Your browser does not support the audio element.
audio
3475 வெள்ளைச்சுரிசங்கொடாழியேந்தித்
தாமரைக்கண்ணன்என்னெஞ்சினூடே *
புள்ளைக்கடாகின்றவாற்றைக்காணீர்
எஞ்சொல்லிச்சொல்லுகேன்? அன்னைமீர்காள்! *
வெள்ளச்சுகமவன்வீற்றிருந்த
வேதவொலியும்விழாவொலியும் *
பிள்ளைக்குழாவிளையாட்டொலியுமறாத்
திருப்பேரையில்சேர்வன்நானே. (2)
3476 நானக்கருங்குழல்தோழிமீர்காள்!
அன்னையர்காள்! அயல்சேரியீர்காள்! *
நானித்தனிநெஞ்சம்காக்கமாட்டேன்
என்வசமன்றிது, இராப்பகல்போய் *
தேன்மொய்த்தபூம்பொழில்தண்பணைசூழ்
தெந்திருப்பேரையில்வீற்றிருந்த *
வானப்பிரான்மணிவண்ணன்கண்ணன்
செங்கனிவாயின் திறத்ததுவே.
3477 செங்கனிவாயின் திறத்ததாயும்
செஞ்சுடர்நீண்முடித்தாழ்ந்ததாயும் *
சங்கொடுசக்கரம்கண்டுகந்தும்
தாமரைக்கண்களுக்கற்றுத்தீர்ந்தும் *
திங்களும்நாளும்விழாவறாத
தென்திருப்பேரையில்வீற்றிருந்த *
நங்கள்பிரானுக்குஎன்நெஞ்சம்தோழீ!
நாணும்நிரையுமிழந்ததுவே.
3478 இழந்தவெம்மாமைதிறத்துப்போன
என்நெஞ்சினாருமங்கேயொழிந்தார் *
உழந்தினியாரைக்கொண்டு? என்உசாகோ?
ஓதக்கடலொலிபோல * எங்கும்
எழுந்தநல்வேதத்தொலிநின்றோங்கு
முழங்குசங்கக்கையன்மாயத்தாழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னைஎன்முனிந்தே?
3479 முனிந்துசகடமுதைத்து மாயப்
பேய்முலையுண்டுமருதிடைபோய் *
கனிந்தவிளவுக்குக்கன்றெறிந்த
கண்ணபிரானுக்குஎன்பெண்மைதோற்றேன் *
முனிந்தினியென்செய்தீர்? அன்னைமீர்காள்!
முன்னியவன்வந்துவீற்றிருந்த *
கனிந்தபொழில்திருப்பேரையிற்கே
காலம்பெறஎன்னைக்காட்டுமினே.
3480 காலம்பெறஎன்னைக்காட்டுமின்கள்
காதல்கடலின்மிகப்பெரிதால் *
நீலமுகில்வண்ணத்தெம்பெருமான்
நிற்குமுன்னேவந்தென்கைக்குமெய்தான் *
ஞாலத்தவன்வந்துவீற்றிருந்த
நான்மறையாளரும்வேள்வியோவா *
கோலச்செந்நெற்கள்கவரிவீசும்
கூடுபுனல்திருப்பேரையிற்கே.
3481 பேரெயில்சூழ்கடல்தென்னிலங்கை
செற்றபிரான்வந்துவீற்றிருந்த *
பேரையிற்கேபுக்கென்னெஞ்சம்நாடிப்
பேர்த்துவரவெங்கும்காணமாட்டேன் *
ஆரையினிங்குடையம்? தோழீ!
என்னெஞ்சம்கூவவல்லாருமில்லை *
ஆரை? இனிக்கொண்டுஎன்சாதிக்கின்றது?
என்னெஞ்சம்கண்டதுவேகண்டேனே.
3482 கண்டதுவேகொண்டெல்லாரும்கூடிக்
கார்க்கடல்வண்ணனோடெந்திறத்துக்
கொண்டு * அலர்தூற்றிற்றதுமுதலாக்
கொண்டஎன்காதலுரைக்கில்தோழீ! *
மண்திணிஞாலமுமேழ்கடலும்
நீள்விசும்பும்கழியப்பெரிதால் *
தெண்திரைசூழ்ந்தவன்வீற்றிருந்த
தெந்திருப்பேரையில்சேர்வன்சென்றே.
3483 சேர்வன்சென்றென்னுடைத்தோழிமீர்காள்!
அன்னையர்காள்! என்னைத்தேற்றவேண்டா *
நீர்களுரைக்கின்றதென்னிதற்கு?
நெஞ்சும்நிறைவும்எனக்கிங்கில்லை *
கார்வண்ணன்கார்க்கடல்ஞாலமுண்ட
கண்ணபிரான்வந்துவீற்றிருந்த *
ஏர்வளவொண்கழனிப்பழனத்
தென்திருப்பேரையில்மாநகரே.
3484 நகரமும்நாடும்பிறவும்தேர்வேன்
நாணெனக்கில்லையென்தோழிமீர்காள் *
சிகரமணிநெடுமாடநீடு
மகரநெடுங்குழைக்காதன்மாயன்
நூற்றுவரையன்றுமங்கநூற்ற *
நிகரில்முகில்வண்ணன்நேமியான் என்
னெஞ்சம்கவர்ந்தெனையூழியானே. (2)
3485 ஊழிதோறூழியுருவும்பேரும்
செய்கையும்வேறவன்வையங்காக்கும் *
ஆழிநீர்வண்ணனைஅச்சுதனை
அணிகுருகூர்ச்சடகோபன்சொன்ன *
கேழிலந்தாதியோராயிரத்துள்இவை
திருப்பேரையில்மேயபத்தும் *
ஆழியங்கையனையேத்தவல்லாரவர்
அடிமைத்திறத்தாழியாரே. (2)