PAT 1.9.8

மறையோர் வணங்கும் எம்பிரான்

115 மூத்தவைகாண முதுமணற்குன்றேறி *
கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி *
வாய்த்தமறையோர் வணங்க * இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
115 mūttavai kāṇa * mutu maṇaṟkuṉṟu eṟi *
kūttu uvantu āṭik * kuzhalāl icai pāṭi **
vāytta maṟaiyor vaṇaṅka * imaiyavar
etta vantu ĕṉṉaip puṟampulkuvāṉ * ĕmpirāṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (8)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

115. For the elderly cowherds to see, He climbed on a sand hillock, danced a village dance (Koothu) with glee and played on the flute. The rishis and the gods who caught this divine sight worshipped and praised Him. He is my sweet child. He comes and embraces me from behind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூத்தவை வயதான முதியவர்களும்; காண பார்ப்பதற்காக; முது மணல் வெகுநாளாய் இருக்கும்; குன்று ஏறி மணல் குன்றில் ஏறி; கூத்து உவந்து ஆடி உவப்புடன் கூத்து ஆடி; குழலால் புல்லாங் குழலால்; இசைபாடி இசை எழுப்பி; வாய்த்த இக்காட்சியைக் காணும் வாய்ப்பைப் பெற்ற; மறையோர் வேத விற்பன்னர்கள்; வணங்க வணங்கிட; இமையவர் ஏத்த தேவர்கள் துதித்திட; வந்து என்னை என்னிடம் வந்து; புறம் புல்குவான் என் முதுகை கட்டிக் கொள்வான்; எம்பிரான் எம்பெருமான்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
mūttavai for elderly cowherds; kāṇa to see; kuṉṟu eṟi Kannan climbed on; mutu maṇal an old sand hillock; kūttu uvantu āṭi and danced a village dance with glee; icaipāṭi He played music; kuḻalāl with His flute; maṟaiyor the rishis; vāytta who got the opportunity to see this dance; vaṇaṅka worshipped Him; imaiyavar etta the devas sang praise; vantu ĕṉṉai He comes to me; puṟam pulkuvāṉ and embrace me from behind; ĕmpirāṉ My lord; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind