PAT 1.9.4

விசயன் தேர் ஊர்ந்தவன்

111 நாந்தகமேந்திய நம்பிசரணென்று *
தாழ்ந்த தனஞ்சயற்காகி * தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர் *
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
111 nāntakam entiya * nampi caraṇ ĕṉṟu *
tāzhnta taṉañcayaṟku āki * taraṇiyil **
ventarkal̤ uṭka * vicayaṉ maṇit tiṇter *
ūrntavaṉ ĕṉṉaip puṟampulkuvāṉ * umparkoṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (4)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

111. “O lord with the sword Nāndagam, you are the best among men and my refuge, "said Arjunā and worshipped Him, the king of the gods, and asked for help. He drove Arjunā's strong jeweled chariot, terrified the enemy kings of the Pāndavās and defeated them. He, the king of gods embraces me from behind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாந்தகம் ஏந்திய நாந்தகம் என்னும் வாளை ஏந்திய; நம்பி! சரண் என்று கண்ணனே சரண் என்று; தாழ்ந்த வணங்கி நின்ற; தனஞ்சயற்கு ஆகி அர்ஜுனனுக்காக; தரணியில் இப்பூமியில்; வேந்தர்கள் வேந்தர்கள்; உட்க உளுத்துப் போவதற்கு; விசயன் மணித் திண் தேர் அர்ஜூனனின்; ஊர்ந்தவன் தேரை ஓட்டியவன்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்; உம்பர் கோன் தேவபிரான்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
taṉañcayaṟku āki Arjuna; tāḻnta bowed and; nampi! caraṇ ĕṉṟu Surrendered to Kannan; nāntakam entiya the Lord with Nāndagam sword; ūrntavaṉ He drove the charot; vicayaṉ maṇit tiṇ ter of Arjuna; uṭka to destroy; ventarkal̤ the enemy kings; taraṇiyil in this world; pulkuvāṉ He embrances me from; ĕṉṉaip puṟam my behind; umpar koṉ the divine Lord; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind