சத்திரம் ஏந்தி தனியொரு மாணியாய் உத்தர வேதியில் நின்ற ஒருவனைக் கத்திரிவர் காண காணி முற்றும் கொண்ட பத்திர ஆகாரன் புறம் புல்குவான் பார் அளந்தான் என் புறம் புல்குவான் -1-9-6 –
பதவுரை
உத்தர வேதியில் நின்ற–உத்தர வேதியிலிருந்த ஒருவனை–(ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே சத்திரம்–குடையை ஏந்தி–(கையில்) பிடித்துக் கொண்டு தனி–ஒப்பற்ற ஒரு மாணி ஆய்–ஒரு ப்ரஹ்மசாரி வாமனனாய்