaṉ vantu ĕṉṉai He will come; puṟam pulkuvāṉ and embrace me from behind; āḻiyāṉ the One with discus in His hands; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind

PAT 1.9.8

115 மூத்தவைகாண முதுமணற்குன்றேறி *
கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி *
வாய்த்தமறையோர் வணங்க * இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
115 மூத்தவை காண * முது மணற்குன்று ஏறி *
கூத்து உவந்து ஆடிக் * குழலால் இசை பாடி **
வாய்த்த மறையோர் வணங்க * இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான் * எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (8)
115 mūttavai kāṇa * mutu maṇaṟkuṉṟu eṟi *
kūttu uvantu āṭik * kuzhalāl icai pāṭi **
vāytta maṟaiyor vaṇaṅka * imaiyavar
etta vantu ĕṉṉaip puṟampulkuvāṉ * ĕmpirāṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (8)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

115. For the elderly cowherds to see, He climbed on a sand hillock, danced a village dance (Koothu) with glee and played on the flute. The rishis and the gods who caught this divine sight worshipped and praised Him. He is my sweet child. He comes and embraces me from behind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூத்தவை வயதான முதியவர்களும்; காண பார்ப்பதற்காக; முது மணல் வெகுநாளாய் இருக்கும்; குன்று ஏறி மணல் குன்றில் ஏறி; கூத்து உவந்து ஆடி உவப்புடன் கூத்து ஆடி; குழலால் புல்லாங் குழலால்; இசைபாடி இசை எழுப்பி; வாய்த்த இக்காட்சியைக் காணும் வாய்ப்பைப் பெற்ற; மறையோர் வேத விற்பன்னர்கள்; வணங்க வணங்கிட; இமையவர் ஏத்த தேவர்கள் துதித்திட; வந்து என்னை என்னிடம் வந்து; புறம் புல்குவான் என் முதுகை கட்டிக் கொள்வான்; எம்பிரான் எம்பெருமான்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
mūttavai for elderly cowherds; kāṇa to see; kuṉṟu eṟi Kannan climbed on; mutu maṇal an old sand hillock; kūttu uvantu āṭi and danced a village dance with glee; icaipāṭi He played music; kuḻalāl with His flute; maṟaiyor the rishis; vāytta who got the opportunity to see this dance; vaṇaṅka worshipped Him; imaiyavar etta the devas sang praise; vantu ĕṉṉai He comes to me; puṟam pulkuvāṉ and embrace me from behind; ĕmpirāṉ My lord; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind

PAT 1.9.9

116 கற்பகக்காவு கருதியகாதலிக்கு *
இப்பொழுதுஈவநென்று இந்திரன்காவினில் *
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள் *
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
116 கற்பகக் காவு * கருதிய காதலிக்கு *
இப்பொழுது ஈவன் என்று இந் * திரன் காவினில் **
நிற்பன செய்து * நிலாத் திகழ் முற்றத்துள் *
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் * உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் (9)
116 kaṟpakak kāvu * karutiya kātalikku *
ippŏzhutu īvaṉ ĕṉṟu in * tiraṉ kāviṉil **
niṟpaṉa cĕytu * nilāt tikazh muṟṟattul̤ *
uyttavaṉ ĕṉṉaip puṟampulkuvāṉ * umparkoṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (9)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

116. When His beloved consort (Sathyabāmā) desired to have the Kalpaka tree, He promised to bring it from Indira's garden at once, brought it and planted it in her front yard where the moon shines. He embraces me from behind, The god of gods embraces me from behind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கற்பகக் காவு கற்பகச் சோலையை; கருதிய விரும்பிய தன்; காதலிக்கு காதலிக்கு சத்யபாமா; இப்பொழுது இப்போதே; ஈவன் கொண்டு வந்து தருவேன்; என்று இந்திரன் என்று இந்திரனின்; காவினில் வனத்திலிருந்து; நிற்பன செய்து கற்பக விருக்ஷத்தை; நிலாத் திகழ் நிலவொளி சூழ்ந்த; முற்றத்துள் முற்றத்தில் நட்டு; உய்த்தவன் வளரச் செய்தவன்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்; உம்பர் கோன் தேவர்கள் தலைவன்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
kātalikku for Sathyabama; karutiya who desired to have; kaṟpakak kāvu Kalpaka tree; īvaṉ Kannan brought it; ippŏḻutu immediately; ĕṉṟu intiraṉ from Indran's; kāviṉil garden; uyttavaṉ and planted; niṟpaṉa cĕytu Karpaka tree; muṟṟattul̤ in the frontyard where; nilāt tikaḻ the moon shines; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind; umpar koṉ the Leader of the devas; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind

PAT 1.9.10

117 ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய *
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து *
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர் *
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2)
117 ## ஆய்ச்சி அன்று * ஆழிப் பிரான் புறம்புல்கிய *
வேய்த் தடந்தோளி சொல் * விட்டுசித்தன் மகிழ்ந்து **
ஈத்த தமிழ் இவை * ஈரைந்தும் வல்லவர் *
வாய்த்த நன்மக்களைப் பெற்று * மகிழ்வரே (10)
117 ## āycci aṉṟu * āzhip pirāṉ puṟampulkiya *
veyt taṭantol̤i cŏl * viṭṭucittaṉ makizhntu **
ītta tamizh ivai * īraintum vallavar *
vāytta naṉmakkal̤aip pĕṟṟu * makizhvare (10)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

117. Yashodā, the cowherdess with round bamboo-like arms, described how the lord with the discus (chakra) embraced her from behind when he was a child. Vishnuchithan put Yashodā’s words into pāsurams. Those who recite these ten Tamil pāsurams will be blessed with good children and will live happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேய்த்த மூங்கில் போன்ற; தடந்தோளி மெல்லிய தோள்களையுடைய; ஆய்ச்சி அன்று யசோதை அன்று; ஆழி சக்கரத்தை; பிரான் கையிலுடைய கண்ணன்; புறம்புல்கிய புறம்புல்கியதைக் குறித்து; சொல் சொன்ன பாசுரங்களை; விட்டுசித்தன் மகிழ்ந்து பெரியாழ்வார் உவப்புடன்; ஈத்த தமிழ் அருளிய இந்த; இவை ஈரைந்தும் பத்துப் பாடல்களையும்; வல்லவர் ஓத வல்லவர்வர்கள்; வாய்த்த நன் மக்களை நல்ல புத்திரர்களை; பெற்று மகிழ்வர் அடைந்து மகிழ்ச்சி பெறுவார்கள்
āycci aṉṟu Yashoda who has; taṭantol̤i slender shoulders that were; veytta bamboo-like; pirāṉ described how Kannan; āḻi with discus in His hands; puṟampulkiya embranced her from behind; viṭṭucittaṉ makiḻntu Periyāzhvār with great delight; cŏl put these Yashoda's words into pasurams; vallavar those who recite; ivai īraintum these ten pasumrans; ītta tamiḻ written by Periyāzhvār; vāytta naṉ makkal̤ai will be blessed with good children; pĕṟṟu makiḻvar and will live happily