O Araṅgā! You Have Bewitched My Daughter!
அரங்கா! என் மகளை மயக்கிவிட்டாயே!
3468 சிந்திக்கும்திசைக்கும்தேறும்கை கூப்பும்
திருவரங்கத்துள்ளாய்! என்னும்
வந்திக்கும் * ஆங்கேமழைக்கண்ணீர்மல்க
வந்திடாயென்றென்றேமயங்கும் *
அந்திப்போதவுணனுடலிடந்தானே!
அலைகடல்கடைந்தவாரமுதே *
சந்தித்துன்சரணம்சார்வதேவலித்த
தையலைமையல்செய்தானே!