Chapter 2

As Parānkusa nāyaki is infatuated with Sri Ranganātha, her mother enquires the Lord regarding His intentions towards her daughter- (கங்குலும் பகலும்)

திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்பதைக் கண்ட தாய் அரங்கரைப் பார்த்து வினாவுதல் (திருவரங்கம்)
These divine hymns elaborate on the depth of love Āzhvār has on Sri Ranganāthan. They are also based on the mother’s point of view elaborating parānkusa nāyaki’s state of mind as a plea to Sri Ranganāthan (nAyakan).
நம்மாழ்வார் ஸ்ரீ ரங்கநாதனிடம் கொண்டிருக்கும் ஈடுபாட்டின் மிகுதியை இப்பகுதி கூறுகிறது. ஆழ்வாராகிய தலைவியின் நிலையைக் கண்ணுற்ற தாய் அரங்கராகிய தலைவரைப் பார்த்து வினவுதல்போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.
Verses: 3464 to 3474
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கராகம்
Timing: 6.00-7.30 PM
Recital benefits: will reach the blue sky with clouds and stay with the god in a flood of bliss
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 7.2.1

3464 கங்குலும்பகலும்கண்துயிலறியாள்
கண்ணநீர்கைகளாலிறைக்கும் *
சங்குசக்கரங்களென்றுகைகூப்பும்
தாமரைக்கண்ணென்றேதளரும் *
எங்ஙனேதரிக்கேன்உன்னைவிட்டு? என்னும்
இருநிலம்கைதுழாவிருக்கும் *
செங்கயல்பாய்நீர்த்திருவரங்கத்தாய்!
இவள்திறத்தென்செய்கின்றாயே? (2)
3464 ## கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் *
கண்ண நீர் கைகளால் இறைக்கும் *
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் *
தாமரைக் கண் என்றே தளரும் **
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும் *
இரு நிலம் கை துழா இருக்கும் *
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் ! *
இவள் திறத்து என் செய்கின்றாயே? (1)
3464 ## kaṅkulum pakalum kaṇ tuyil aṟiyāl̤ *
kaṇṇa nīr kaikal̤āl iṟaikkum *
caṅku cakkaraṅkal̤ ĕṉṟu kai kūppum *
tāmaraik kaṇ ĕṉṟe tal̤arum **
ĕṅṅaṉe tarikkeṉ uṉṉaiviṭṭu? ĕṉṉum *
iru nilam kai tuzhā irukkum *
cĕṅkayal pāy nīrt tiruvaraṅkattāy ! *
ival̤ tiṟattu ĕṉ cĕykiṉṟāye? (1)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

Oh, Lord reclining in Tiruvaraṅkam where water flows abundantly, and gay fish gambol, this lady knows no sleep day and night. Tears flow in torrents from her eyes, and she bails them out with her palms joined. With joined palms, she utters, "Oh conch," "Oh discus," "these are the lotus eyes," and reels. She gropes all over the earth for her Lord, from whom she cannot bear being apart. What indeed do You intend to do with her?

Explanatory Notes

(i) The worldlings are steeped in sleep, both day and night, while the Celestials in spiritual world have neither nights nor sleep. The Nāyakī also knows no sleep, like the Celestials. It is said that she knows no sleep instead of saying that she doesn’t sleep, because when in communion with the Lord, He wouldn’t allow her to sleep and, when away from Him, she is so disconsolate + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கங்குலும் பகலும் இரவும் பகலும்; கண் துயில் தூங்கவேண்டும் என்பதையே; அறியாள் அறியாதவளாக இருக்கிறாள்; கண்ண நீர் கண்களிலிருந்து பெருகும் நீரை; கைகளால் இறைக்கும் கைகளால் இறைக்கிறாள்; சங்கு சக்கரங்கள் சங்கு சக்கரங்கள்; என்று கை கூப்பும் என்று கை கூப்பி வணங்குகிறாள்; தாமரைக் கண் தாமரைக் கண்களன்றோ இவை!; என்றே தளரும் என்று சொல்லித் தளர்கிறாள்; உன்னை விட்டு உன்னைவிட்டுப் பிரிந்து; எங்ஙனே தரிக்கேன்? தரிக்கவும் முடியுமோ?; என்னும் என்கிறாள்; இரு நிலம் பரந்த பூமியை; கை துழா இருக்கும் கைகளாலே துழாவுகிறாள்; செங்கயல் கயல் மீன்கள்; பாய் நீர் பாயும் நீர் நிறைந்த; திருவரங்கத்தாய்! திருவரங்கத்தில் இருப்பவனே!; இவள் திறத்து இவள் விஷயத்தில்; என் செய்கின்றாயே? என்ன செய்வதாக இருக்கிறாய்?
kaṇ eyes; thuyil to sleep; aṛiyāl̤ does not even realise;; kaṇṇa nīr tears; kaigal̤āl with her hands; iṛaikkum removing them; sangu chakkarangal̤ ṣanka (conch) and chakra (disc); enṛu saying; kai kūppum she would perform anjali which she would do upon his arrival;; thāmarai lotus like; kaṇ eye; enṛĕ saying that; thal̤arum would become tired;; unnai you (who have such beautiful weapons and limbs); vittu without; enganĕ how; dharikkĕn will ī sustain?; ennum will say;; iru nilam the whole ground; kai with her hand; thuzhā search; irukkum will remain in an inactive state (due to not having strength for searching the land too);; sem reddish due to youthful state; kayal fish; pāy jumping around; nīr having water; thiruvarangaththāy oh one who is residing in kŏyil (ṣrīrangam)!; ival̤ thiṛaththu this girl who is having these amaśing emotions; en what; seyginṛāy are you planning to do?; en (first) making me existing for you only; thāmarai very enjoyable (to cause desire in me)

TVM 7.2.2

3465 என்செய்கின்றாய்? என்தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர்மல்கவிருக்கும் *
என்செய்கேன்? எறிநீர்த்திருவரங்கத்தாய்
என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்துருகும் *
முன்செய்தவினையே! முகப்படாயென்னும்
முகில்வண்ணா! தகுவதோ? என்னும் *
முன்செய்திவ்வுலகமுண்டுமிழ்ந்தளந்தாய்
எங்கொலோமுடிகின்றதிவட்கே?
3465 என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா?
என்னும் * கண்ணீர் மல்க இருக்கும் *
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்?
என்னும் * வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் **
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் *
முகில்வண்ணா தகுவதோ? என்னும் *
முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் *
என்கொலோ முடிகின்றது இவட்கே? (2)
3465 ĕṉ cĕykiṉṟāy ĕṉ tāmaraik kaṇṇā?
ĕṉṉum * kaṇṇīr malka irukkum *
ĕṉ cĕykeṉ ĕṟi nīrt tiruvaraṅkattāy?
ĕṉṉum * vĕvvuyirttu uyirttu urukum **
muṉ cĕyta viṉaiye mukappaṭāy ĕṉṉum *
mukilvaṇṇā takuvato? ĕṉṉum *
muṉ cĕytu iv ulakam uṇṭu umizhntu al̤antāy *
ĕṉkŏlo muṭikiṉṟatu ivaṭke? (2)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Reference Scriptures

BG. 9-34, 18-66

Divya Desam

Simple Translation

The lady, with tears filling her eyes, questions, "My lotus-eyed Lord, what will You do for me?" She stands still and asks again, "What must I do to reach You, Lord of Tiruvaraṅkam, a place with surging waters?" Panting and breathing heavily, she pleads, "Come before me, my past sins," to the cloud-hued Lord, expressing tension. She wonders if this is all His mercy. Oh Lord, who created, preserved, and did many such things to protect the worlds, what will happen next?

Explanatory Notes

(i) The Nāyakī would like to know what those massive sins committed by her, are, which stand between her and the Lord. That only shows, she is painfully conscious of the fact that she has to face the consequences of her past sins, instead of blaming the Lord. But then, the cloud-hued Lord, known for His munificence like the rain-clouds, could, in the exercise of His quality + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் தாமரைக் கண்ணா என் தாமரைக் கண்ணா; என் செய்கின்றாய்? நீ என்ன செய்ய நினைக்கிறாய்?; என்னும் என்பாள்; கண்ணீர் கண்களில் நீர்; மல்க இருக்கும் நிறையும்படி இருக்கிறாள்; என் செய்கேன் நான் என்ன செய்வேன்; எறி நீர் அலைகள் வீசும் நீர் சூழ்ந்த; திருவரங்கத்தாய்! திருவரங்கத்தில் இருப்பவனே!; என்னும் வெவ்வுயிர்த்து வெப்பமாகப் பலகாலும்; உயிர்த்து உருகும் பெரு மூச்சு விட்டு உருகுகிறாள்; முன் செய்த முற்பிறவிகளிலே நான் பண்ணின; வினையே! பாவமே என்று வருந்துகிறாள் அவைகளே; முகப்படாய் என் கண்முன்னே வந்து நிற்கின்றனவோ; என்னும் என்கிறாள்; முகில்வண்ணா! முகில்வண்ணா!; தகுவதோ? நீ செய்வது தகுந்தது தானோ?; என்னும் என்கிறாள்; இவ்வுலகம் இந்த உலகங்களை எல்லாம்; முன் செய்து முன்பு படைத்து; உண்டு உமிழ்ந்து உண்டு உமிழ்ந்து; அளந்தாய்! அளந்தவனே!; என் கொலோ இவள் நிலை; முடிகின்றது இவட்கே? எவ்வாறு முடியுமோ?
kaṇṇā ŏh one who is having eyes!; en seyginṛāy what are you thinking to do?; ennum says;; kaṇ eye; nīr tears; malga to overflow; irukkum remain put being unable to move;; eṛi with rising waves; nīr having water; thiruvarangaththāy ŏh one who resides in kŏyil (ṣrīrangam)!; en what; seygĕn shall ī do?; ennum says;; vev (due to inward heat) to become hot; uyirththu uyirththu repeatedly breathing heavily; urugum will melt due to that situation;; mun previously; seydha (ī) committed; vinaiyĕ karma (virtues/vices); mugappadāy appearing in front; ennum says considering the karma to be a chĕthana (sentient being) due to its act of causing harm;; mugilvaṇṇā ŏh one who is magnanimous like clouds which pour the rain without distinguishing between land and water!; thaguvadhŏ does it match (such magnanimity)?; ennum says;; i this; ulagam world; mun first; seydhu created; uṇdu consumed (during deluge); umizhndhu spat out; al̤andhāy ŏh one who measured and accepted!; ivatku for her (who cannot survive without you); en how; mudiginṛadhu kolŏ is it going to end?; iṛaiyum even a little bit; vatku shyness which is her identity

TVM 7.2.3

3466 வட்கிலளிறையும் மணிவண்ணா! என்னும்
வானமேநோக்கும்மையாக்கும் *
உட்குடையசுரருயிரெல்லாமுண்ட
ஒருவனே! என்னும்உள்ளுருகும் *
கட்கிலீ! உன்னைக்காணுமாறருளாய்
காகுத்தா! கண்ணனே! என்னும் *
திட்கொடிமதிள்சூழ்திருவரங்கத்தாய்?
இவள்திறத்தென்செய்திட்டாயே?
3466 வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும் *
வானமே நோக்கும் மையாக்கும் *
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட *
ஒருவனே என்னும் உள் உருகும் **
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் *
காகுத்தா கண்ணனே என்னும் *
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! *
இவள்திறத்து என் செய்திட்டாயே? (3)
3466 vaṭku ilal̤ iṟaiyum maṇivaṇṇā ĕṉṉum *
vāṉame nokkum maiyākkum *
uṭku uṭai acurar uyir ĕllām uṇṭa *
ŏruvaṉe ĕṉṉum ul̤ urukum **
kaṭkilī uṉṉaik kāṇumāṟu arul̤āy *
kākuttā kaṇṇaṉe ĕṉṉum *
tiṇ kŏṭi matil̤ cūzh tiruvaraṅkattāy! *
ival̤tiṟattu ĕṉ cĕytiṭṭāye? (3)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

Shaking off all reserve, this lady calls out, "Oh, Lord of sapphire hue," and gazes at the sky, longing for the unique One who slew formidable Asuras. Melting down, she prays, "Oh, invisible Lord, You incarnated as Rama and Krishna, make Yourself visible to me now." Oh Lord, reclining in Tiruvaraṅkam, the strong-walled city, what have You done for this girl?

Explanatory Notes

(i) The mother is amazed at the complete lack of the innate modesty on the part of her love-intoxicated daughter, her calling out loudly the name of her spouse and that too, the one indicative of His bewitching Form which she ought to enjoy secretly at heart.

(ii) The Lord, who slew the Asuras and relieved the distress of the Devas, notoriously selfish, should certainly + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இறையும் சிறிதும்; வட்கு இலள் நாணமில்லாதவளாக இருக்கிறாள்; மணிவண்ணா! என்னும் மணிவண்ணா! என்கிறாள்; வானமே ஆகாசத்தையே கஜேந்திரனுக்கு வந்தது போல்; நோக்கும் வருவாயோ என்று பார்த்துக் கொண்டிருப்பாள்; மையாக்கும் வராததனால் மயங்குவாள்; உட்கு உடை வலிமை உடைய; அசுரர் உயிர் அசுரர்களின் உயிர்களை; எல்லாம் உண்ட எல்லாம் உண்ட; ஒருவனே! என்னும் ஒருவனே! என்பாள்; உள் உருகும் மனம் உருகிப் போவாள்; கட்கிலீ! கண்களுக்கு விஷயமாகாதவனே!; காகுத்தா! ராமனே என்றும்; கண்ணனே! என்னும் கண்ணனே! என்றும்; உன்னை காணுமாறு உன்னைக் காணுமாறு; அருளாய் அருள் புரிய வேண்டும் என்பாள்; திண்கொடி திடமான கொடிகள் விளங்கும்; மதிள் சூழ் மதிள்களால் சூழ்ந்த; திருவரங்கத்தாய்! திருவரங்கத்தில் இருப்பவனே!; இவள் திறத்து இவள் விஷயத்தில்; என் செய்திட்டாயே? நீ என்ன செய்தாய்?
ilal̤ she is not having;; maṇivaṇṇā ŏh one who is obedient to me like a blue gem which can be placed in the pocket!; ennum says;; vānamĕ sky; nŏkkum looks up;; maiyākkum becomes unconscious;; utku pride; udai having; asurar demoniac person-s; uyir life; ellām without any remainder; uṇda swallowed; oruvanĕ oh independently valorous person!; ennum says;; ul̤ inside; urugum breaks down;; katku by the eye; ilee oh one who is difficult to be seen!; unnai you (who cannot be missed to be seen for my survival); kāṇumāṛu to be seen; arul̤āy kindly be merciful;; kāguththā as the divine son of dhaṣaratha who manifested himself to those belonging to cities and forests as said in -pumsām dhrushti chiththāpahāriṇām- and -dhadhruṣu: vismithākārā:- respectively; kaṇṇanĕ did you not incarnate as krishṇa who manifested your beauty to cowherd girls as said in -thāsām āvirabhūth-?; ennum says;; thiṇ firm; kodi having flag; madhil̤ fort; sūzh surrounded; thiruvarangaththāy oh one who is residing in kŏyil (ṣrīrangam)!; ival̤ thiṛaththu to put her in sorrow; en seythittāy what did you do?; itta itta wherever placed; kāl leg

TVM 7.2.4

3467 இட்டகாலிட்டகையளாயிருக்கும்
எழுந்துலாய்மயங்கும்கைகூப்பும் *
கட்டமேகாதலென்றுமூர்ச்சிக்கும்
கடல்வண்ணா! கடியைகாணென்னும் *
வட்டவாய்நேமிவலங்கையா! என்னும்
வந்திடாயென்றென்றேமயங்கும் *
சிட்டனே! செழுநீர்த்திருவரங்கத்தாய்!
இவள்திறத்தென்சிந்தித்தாயே?
3467 இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் *
எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் *
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் *
கடல்வண்ணா கடியைகாண் என்னும் **
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் *
வந்திடாய் என்று என்றே மயங்கும் *
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் *
இவள்திறத்து என் சிந்தித்தாயே? (4)
3467 iṭṭa kāl iṭṭa kaiyal̤āy irukkum *
ĕzhuntu ulāy mayaṅkum kai kūppum *
kaṭṭame kātal ĕṉṟu mūrccikkum *
kaṭalvaṇṇā kaṭiyaikāṇ ĕṉṉum **
vaṭṭa vāy nemi valaṅkaiyā ĕṉṉum *
vantiṭāy ĕṉṟu ĕṉṟe mayaṅkum *
ciṭṭaṉe cĕzhu nīrt tiruvaraṅkattāy *
ival̤tiṟattu ĕṉ cintittāye? (4)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

At times, this lady remains motionless, while at other times she moves about. Sometimes she seems insensate but is still seen with joined palms. She swoons, exclaiming that the love of God is hard to endure, and she feels that the sea-hued Lord is too severe unto her. She calls out many times to the Lord who wields the discus in his right hand, fainting when He does not come. Oh immaculate Lord reclining in fertile Tiruvaraṅkam, what do You contemplate for her?

Explanatory Notes

(i) The Nāyakī, intoxicated with God-love, exhibits the same behaviour as those struck by Śrī Rāma’s mighty arrows. The targets of those arrows will be severally seen fainting with pain, tortured or running about here and there in great fright. So also, the Nāyakī is at times insensate, sometimes, she moves about here and there agitated, and at other times, feels tortured + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இட்ட கால் இட்ட கையளாய் கை கால்கள் கிடந்தபடியே; இருக்கும் என் பெண் உணர்வில்லாமல் இருக்கிறாள்; எழுந்து உலாய் எழுந்து உலாவுகிறாள்; மயங்கும் மயங்குகிறாள்; கை கூப்பும் கைகளைக் கூப்பித் தொழுகிறாள்; கட்டமே காதல் என்று காதல் துன்பமே என்று கூறி; மூர்ச்சிக்கும் மூர்ச்சிக்கிறாள்; கடல்வண்ணா! கடல்வண்ணா!; கடியைகாண் என் விஷயத்தில் நீ கடுமையானவனாக; என்னும் இருக்கிறாயே என்கிறாள்; வட்டவாய் வட்டமான கூர்மை உடைய; நேமி சக்கரத்தை; வலங்கையா! வலது கையில் உடையவனே!; என்னும் என்கிறாள்; வந்திடாய் என்று வாராய் வாராய் என்று; என்றே மயங்கும் அழைத்து மயங்குகிறாள்; சிட்டனே! பரமபவித்திரனே!; செழு நீர் நீர்வளம் பொருந்திய கோயிலில்; திருவரங்கத்தாய்! திருவரங்கத்தில் இருப்பவனே!; இவள் திறத்து இவள் விஷயத்தில்; என் சிந்தித்தாயே? ஏதாவது சிந்தித்தாயா?
kaiyal̤ and hand; āy having; irukkum remains;; ezhundhu stands up, after regaining consciousness; ulāy walks around;; mayangum subsequently becomes unconscious;; kai kūppum performs anjali (joined palms);; kādhal love; kattamĕ is difficult to handle; enṛu becoming upset; mūrchchikkum loses conscious;; kadalvaṇṇā oh one who is like immeasurable ocean which secures everything inside it!; kadiyai kāṇ ẏou are being cruel towards me!; ennum says;; vatta vāy wholesome; nĕmi divine chakra; valam kaiyā oh one who is having in your right hand!; ennum says;; vandhidāy come here with the divine chakra in your hand; enṛu enṛĕ repeatedly requesting; mayangum loses her mind thinking -ī lost my nature due to repeatedly calling him, and lost the desire/goal as he did not come-;; sittanĕ pretending to be a reputed person; sezhu nīrth thiruvarangaththāy oh one who is reclining on the beautiful banks of the river [kāvĕri]!; ival̤ thiṛaththu in her case (where she is bewildered in separation); en what; sindhiththāy are you thinking?; andhi sandhyā (dusk); pŏdhu in the particular time

TVM 7.2.5

3468 சிந்திக்கும்திசைக்கும்தேறும்கை கூப்பும்
திருவரங்கத்துள்ளாய்! என்னும்
வந்திக்கும் * ஆங்கேமழைக்கண்ணீர்மல்க
வந்திடாயென்றென்றேமயங்கும் *
அந்திப்போதவுணனுடலிடந்தானே!
அலைகடல்கடைந்தவாரமுதே *
சந்தித்துன்சரணம்சார்வதேவலித்த
தையலைமையல்செய்தானே!
3468 சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் *
திருவரங்கத்துள்ளாய்! என்னும்
வந்திக்கும் * ஆங்கே மழைக்கண் நீர் மல்க *
வந்திடாய் என்று என்றே மயங்கும் **
அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே *
அலை கடல் கடைந்த ஆர் அமுதே *
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த *
தையலை மையல் செய்தானே (5)
3468 cintikkum ticaikkum teṟum kai kūppum *
tiruvaraṅkattul̤l̤āy! ĕṉṉum
vantikkum * āṅke mazhaikkaṇ nīr malka *
vantiṭāy ĕṉṟu ĕṉṟe mayaṅkum **
antippotu avuṇaṉ uṭal iṭantāṉe *
alai kaṭal kaṭainta ār amute *
cantittu uṉ caraṇam cārvate valitta *
taiyalai maiyal cĕytāṉe (5)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

Oh, Lord, You tore off Avuṇaṉ’s body at twilight, and You are the insatiable Nectar that churned the ocean. You have stolen the heart of this lady, who is resolved to join You and stay at Your feet. She dwindles in contemplation of her past union with You. Suddenly, she rallies round, with joined palms and head bent, and calls out, "Oh, Lord in Tiruvaraṅkam," as tears rain from her eyes. "You haven’t come, You haven’t come," she utters before fainting.

Explanatory Notes

(i) Turning the searchlight inward, the Nāyakī finds that a soul, badly caught up in the vortex of worldly life, with its terrific involvement in a recurring cycle of birth and death, was attracted by the Lord’s bewitching eyes, had the blissful union with Him for a while, only to be deserted by Him as at present. Contemplating thus, she breaks down and even then, her + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அந்திப் போது மாலைப் பொழுதில்; அவுணன் இரணியனின்; உடல் இடந்தானே! உடலைப் பிளந்தவனே!; அலை கடல் கடைந்த அலை கடலைக் கடைந்த; ஆர் அமுதே! ஆர் அமுதே; சந்தித்து உன்னை சந்தித்து உன்னுடன் சேர்ந்து; உன் சரணம் உன் திருவடிகளில் சரணமடைய; சார்வதே வலித்த உறுதி கொண்ட; தையலை இப்பெண்ணை; மையல் செய்தானே! மயங்கும்படி செய்தவனே!; சிந்திக்கும் சிந்தித்திருப்பாள்; திசைக்கும் தேறும் அறிவு கெடுவாள் திடீரென்று தெளிவாள்; கை கூப்பும் கைகளைக் கூப்பி வணங்குவாள்; திருவரங்கத்து திருவரங்கத்தில்; உள்ளாய்! என்னும் இருப்பவனே! என்பாள்; வந்திக்கும் தலையாலே வணங்குவாள்; ஆங்கே மழை அங்கேயே மழை பொழிவது போல்; கண் நீர் மல்க கண்ணீர் பெருக நின்று; வந்திடாய் என்று என்றே வருவாய் வருவாய் என்று; மயங்கும் கூறி மயங்குவாள்
avuṇan hiraṇya, the asura (demon), his; udal body; idandhānĕ one who tore apart; alai having waves; kadal ocean; kadaindha churned; āramudhĕ being infinitely enjoyable; sandhiththu meeting, to have external experience; un charaṇamĕ your divine feet only; sārvadhu to unite and enjoy; valiththa having perfectly fit form; thaiyalai this girl; maiyal seydhānĕ oh one who bewildered!; sindhikkum thinks about how you united with her previously;; thisaikkum (since she cannot experience it immediately) becomes bewildered;; thĕṛum regains composure;; kai kūppum performs anjali;; thiruvarangaththu in kŏyil (ṣrīrangam); ul̤l̤āy ŏh one who is reclining!; ennum calls saying [that];; vandhikkum (thinking about your beauty) she bows her head;; angĕ remaining there itself; mazhai cool; kaṇṇīr malga to have eyes filled with tears; vandhidāy come and accept me; enṛu enṛĕ repeatedly saying; mayangum becomes unconscious (since her desire is not fulfilled).; ennai me; maiyal seydhu causing bewilderment

TVM 7.2.6

3469 மையல்செய்தென்னைமனம்கவர்ந்தானே! என்னும் மாமாயனே! என்னும் *
செய்யவாய்மணியே! என்னும் தண்புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும் *
வெய்யவாள்தண்டுசங்குசக்கரம்வில்லேந்தும் விண்ணோர்முதல்! என்னும் * பைகொள்பாம்பணையாய்! இவள்திறத்தருளாய் பாவியேன்செயற்பாலதுவே.
3469 மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் * மா மாயனே என்னும் *
செய்ய வாய் மணியே என்னும் * தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் **
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் * விண்ணோர் முதல் என்னும்; *
பை கொள் பாம்பு அணையாய் இவள்திறத்து அருளாய் * பாவியேன் செயற்பாலதுவே (6)
3469 maiyal cĕytu ĕṉṉai maṉam kavarntāṉe ĕṉṉum * mā māyaṉe ĕṉṉum *
cĕyya vāy maṇiye ĕṉṉum * taṇ puṉal cūzh tiruvaraṅkattul̤l̤āy ĕṉṉum **
vĕyya vāl̤ taṇṭu caṅku cakkaram vil entum * viṇṇor mutal ĕṉṉum; *
pai kŏl̤ pāmpu aṇaiyāy ival̤tiṟattu arul̤āy * pāviyeṉ cĕyaṟpālatuve (6)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

This sinner can guide her daughter to understand the divine qualities and manifestations of Lord Padmanabhan, who reclines amid cool waters, depicted as Araṅkaṉ. She can teach her daughter to appreciate the Lord's enticing nature, the wonders He performs, and His divine attributes, such as his sapphire hue and his role as the Chief of Nithyasuris, wielding powerful weapons.

