PAT 1.9.2

எம்பிரான் கண்ணன்

109 கிங்கிணிகட்டிக் கிறிகட்டி * கையினில்
கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி *
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து *
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
109 kiṇkiṇi kaṭṭik * kiṟi kaṭṭik * kaiyiṉil *
kaṅkaṇam iṭṭuk * kazhuttil tŏṭar kaṭṭi **
taṉ kaṇattāle * catirā naṭantu vantu *
ĕṉ kaṇṇaṉ ĕṉṉaip puṟampulkuvāṉ * ĕmpirāṉ ĕṉṉaip puṟampulkuvāṉ (2)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

109. My dear child Kannan, wears jingling bells on His waist, coral bracelets on His wrists, Kankan on His shoulders and with many more ornaments, dances and comes walking beautifully and embraces me from behind. My lovely child, embraces me from behind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கிங்கிணி கட்டி இடுப்பில் சதங்கையைக் கட்டி; கிறி கட்டி கையினிற் பவளத்தை முன் கையினில் கட்டி; கங்கணம் இட்டு புஜத்தில் கங்கணம் கட்டி; கழுத்தில் தொடர் கட்டி கழுத்தில் சங்கிலி அணிந்து; தன் கணத்தாலே மற்ற ஆபரணங்களுடன்; சதிரா நடந்து வந்து நளினமாக நடந்து வந்து; என் கண்ணன் என் கண்மணி; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்; எம்பிரான் என் பெருமான்; என்னைப் புறம் என் முதுகை; புல்குவான் கட்டிக் கொள்வான்
ĕṉ kaṇṇaṉ my Kannan; kiṅkiṇi kaṭṭi wears jingling bells on His waist; kiṟi kaṭṭi kaiyiṉiṟ coral bracelets on His wrists; kaṅkaṇam iṭṭu Kankan on His shoulders; kaḻuttil tŏṭar kaṭṭi chain on His neck; taṉ kaṇattāle and other ornaments; catirā naṭantu vantu comes walking beautifully; pulkuvāṉ embrances me from; ĕṉṉaip puṟam my behind; ĕmpirāṉ my Lord; pulkuvāṉ He will embrance me from; ĕṉṉaip puṟam my behind