Chapter 8
Detachment from those that the Lord dislikes - (ஏறு ஆளும்)
எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்
No matter how long or hard parAnkusa nāyaki called out to Bhagavān, Āzhvār is yet to be graced by His presence. Āzhvār comes to the conclusion that Bhagavān hates him and has rejected him. Āzhvār rejects his own ātma since assuming Bhagavān has rejected it. Āzhvār sings these hymns (lamentations) as parānkusa nāyaki.
பராங்குச நாயகி இவ்வாறு அழைத்தும் பகவான் எதிரில் வந்து முகம் காட்டவில்லை. அவன் நம்மை வெறுத்துவிட்டான் என்று ஆழ்வார் முடிவு செய்தார். அவனுக்கு வேண்டாத இந்த ஆத்மா தமக்கும் வேண்டாம் என்று அவர் எண்ணுகிறார்; தம்மைத் தலைவியாகக் கருதி ஈண்டுப் பாடுகிறார்.
நான்காம் பத்து -எட்டாந்திருவாய்மொழி + Read more
Verses: 3200 to 3210
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will attain Vaikuntam
- TVM 4.8.1
3200 ## ஏறு ஆளும் இறையோனும் * திசைமுகனும் திருமகளும் *
கூறு ஆளும் தனி உடம்பன் * குலம் குலமா அசுரர்களை **
நீறு ஆகும்படியாக * நிருமித்துப் படை தொட்ட *
மாறாளன் கவராத * மணி மாமை குறைவு இலமே (1) - TVM 4.8.2
3201 மணி மாமை குறைவு இல்லா * மலர்மாதர் உறை மார்பன் *
அணி மானத் தட வரைத்தோள் * அடல் ஆழித் தடக்கையன் **
பணி மானம் பிழையாமே * அடியேனைப் பணிகொண்ட *
மணிமாயன் கவராத * மட நெஞ்சால் குறைவு இலமே (2) - TVM 4.8.3
3202 மட நெஞ்சால் குறைவு இல்லா * மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி *
விட நஞ்ச முலை சுவைத்த * மிகு ஞானச் சிறு குழவி **
பட நாகத்து அணைக் கிடந்த * பரு வரைத் தோள் பரம் புருடன் *
நெடுமாயன் கவராத * நிறையினால் குறைவு இலமே (3) - TVM 4.8.4
3203 நிறையினால் குறைவு இல்லா * நெடும் பணைத் தோள் மடப் பின்னை *
பொறையினால் முலை அணைவான் * பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த **
கறையினார் துவர் உடுக்கை * கடை ஆவின் கழி கோல் கை *
சறையினார் கவராத * தளிர் நிறத்தால் குறைவு இலமே (4) - TVM 4.8.5
3204 தளிர் நிறத்தால் குறைவு இல்லாத் * தனிச் சிறையில் விளப்பு உற்ற *
கிளிமொழியாள் காரணமாக் * கிளர் அரக்கன் நகர் எரித்த **
களி மலர்த் துழாய் அலங்கல் * கமழ் முடியன் கடல் ஞாலத்து *
அளிமிக்கான் கவராத * அறிவினால் குறைவு இலமே (5) - TVM 4.8.6
3205 அறிவினால் குறைவு இல்லா * அகல் ஞாலத்து அவர் அறிய *
நெறி எல்லாம் எடுத்து உரைத்த * நிறை ஞானத்து ஒருமூர்த்தி **
குறிய மாண் உரு ஆகிக் * கொடுங் கோளால் நிலம் கொண்ட *
கிறி அம்மான் கவராத * கிளர் ஒளியால் குறைவு இலமே (6) - TVM 4.8.7
3206 கிளர் ஒளியால் குறைவு இல்லா * அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து *
கிளர் ஒளிய இரணியனது * அகல் மார்பம் கிழித்து உகந்த **
வளர் ஒளிய கனல் ஆழி * வலம்புரியன் மணி நீல *
வளர் ஒளியான் கவராத * வரி வளையால் குறைவு இலமே (7) - TVM 4.8.8
3207 வரி வளையால் குறைவு இல்லாப் * பெரு முழக்கால் அடங்காரை *
எரி அழலம் புக ஊதி * இரு நிலம் முன் துயர் தவிர்த்த **
தெரிவு அரிய சிவன் பிரமன் * அமரர் கோன் பணிந்து ஏத்தும் *
விரி புகழான் கவராத * மேகலையால் குறைவு இலமே (8) - TVM 4.8.9
3208 மேகலையால் குறைவு இல்லா * மெலிவு உற்ற அகல் அல்குல் *
போகமகள் புகழ்த் தந்தை * விறல் வாணன் புயம் துணித்து **
நாகமிசைத் துயில்வான் போல் * உலகு எல்லாம் நன்கு ஒடுங்க *
யோகு அணைவான் கவராத * உடம்பினால் குறைவு இலமே (9) - TVM 4.8.10
3209 உடம்பினால் குறைவு இல்லா * உயிர் பிரிந்த மலைத்துண்டம் *
கிடந்தனபோல் துணி பலவா * அசுரர் குழாம் துணித்து உகந்த **
தடம் புனல சடைமுடியன் * தனி ஒருகூறு அமர்ந்து உறையும் *
உடம்பு உடையான் கவராத * உயிரினால் குறைவு இலமே (10) - TVM 4.8.11
3210 ## உயிரினால் குறைவு இல்லா * உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி *
தயிர் வெண்ணெய் உண்டானைத் * தடம் குருகூர்ச் சடகோபன் **
செயிர் இல் சொல் இசைமாலை * ஆயிரத்துள் இப் பத்தால் *
வயிரம் சேர் பிறப்பு அறுத்து * வைகுந்தம் நண்ணுவரே (11)