O Araṅgā! What Are You Thinking?
அரங்கா! நீ என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?
3467 இட்டகாலிட்டகையளாயிருக்கும்
எழுந்துலாய்மயங்கும்கைகூப்பும் *
கட்டமேகாதலென்றுமூர்ச்சிக்கும்
கடல்வண்ணா! கடியைகாணென்னும் *
வட்டவாய்நேமிவலங்கையா! என்னும்
வந்திடாயென்றென்றேமயங்கும் *
சிட்டனே! செழுநீர்த்திருவரங்கத்தாய்!
இவள்திறத்தென்சிந்தித்தாயே?