Explanatory Notes

The mother says unto Lord Raṅganāthā;

“My daughter keeps wondering how you stole her heart, by engendering in her enormous love, how, during your union with her, you worked many wonders such as exhibiting your loving condescension of amazing magnitude, how you enthralled her by your exquisite physical charm, your red lips and sapphire hue, how you don’t come unto her, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மையல் செய்து என்னை மயங்கச் செய்து; என்னை மனம் என் மனம்; கவர்ந்தானே! என்னும் கவர்ந்தானே! என்பாள்; மா மாயனே! என்னும் மா மாயனே! என்பாள்; செய்யவாய் சிவந்த அதரத்தை உடைய; மணியே! நீலமணி போன்றவனே!; என்னும் என்பாள்; தண் புனல் சூழ் குளிர்ந்த நீர் நிலைகள் சூழ்ந்த; திருவரங்கத்து உள்ளாய்! திருவரங்கத்தில் உள்ளாய்!; என்னும் என்பாள்; வெய்ய வாள் தண்டு கொடிய வாள் கதை; சங்கு சக்கரம் வில் சங்கு சக்கரம் வில்; ஏந்தும் ஆகியவற்றை ஏந்தும்; விண்ணோர் முதல்! விண்ணோர் முதல்வனே!; என்னும் என்பாள்; பை கொள் படங்களை உடைய; பாம்பு ஆதிசேஷன் மீது; அணையாய்! சயனித்திருப்பவனே!; பாவியேன் பாவியான என் பெண்ணின்; இவள் திறத்து விஷயத்தில்; செய்ய நான் செய்யக் கூடியது ஏதாவது; பாலதுவே இருந்தால் அதை; அருளாய் அருளிச் செய்ய வேண்டும் என்கிறாள் தாயார்
manam heart; kavarndhānĕ oh one who stole!; ennum says;; māmāyanĕ having infinite, amaśing activities in order to cause bewilderment in me; ennum says; seyya reddish; vāy having beautiful lips; maṇiyĕ oh one who is easy to handle like a precious gemstone!; ennum says;; thaṇ (to reach you and eliminating my suffering, being) cool; punal water; sūzh surrounded; thiruvarangaththu in kŏyil (ṣrīrangam); ul̤l̤āy oh one who is residing!; ennum says;; veyya very angry towards enemies; vāl̤ thaṇdu sangu chakkaram vil the five divine weapons; ĕndhum carrying them always as someone who cannot delay the protection of the surrendered ones; viṇṇŏr letting the nithyasūris enjoy; mudhal oh one who is the cause for their existence etc!; ennum says;; pai expanded hoods, due to being in contact with you; kol̤ having; pāmbu thiruvananthāzhwān (who is having infinite enjoyability due to its natural tenderness, coolness, fragrance); aṇaiyāy oh one who is having as mattress!; ival̤ thiṛaththu towards her (who is suffering due to lying on the ground, while you are comfortably resting on the mattress); pāviyĕn ī who am having sins which made me witness her such pathetic state; seyaṛpāladhu the act; arul̤āy mercifully say.; ennudai my; kŏmal̤am tender natured

TVM 7.2.7

3470 பாலதுன்பங்களின்பங்கள்படைத்தாய்!
பற்றிலார்பற்றநின்றானே! *
காலசக்கரத்தாய்! கடலிடங்கொண்ட
கடல்வண்ணா! கண்ணணே! என்னும் *
சேல்கொள்தண்புனல்சூழ்திருவரங்கத்தாய்!
என்னும் என்தீர்த்தனே! என்னும் *
கோலமாமழைக்கண்பனிமல்கவிருக்கும்
என்னுடைக்கோமளக்கொழுந்தே.
3470 பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் *
பற்றிலார் பற்ற நின்றானே *
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட *
கடல்வண்ணா கண்ணனே என்னும் **
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என்னும் * என் தீர்த்தனே என்னும் *
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் *
என்னுடைக் கோமளக் கொழுந்தே (7)
3470 pāla tuṉpaṅkal̤ iṉpaṅkal̤ paṭaittāy *
paṟṟilār paṟṟa niṉṟāṉe *
kāla cakkarattāy kaṭal iṭam kŏṇṭa *
kaṭalvaṇṇā kaṇṇaṉe ĕṉṉum **
cel kŏl̤ taṇ puṉal cūzh tiruvaraṅkattāy
ĕṉṉum * ĕṉ tīrttaṉe ĕṉṉum *
kola mā mazhaikkaṇ paṉi malka irukkum *
ĕṉṉuṭaik komal̤ak kŏzhunte (7)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

My tender darling, with cool and lovely eyes filled with tears, says, "Oh, Distributor of weal and woe among Your creatures, even unto those who seek not refuge in You, You are the Protector. Oh, Controller of the wheel of Time, the Milk-ocean is Your abode. Oh, sea-hued Lord, Oh, Kaṇṇā, You that reside in Tiruvaraṅkam amid cool waters full of fish, You are my Sanctifier," and so on.

Explanatory Notes

The Nāyakī’s address, as above, quoted by the Mother, when analysed, would reveal her trend of thought as follows:

(i) My Lord, You are known to inflict miseries on the ungodly and regale the devout. Perhaps, you have excluded me from the scope of such a dispensation.

(ii) My Lord, You carry the credential that you extend protection even to those who do not submit + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னுடைக் கோமள என்னுடைய மென்மையான; கொழுந்தே கொழுந்து போன்ற மகள்; பால இடங்களுக்குத் தகுந்தாற்போல்; துன்பங்கள் துன்பங்களையும்; இன்பங்கள் இன்பங்களையும்; படைத்தாய்! படைத்தவனே! என்பாள்; பற்றிலார் வேறு புகலிடம் இல்லாதவர்கள்; பற்ற பற்றும்படி; நின்றானே! நின்றவனே! என்பாள்; கால பகைவர்களைக் கொல்லும் கால; சக்கரத்தாய்! சக்கரத்தை உடையவனே!; கடல் இடம் பாற்கடலை இடமாக; கொண்ட கொண்டவனே! என்பாள்; கடல்வண்ணா! கடல்வண்ணா!; கண்ணனே! என்னும் கண்ணனே! என்பாள்; சேல் கொள் சேல் என்னும் மீன்கள் துள்ளும்; தண் புனல் சூழ் குளிர்ந்த நீர்நிலைகள் சூழ்ந்த; திருவரங்கத்தாய்! திருவரங்கத்தில் இருப்பவனே!; என்னும் என்பாள்; என் தீர்த்தனே! என்று நான் உன்னை அடைவேன்?; என்னும் என்று; கோல மா மழை பெருத்த மழை போன்ற; கண் பனி மல்க கண்ணீரோடு கூடினவளாக; இருக்கும் இருக்கிறாள் என்கிறாள் தாயார்
kozhundhu my daughter who is like a slender creeper; pāla in every place; thunbangal̤ sorrows for those who are not surrendered; inbangal̤ joy for the surrendered ones; padaiththāy one who created; paṝu attachment; ilār like jayantha who did not have; paṝa to surrender; ninṛānĕ one who stands as the refuge for those who don-t have refuge; kāla chakkaraththāy being the controller of the wheel of time (to ensure that the apt time for the surrendered ones be at his disposal, having the units such as month, season, year etc); kadal in the divine milk ocean; kadal vaṇṇā like an ocean reclining on another ocean; idam koṇda mercifully resting; kaṇṇanĕ ŏh one who appeared as krishṇa for the protection [of devotees]!; ennum says;; sĕl fish; kol̤ having; thaṇ cool; punal water [kāvĕri]; sūzh surrounded; thiruvarangaththāy ŏh one who is residing in kŏyil (ṣrīrangam)!; ennum says;; en for me to immerse; thīrththanĕ ŏh one who is like a ghat!; ennum says;; kŏlam beautiful; expansive; mazhai cool; kaṇ eye; pani tears; malga to be filled; irukkum remains inactive.; vānavargatku for the nithyasūris; kozhundhu being the head

