நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –
ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய வேய்த்தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழ் ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களை பெற்று மகிழ்வரே -1 9-10 – –
பதவுரை
வேய்–மூங்கில் போன்ற தடந்–பெரிய தோளி–தோள்களை யுடையனான ஆய்ச்சி–யசோதை யானவன் ஆழிப் பிரான்–சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன் அன்று–அக் காலத்திலே