Chapter 9

Detesting worldly pleasures, Āzhvār pleads the Lord for liberation - (நண்ணாதார் முறுவலிப்ப)

உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்
Āzhvār vehemently refuses all that’s associated with him saying “I reject color (luster), heart, body, life force.” No matter how much he attempts to do away with the above, they do not leave him. Āzhvār realizes just like its prerequisite/integral to have His blessings to exist and thrive, the same holds good even in this scenario where one desires to let go. Once this realization dawns on Āzhvār, he cries out “empirānE! You do away with me!”
நிறம் வேண்டா நெஞ்சு வேண்டா உடல் வேண்டா உயிர் வேண்டா என்றெல்லாம் கூறி ஆத்மீயங்களைத் தள்ளிவிட நினைத்தார் ஆழ்வார். தள்ளினாலும் அவை சென்றுவிடா வாழ்வதற்கு அவனருளை எதிர்பார்ப்பதுபோல், வாழ்வை முடித்துக்கொள்வதற்கும் அவனருளையே எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று அறிந்த அவர் எம்பிரானே! நீயே என்னை + Read more
Verses: 3211 to 3221
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will join his divine feet
  • TVM 4.9.1
    3211 ## நண்ணாதார் முறுவலிப்ப * நல் உற்றார் கரைந்து ஏங்க *
    எண் ஆராத் துயர் விளைக்கும் * இவை என்ன உலகு இயற்கை **
    கண்ணாளா கடல் கடைந்தாய் * உன கழற்கே வரும் பரிசு *
    தண்ணாவாது அடியேனைப் * பணி கண்டாய் சாமாறே (1)
  • TVM 4.9.2
    3212 சாம் ஆறும் கெடும் ஆறும் * தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து *
    ஏமாறிக் கிடந்து அலற்றும் * இவை என்ன உலகு இயற்கை **
    ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் * அரவு அணையாய் அம்மானே *
    கூமாறே விரைகண்டாய் * அடியேனைக் குறிக்கொண்டே (2)
  • TVM 4.9.3
    3213 கொண்டாட்டும் குலம் புனைவும் * தமர் உற்றார் விழு நிதியும் *
    வண்டு ஆர் பூங் குழலாளும் * மனை ஒழிய உயிர் மாய்தல் **
    கண்டு ஆற்றேன் உலகு இயற்கை! * கடல்வண்ணா அடியேனை *
    பண்டேபோல் கருதாது * உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே (3)
  • TVM 4.9.4
    3214 கொள் என்று கிளர்ந்து எழுந்த * பெரும் செல்வம் நெருப்பு ஆக *
    கொள் என்று தமம் மூடும் * இவை என்ன உலகு இயற்கை **
    வள்ளலே மணிவண்ணா * உன கழற்கே வரும்பரிசு *
    வள்ளல் செய்து அடியேனை * உனது அருளால் வாங்காயே (4)
  • TVM 4.9.5
    3215 வாங்கு நீர் மலர் உலகில் * நிற்பனவும் திரிவனவும் *
    ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப் * பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் **
    ஈங்கு இதன்மேல் வெம் நரகம் * இவை என்ன உலகு இயற்கை *
    வாங்கு எனை நீ மணிவண்ணா * அடியேனை மறுக்கேலே (5)
  • TVM 4.9.6
    3216 மறுக்கி வல் வலைப்படுத்திக் * குமைத்திட்டுக் கொன்று உண்பர் *
    அறப்பொருளை அறிந்து ஓரார் * இவை என்ன உலகு இயற்கை **
    வெறித் துளவ முடியானே * வினையேனை உனக்கு அடிமை
    அறக்கொண்டாய் * இனி என் ஆர் அமுதே * கூயருளாயே (6)
  • TVM 4.9.7
    3217 ஆயே இவ் உலகத்து * நிற்பனவும் திரிவனவும் *
    நீயே மற்று ஒரு பொருளும் * இன்றி நீ நின்றமையால் **
    நோயே மூப்பு பிறப்பு இறப்புப் * பிணியே என்று இவை ஒழிய *
    கூயேகொள் அடியேனைக் * கொடு உலகம் காட்டேலே (7)
  • TVM 4.9.8
    3218 காட்டி நீ கரந்து உமிழும் * நிலம் நீர் தீ விசும்பு கால் *
    ஈட்டி நீ வைத்து அமைத்த * இமையோர் வாழ் தனி முட்டை **
    கோட்டையினில் கழித்து * என்னை உன் கொழும் சோதி உயரத்து *
    கூட்டு அரிய திருவடிக்கள் * எஞ்ஞான்று கூட்டுதியே? (8)
  • TVM 4.9.9
    3219 கூட்டுதி நின் குரை கழல்கள் * இமையோரும் தொழாவகைசெய்து *
    ஆட்டுதி நீ அரவு அணையாய் * அடியேனும் அஃது அறிவன் **
    வேட்கை எல்லாம் விடுத்து * என்னை உன் திருவடியே சுமந்து உழல *
    கூட்டு அரிய திருவடிக்கள் * கூட்டினை நான் கண்டேனே (9)
  • TVM 4.9.10
    3220 கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் * ஐங்கருவி
    கண்ட இன்பம் * தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம் **
    ஒண் தொடியாள் திருமகளும் * நீயுமே நிலாநிற்ப *
    கண்ட சதிர் கண்டொழிந்தேன் * அடைந்தேன் உன் திருவடியே (10)
  • TVM 4.9.11
    3221 ## திருவடியை நாரணனைக் * கேசவனைப் பரஞ்சுடரை *
    திருவடி சேர்வது கருதிச் * செழுங் குருகூர்ச் சடகோபன் **
    திருவடிமேல் உரைத்த தமிழ் * ஆயிரத்துள் இப் பத்தும் *
    திருவடியே அடைவிக்கும் * திருவடி சேர்ந்து ஒன்றுமினே (11)