O Lord on the Serpent Couch! What Shall I Do?
பாம்பணையாய்! நான் என்னதான் செய்வேன்?
3469 மையல்செய்தென்னைமனம்கவர்ந்தானே!
என்னும் மாமாயனே! என்னும் *
செய்யவாய்மணியே! என்னும் தண்புனல்சூழ்
திருவரங்கத்துள்ளாய்! என்னும் *
வெய்யவாள்தண்டுசங்குசக்கரம்வில்லேந்தும்
விண்ணோர்முதல்! என்னும் *
பைகொள்பாம்பணையாய்! இவள்திறத்தருளாய்
பாவியேன்செயற்பாலதுவே.