TVM 7.2.8

3471 கொழுந்துவானவர்கட்கு! என்னும் குன்றேந்திக்
கோநிரைகாத்தவன்! என்னும் *
அழுந்தொழும்ஆவியனலவெவ்வுயிர்க்கும்
அஞ்சனவண்ணனே! என்னும் *
எழுந்துமேல்நோக்கியிமைப்பிலளிருக்கும்
எங்ஙனேநோக்குகேன்? என்னும் *
செழுந்தடம்புனல்சூழ்திருவரங்கத்தாய்!
என்செய்கேன்என்திருமகட்கே?
3471 கொழுந்து வானவர்கட்கு என்னும் * குன்று ஏந்திக்
கோ நிரை காத்தவன் என்னும் *
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் *
அஞ்சன வண்ணனே என்னும் **
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் *
எங்ஙனே நோக்குகேன்? என்னும் *
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் *
என் செய்கேன் என் திருமகட்கே? (8)
3471 kŏzhuntu vāṉavarkaṭku ĕṉṉum * kuṉṟu entik
ko nirai kāttavaṉ ĕṉṉum *
azhum tŏzhum āvi aṉala vĕvvuyirkkum *
añcaṉa vaṇṇaṉe ĕṉṉum **
ĕzhuntu mel nokki imaippilal̤ irukkum *
ĕṅṅaṉe nokkukeṉ? ĕṉṉum *
cĕzhum taṭam puṉal cūzh tiruvaraṅkattāy *
ĕṉ cĕykeṉ ĕṉ tirumakaṭke? (8)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

Oh, Lord, reclining in Tiruvaraṅkam amid sacred waters, what shall I do for my daughter, who is like Tirumakaḷ, ever calling you, "Oh Chief of Nithyasuris, Oh, Lifter of Mount (Govardhan) and Protector of cows"? With joined palms and tearful eyes, breathing heavily, she calls, "Oh, dark-hued Lord," and gazes at the sky, asking how and where indeed she could look for You.

Explanatory Notes

(i) The Nāyakī mentions, side by side, the Lord’s supremacy and simplicity, so that one need not be scared of the former nor be tempted to underrate Him because of the latter;

(ii) The mother suggests that the Lord should be inseparably attached to her daughter even as Tirumakaḷ (Mahālakṣmī) inheres in His chest always, brooking no separation;

(iii) Not sighting + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர்கட்கு நித்யஸூரிகளுக்கு; கொழுந்து கொழுந்து போன்றவனே!; என்னும் என்பாள்; குன்று ஏந்தி கோவர்த்தன மலையைத்தூக்கி; கோ நிரை பசுக்களை; காத்தவன்! என்னும் காத்தவனே! என்பாள்; அழும் தொழும் அழுவாள் தொழுவாள்; ஆவி அனல ஆத்மா கொதிக்க; வெவ்வுயிர்க்கும் வெப்பத்தோடு பெருமூச்சு விடுவாள்; அஞ்சன வண்ணனே! மை போன்றவனே!; என்னும் என்பாள்; எழுந்து மேல் நோக்கி எழுந்து நின்று மேல் நோக்கி; இமைப்பிலள் கண்களை இமைக்காமல்; இருக்கும் பார்த்துக்கொண்டே இருப்பாள்; எங்ஙனே எந்த வகையால் உன்னை; நோக்குகேன்? என்னும் காண்பேன்? என்பாள்; செழுந் தடம் புனல் சூழ் நீர்வளம் மிகுந்த காவிரி சூழ்ந்த; திருவரங்கத்தாய்! திருவரங்கத்தில் இருப்பவனே!; என் செய்கேன் என் மகளுக்கு நான்; என் திருமகட்கே? எதைச் செய்வேன்? என்கிறாள் தாயார்
ennum says;; kunṛu hill; ĕndhi effortlessly lifted; kŏnirai cows; kāththavan ŏh one who performed the super-human task and protected!; ennum says;; azhum remains with teary eyes like those who are immersed in devotion;; thozhum performs anjali like a surrendered person;; āvi the soul which cannot be burnt; anal to be burnt; vev hot; uyirkkum breathes;; anjana vaṇṇanĕ ŏh one who is having dark-coloured form which caused anguish!; ennum says;; mĕl up; ezhundhu rise; nŏkki see; imaippilal̤ without blinking the eyes; irukkum remains;; enganĕ how; nŏkkugĕn will ī see?; ennum says;; sezhu beautiful; thadam vast; punal water; sūzh surrounded; thiruvarangaththāy ŏh one who is residing in kŏyil (ṣrīrangam)!; en my; thirumagatku daughter who is comparable to lakshmi; en what; seygĕn shall ī do?; en my lady lord; thirumagal̤ lakshmi

TVM 7.2.9

3472 என்திருமகள்சேர்மார்வனே! என்னு
மென்னுடையாவியே! என்னும் *
நின்திருவெயிற்றாலிடந்துநீகொண்ட
நிலமகள்கேள்வனே! என்னும் *
அன்றுருவேழும்தழுவிநீகொண்ட
ஆய்மகளன்பனே! என்னும் *
தென்திருவரங்கம்கோயில்கொண்டானே!
தெளிகிலேன்முடிவிவள்தனக்கே. (2)
3472 என் திருமகள் சேர் மார்வனே என்னும் * என்னுடை ஆவியே என்னும் *
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட * நிலமகள் கேள்வனே என்னும் **
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட * ஆய்மகள் அன்பனே என்னும் *
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே * தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே (9)
3472 ĕṉ tirumakal̤ cer mārvaṉe ĕṉṉum * ĕṉṉuṭai āviye ĕṉṉum *
niṉ tiru ĕyiṟṟāl iṭantu nī kŏṇṭa * nilamakal̤ kel̤vaṉe ĕṉṉum **
aṉṟu uru ezhum tazhuvi nī kŏṇṭa * āymakal̤ aṉpaṉe ĕṉṉum *
tĕṉ tiruvaraṅkam koyil kŏṇṭāṉe * tĕl̤ikileṉ muṭivu ival̤ taṉakke (9)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

Oh, Lord enshrined in Teṉtiruvaraṅkam, it is not clear to me what will be the end of this lady's inordinate longing. She calls, "Oh, my Soul, bearing Tirumakaḷ, my Mother, on Your chest," "Oh, Spouse of Dame Earth whom You lifted on Your bent tooth long," "Oh, dear One unto the shepherd girl whom You once took over, slaying the unruly bulls seven with the voice of thunder."

Explanatory Notes

(i) The Nāyakī wonders how she could suffer inspite of Tirumakaḷ (Mahālakṣmī), the unfailing Intercessor between the Lord and His subjects being ever present on His winsome chest. The Lord is the soul of all souls and what is more, the Mother is always in conjunction with Him; here then is a grand setting, the soul of our soul, the super-soul being a mighty combination, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் திருமகள் என் திருமகள்; சேர் சேர்ந்திருக்கும்; மார்வனே! மார்பை உடையவனே!; என்னும் என்பாள்; என்னுடை ஆவியே! என்னும் என்னுடை ஆவியே! என்பாள்; நின் திரு எயிற்றால் உன் கோரைப் பற்களாலே; இடந்து நீ கொண்ட பூமியைக் குத்தி எடுத்து வந்த; நிலமகள் கேள்வனே! பூமாதேவியின் நாதனே!; என்னும் என்பாள்; அன்று உரு ஏழும் அன்று ஏழு எருதுகளையும்; தழுவி நீ கொண்ட தழுவி பின் நீ மணந்து கொண்ட; ஆய் மகள் நப்பின்னையின்; அன்பனே! என்னும் காதலனே! என்பாள்; தென் திருவரங்கம் தென் திருவரங்கத்தை; கோயில் கொண்டானே! கோயிலாகக் கொண்டவனே!; இவள் தனக்கே இவளுடைய துயரத்திற்கு; முடிவு முடிவு தான் என்ன என்று; தெளிகிலேன் தெரியவில்லையே என்கிறாள் தாயார்
sĕr being united, as her desirable place; mārbanĕ ŏh one who is having the divine chest!; ennum says;; ennudai for me; āviyĕ ŏh one who remained in my heart as the sustaining life!; ennum says;; nin your; thiru eyiṝāl with the divine tusk; idandhu (submerging into the deluge, from the wall of the oval shaped universe) dug it out; you; koṇda kept as your beloved one; nila magal̤ ṣrī bhūmip pirātti; kĕl̤vanĕ matching consort!; ennum says;; anṛu when the bulls were placed as a challenge; uru the bulls which roared like the thunder causing fear; ĕzhum seven; thazhuvi (effortlessly as done with the beloved ones) embraced; you; koṇda accepted like finding and keeping a treasure; āy magal̤ nappinnaip pirātti who appeared in a matching clan for you; anbanĕ ŏh one who has fixed affection!; ennnum says;; then well protected; thiruvarangam ṣrīranga kshĕthram; kŏyil as the abode; koṇdānĕ ŏh one who acknowledged!; ival̤ thanakku for her; mudivu means to end her suffering; thel̤igilĕn ī am unaware.; ival̤ my daughter (who is visibly anguished); thanakku for her anguished state

TVM 7.2.10

3473 முடிவிவள்தனக்கொன்றறிகிலேனென்னும்
மூவுலகாளியே! என்னும் *
கடிகமழ்கொன்றைச்சடையனே! என்னும்
நான்முகக்கடவுளே! என்னும் *
வடிவுடைவானோர்தலைவனே! என்னும்
வண்திருவரங்கனே! என்னும் *
அடியடையாதாள்போல்இவளணுகி
யடைந்தனள் முகில்வண்ணனடியே.
3473 முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் *
மூவுலகு ஆளியே என்னும் *
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் *
நான்முகக் கடவுளே என்னும் **
வடிவு உடை வானோர் தலைவனே என்னும் *
வண் திருவரங்கனே என்னும் *
அடி அடையாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் * முகில்வண்ணன் அடியே (10)
3473 muṭivu ival̤ taṉakku ŏṉṟu aṟikileṉ ĕṉṉum *
mūvulaku āl̤iye ĕṉṉum *
kaṭi kamazh kŏṉṟaic caṭaiyaṉe ĕṉṉum *
nāṉmukak kaṭavul̤e ĕṉṉum **
vaṭivu uṭai vāṉor talaivaṉe ĕṉṉum *
vaṇ tiruvaraṅkaṉe ĕṉṉum *
aṭi aṭaiyātāl̤ pol ival̤ aṇuki
aṭaintaṉal̤ * mukilvaṇṇaṉ aṭiye (10)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

It seemed this lady, panting for the Lord, wouldn’t attain Him. She exclaimed, "I know not the end of my sufferings at all." "Oh, Supreme Master of the three worlds," "Oh, Internal Controller of Śiva wearing fragrant flowers on matted locks," "And Brahmā, the four-headed," "Oh, Chief of Nithyasuris of like form," "Oh, generous Tiruvaraṅka," and so on. But now she has indeed attained the lovely feet of the cloud-hued Lord!

Explanatory Notes

(i) The mother is mighty glad that her daughter, who was in a hopelessly desperate condition with no prospect of an early end to her sufferings, has, after all, attained the feet of Lord Raṅganātha Who is graciously reclining in Tiruvaraṅkam so as to be worshipped by all down below desirous of beholding and enjoying His exquisite Form, instead of being the close preserve + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவள் இப்பெண்பிள்ளையானவள்; முடிவு தனக்கு ஒன்று தன் துயரத்துக்கு எந்த முடிவும்; அறிகிலேன் என்னும் தெரியவில்லையே என்கிறாள்; மூ உலகு மூவுலகங்களுக்கும்; ஆளியே! என்னும் தலைவனே! என்கிறாள்; கடி கமழ் மணம் கமழும்; கொன்றை கொன்றை மாலையை; சடையனே! சடையிலுடையவனுக்கு அந்தர்யாமியே!; என்னும் என்கிறாள்; நான்முகக் கடவுளே! பிரமனுக்கு அந்தர்யாமியே!; என்னும் என்கிறாள்; வடிவு உடை தன்னோடொத்த வடிவுடையரான; வானோர் நித்ய ஸூரிகளுக்கு; தலைவனே! என்னும் தலைவனே! என்கிறாள்; வண் உதார குணமுடைய; திருவரங்கனே! என்னும் திருவரங்கனே! என்கிறாள்; அடி அடையாதாள் அவன் திருவடிகளை அடையாதவள்; போல் இவள் போல் இருந்த இவள்; அணுகி அவனை அணுகி; முகில் வண்ணன் மேக வண்ணனான; அடியே அவன் திருவடிகளை; அடைந்தனள் அடைந்தாள்
mudivu solution; onṛu a; aṛigilĕn don-t know;; ennum says;; mū ulagu āl̤iyĕ ŏh one who ruled over the worlds by being the antharāthmā of indhra who is the lord of the three worlds [bhū:, bhūva:, suva:]!; ennum says;; kadi kamazh fragrant; konṛai having konṛai (īndian laburnum tree) garland; chadaiyanĕ ŏh one who remains the antharāthmā of rudhra who has matted hair, to be meditated upon by him!; ennum says;; nānmugan (the master for these aforementioned dhĕvathās) the four-headed; kadavul̤ĕ ŏh one who is the antharāthmā of the dhĕvathā!; ennum says;; vadivu udai having matching form; vānŏr for nithyasūris; thalaivanĕ ŏh one who is the lord!; ennum says;; vaṇ having magnanimity (to present himself to those who desire); thiruvaranganĕ ŏh one who is the controller of kŏyil (ṣrīrangam)!; ennum says;; adi his divine feet; adiayādhāl̤ pŏl who appeared to be not reaching; ival̤ my daughter; mugil like a dark cloud which pours the rain on land and water; vaṇṇan due to the great generosity of the one who is having the form; adi his divine feet; aṇugi approached; adaindhanal̤ attained; mugil vaṇṇan periya perumāl̤ who is having magnanimity as his nature, as a cloud, his; adiyĕ divine feet only

TVM 7.2.11

3474 முகில்வண்ணனடியையடைந்தருள்சூடி
உய்ந்தவன் மொய்புனல்பொருநல் *
துகில்வண்ணத்தூநீர்ச்சேர்ப்பன் வண்பொழில்சூழ்
வண்குருகூர்ச்சடகோபன் *
முகில்வண்ணனடிமேல்சொன்னசொல்மாலை
ஆயிரத்திப்பத்தும்வல்லார் *
முகில்வண்ணவானத்திமையவர்சூழ
விருப்பர் பேரின்பவெள்ளத்தே. (2)
3474 ## முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் * மொய் புனல் பொருநல் *
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் * வண் பொழில் சூழ்
வண் குருகூர்ச் சடகோபன் **
முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை *
ஆயிரத்து இப் பத்தும் வல்லார் *
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் * பேரின்ப வெள்ளத்தே (11)
3474 ## mukilvaṇṇaṉ aṭiyai aṭaintu arul̤ cūṭi
uyntavaṉ * mŏy puṉal pŏrunal *
tukil vaṇṇat tū nīrc cerppaṉ * vaṇ pŏzhil cūzh
vaṇ kurukūrc caṭakopaṉ **
mukilvaṇṇaṉ aṭimel cŏṉṉa cŏl mālai *
āyirattu ip pattum vallār *
mukil vaṇṇa vāṉattu imaiyavar cūzha
iruppar * periṉpa vĕl̤l̤atte (11)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

Those who are well-versed in these ten songs, chosen out of the thousand, composed in adoration of the cloud-hued Lord Raṅganātha by Caṭakōpaṉ of fertile Kurukūr on the bank of Porunal, the sacred river, will be surrounded by Nithyasuris in SriVaikuntam. They will remain immersed in eternal joy, having attained and been saved by the grace of the cloud-hued Lord.

Explanatory Notes

It is quite clear from this song that the entire hymnal, comprising a thousand songs, is in adoration of Lord Raṅganātha, enshrined in Tiruvaraṅkam (Śrīraṅgam in Tamilnadu). The invocatory song (serial number 4), cited at the beginning of this hymnal, also highlights this fact. No doubt, particular decads have been dedicated to the Lord enshrined in other pilgrim centres + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முகில் வண்ணன் மேகவண்ணனான எம்பெருமானின்; அடியை அடைந்து திருவடிகளை அடைந்து; அருள் சூடி அவனுடைய திருவருளை; உய்ந்தவன் பெற்று உய்ந்தவரும்; மொய்ப் புனல் மிக்க நீரோடு கூடின; பொருநல் தாமிரபரணி துறைவரும்; துகில் வண்ண ஆடையின் வண்ணம் போல்; தூ நீர்ச் சேர்ப்பன் தூய்மையான நீரோடு கூடின; வண் பொழில் சூழ் வளம்மிக்க சோலைகள் சூழந்த; வண் குருகூர் வண்மையையுடைய திருக்குருகூரில்; சடகோபன் அவதரித்த நம்மாழ்வார்; முகில் வண்ணன் மேக வண்ணனான பெருமானின்; அடிமேல் திருவடிகளைக் குறித்து; சொன்ன அருளிச் செய்த; சொல் மாலை சொல் மாலையான; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லார்; முகில் வண்ண மேக வண்ணமாயிருக்கின்ற; வானத்து பரமபதத்தில்; இமையவர் சூழ நித்தியசூரிகள் சூழ்ந்திருக்க; இன்ப வெள்ளத்தே பேரின்ப வெள்ளத்தில்; இருப்பர் பேர் திளைப்பார்கள்
adaindhu attained; arul̤ his mercy; sūdi beholding; uyndhavan one who got uplifted; moy abundant; punal having water; porunal the divine thāmirabharaṇi river, its; thugil rich cloth; vaṇṇam like the complexion; thū very pure; nīr having water; sĕrppan having as abode, at the banks of; vaṇ with greatness of having honey, flowers etc; pozhil by gardens; sūzh surrounded; vaṇ with infinite opulence; kurugūr the leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; mugil like a dark cloud; vaṇṇan infinitely beautiful periya perumāl̤; adi mĕl on the divine feet; sonna mercifully spoken; sol having words; mālai garlands; āyiraththu among the thousand pāsurams; ippaththum this decad; vallār one who can practice with the true emotions; mugil dark bluish like cloud; vaṇṇam having complexion; vānaththu paramapadham; imaiyavar nithyasūris; sūzha to be surrounded; pĕr inba vel̤l̤aththĕ in the infinite ocean of bliss; iruppar will remain; annaimīrgāl̤ ŏh those who try to keep me away from him thinking -we are your mothers [so we know what is good for you]- (without realising my internal emotions which are beyond the expression of words)!; vel̤l̤ai having white colour