PAT 1.9.5

மண்பல கொண்ட வாமனன்

112 வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி *
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ் *
பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப * பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான் வாமனன்என்னைப்புறம்புல்குவான்.
112 vĕṇkalap pattiram kaṭṭi * vil̤aiyāṭi *
kaṇ pala cĕyta * karuntazhaik kāviṉ kīzh **
paṇ pala pāṭip * pallāṇṭu icaippa * paṇṭu
maṇ pala kŏṇṭāṉ puṟampulkuvāṉ * vāmaṉaṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (5)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

112. Wearing a bronze leaf on the waist, singing songs under the flourishing groves that look like an umbrella of peacock feathers, he played. He is the one who measured the worlds once. He will embrace me from the back. He who came as Vāmanā will embrace me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெண்கல வெண்கலத்தால் செய்யப்பட்ட; பத்திரம் இலையை; கட்டி விளையாடி அரையில் கட்டிக் கொண்டு; கண் பல மயில் பீலிகளால்; பல செய்த உருவான குடை போன்ற; கருந்தழை அடர்ந்த சோலை; காவின் கீழ் நிழலின் கீழே; பண் பல பாடி பலவித பாடல்களைப் பாடி; பல்லாண்டு இசைப்ப மங்களசாஸனம் செய்ய; பண்டு முன்னொரு காலத்தில்; மண் பல கொண்டான் உலகங்களை அளந்தவன்; புறம் புல்குவான் என் முதுகை கட்டிக் கொள்வான்; வாமனன் வாமனப் பெருமான்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
pallāṇṭu icaippa Kannan; pattiram with leaf; vĕṇkala made of bronze; kaṭṭi vil̤aiyāṭi on His waist; paṇ pala pāṭi sang many songs; kāviṉ kīḻ in the shadow of; karuntaḻai dense groves; pala cĕyta that resembled an umbrella made of; kaṇ peacock feathers; paṇṭu once upon a time; maṇ pala kŏṇṭāṉ He measured the worlds; puṟam pulkuvāṉ He will embrace me from behind; vāmaṉaṉ He who came as Vamana; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind