Chapter 9

Thirupper Nagar (Koiladi) - (கை இலங்கு)

திருப்பேர் நகர் (கோயிலடி)
Thirupper Nagar (Koiladi) - (கை இலங்கு)
Thiruppernagar is a Divya Desam, known as Appakkudathaan Sannidhi. It is also referred to as Koviladi. The āzhvār sings in praise of Appakkudathaan with great devotion.
திருப்பேர்நகர் ஒரு திவ்விய தேசம். இதற்கு அப்பக்குடத்தான் சன்னிதி என்று பெயர். கோவிலடி என்றும் இதனைக் கூறுவர். அப்பக்குடத்தானை ஆழ்வார் அகங்கனிந்து பாடுகிறார்.
Verses: 1428 to 1437
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always with the Lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 5.9.1

1428 கையிலங்காழி சங்கன் கருமுகில்திருநிறத்தன் *
பொய்யிலன்மெய்யன் தந்தாளடைவரேல்அடிமையாக்கும் *
செய்யலர்கமலமோங்கு செறிபொழில்தென்திருப்பேர் *
பையரவணையான்நாமம் பரவிநானுய்ந்தவாறே! (2)
1428 ## கை இலங்கு ஆழி சங்கன் * கரு முகில் திரு நிறத்தன் *
பொய் இலன் மெய்யன் தன் தாள் * அடைவரேல் அடிமை ஆக்கும் *
செய் அலர் கமலம் ஓங்கு * செறி பொழில் தென் திருப்பேர் *
பை அரவு அணையான் நாமம் * பரவி நான் உய்ந்த ஆறே 1
1428 ## kai ilaṅku āzhi caṅkaṉ * karu mukil tiru niṟattaṉ *
pŏy ilaṉ mĕyyaṉ-taṉ tāl̤ * aṭaivarel aṭimai ākkum *
cĕy alar kamalam oṅku * cĕṟi pŏzhil tĕṉ tirupper *
pai aravu-aṇaiyāṉ nāmam * paravi nāṉ uynta āṟe-1

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1428. The dark colored lord who carries a shining discus and a conch in his hands, is not false but a true god and if you approach him he will accept you as his devotee. I have praised the names of him who rests on Adisesha, the snake bed in ThenThirupper (Koiladi) surrounded by thick groves where beautiful lotuses bloom and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கை இலங்கு கையில்; ஆழி சங்கன் சங்கு சக்கரமுடையவனும்; கரு முகில் கருத்த மேகம்; திரு நிறத்தன் போன்ற நிறமுடையவனும்; பொய் இலன் பொய்யில்லாதவனும்; மெய்யன் தன் மெய்யனும்; தாள் அவன் பாதம்; அடைவரேல் பணிபவராகில்; அடிமை ஆக்கும் தனக்கு அடிமை ஆக்கிக் கொள்வான்; அலர் மலர்ந்த; கமலம் ஓங்கு செய் தாமரைகளுடன் கூடின; செறி பொழில் அடர்ந்த சோலைகளையுடைய; தென் திருப்பேர் தென் திருப்பேர் நகரில்; பை அரவு பரந்த படங்களுடைய பாம்பு; அணையான் படுக்கையிலிருக்கும்; நாமம் பெருமானின் நாமங்களை; பரவி பாராயணம் செய்து; நான் உய்ந்த ஆறே! நான் உய்ந்து போனேன்

PT 5.9.2

1429 வங்கமார்கடல்களேழும் மலையும்வானகமும்மற்றும் *
அங்கண்மாஞாலமெல்லாம் அமுதுசெய்துமிழ்ந்தஎந்தை *
திங்கள்மாமுகிலணவு செறிபொழில்தென்திருப்பேர் *
எங்கள்மாலிறைவன்நாமம் ஏத்திநானுய்ந்தவாறே!
1429 வங்கம் ஆர் கடல்கள் ஏழும் * மலையும் வானகமும் மற்றும் *
அம் கண் மா ஞாலம் எல்லாம் * அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை *
திங்கள் மா முகில் அணவு * செறி பொழில் தென் திருப்பேர் *
எங்கள் மால் இறைவன் நாமம் * ஏத்தி நான் உய்ந்த ஆறே 2
1429 vaṅkam ār kaṭalkal̤ ezhum * malaiyum vāṉakamum maṟṟum *
am kaṇ mā ñālam ĕllām * amutucĕytu umizhnta ĕntai *
tiṅkal̤ mā mukil aṇavu * cĕṟi pŏzhil tĕṉ tirupper *
ĕṅkal̤ māl iṟaivaṉ nāmam * etti nāṉ uynta āṟe-2

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1429. I have praised the names of Thirumāl, our father who swallowed the seven oceans, the mountains, the sky and all the beautiful worlds and spat them out, the god of ThenThirupper (Koiladi) surrounded with thick groves that touch the dark clouds and the moon and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வங்கம் ஆர் மரக்கலங்கள் நிறைந்த; கடல்கள் ஏழும் கடல்கள் ஏழும்; மலையும் மலையும்; வானகமும் மற்றும் வானகமும் மற்றும்; அங்கண் மா அழகிய பரந்த; ஞாலம் எல்லாம் பூமியும் ஆகியவற்றை; அமுது செய்து அமுது செய்து; உமிழ்ந்த எந்தை ஸ்ருஷ்டித்த என் தந்தை; திங்கள் சந்திரனையும்; மா முகில் மேகத்தையும்; அணவு அளாவியிருக்கும்; செறி பொழில் அடர்ந்த சோலைகளையுடைய; தென் திருப்பேர் தென் திருப்பேர் நகரில்; எங்கள் மால் எங்கள் திருமால்; இறைவன் இறைவன்; நாமம் பெருமானின் நாமங்களை; ஏத்தி பாராயணம் செய்து; நான் உய்ந்த ஆறே! நான் உய்ந்து போனேன்

PT 5.9.3

1430 ஒருவனைஉந்திப்பூமேல் ஓங்குவித்து, ஆகந்தன்னால் *
ஒருவனைச்சாபம்நீக்கி உம்பராளென்றுவிட்டான் *
பெருவரைமதிள்கள்சூழ்ந்தபெருநகரரவணைமேல் *
கருவரைவண்ணன் தென்பேர்கருதிநானுய்ந்தவாறே!
1430 ஒருவனை உந்திப் பூமேல் * ஓங்குவித்து ஆகம் தன்னால் *
ஒருவனைச் சாபம் நீக்கி * உம்பர் ஆள் என்று விட்டான் *
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த * பெரு நகர் அரவு அணைமேல் *
கரு வரை வண்ணன் தென் பேர் * கருதி நான் உய்ந்த ஆறே 3
1430 ŏruvaṉai untip pūmel * oṅkuvittu ākam-taṉṉāl *
ŏruvaṉaic cāpam nīkki * umpar āl̤ ĕṉṟu viṭṭāṉ *
pĕru varai matil̤kal̤ cūzhnta * pĕru nakar aravu-aṇaimel *
karu varai vaṇṇaṉ-tĕṉ per * karuti nāṉ uynta āṟe-3

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1430. He created Nānmuhan on a lotus on his navel, removed the curse of Shivā with blood from his body and told both of those gods to rule the world of the gods. I praise the names of the dark mountain-like lord who rests on Adisesha in ThenThirupper (Koiladi) surrounded by walls and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒருவனை ஒருவனை பிரமனை; உந்திப் பூ மேல் நாபிக் கமலத்தில்; ஓங்கு வித்து உண்டாக்கினவனும்; ஒருவனை ஒருவனை; ஆகம் தன்னால் மார்பிலுண்டான வியர்வை ஜலத்தாலே; சாபம் நீக்கி சாபம் நீக்கி; உம்பர் ஆள் மேலுலகங்களை ஆளக்கடவாய்; என்று விட்டான் என்று விடை கொடுத்தவனும்; பெருவரை பெரிய மலைகள் போன்ற; மதிள்கள் சூழ்ந்த மதிள்களாலே சூழந்த; பெரு நகர் திருப்பேர்நகரில்; அரவு அணை மேல் ஆதி சேஷன் மேல்; கரு வரை நீலமலை போன்ற; வண்ணன் வண்ணமுடைய பெருமானை; தென் பேர் தென் பேர் நகரில்; கருதி அவனை அநுபவிக்க ஆசைப்பட்டு; நான் உய்ந்த ஆறே! நான் உய்ந்து போனேன்

PT 5.9.4

1431 ஊனமர்தலையொன்றேந்தி உலகெலாம்திரியும்ஈசன் *
ஈனமர்சாபம்நீக்காயென்ன ஒண்புனலையீந்தான் *
தேனமர்பொழில்கள்சூழ்ந்த செறிவயல்தென்திருப்பேர் *
வானவர்தலைவன்நாமம் வாழ்த்திநானுய்ந்தவாறே!
1431 ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி * உலகு எலாம் திரியும் ஈசன் *
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன * ஒண் புனலை ஈந்தான் **
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த * செறி வயல் தென் திருப்பேர் *
வானவர் தலைவன் நாமம் * வாழ்த்தி நான் உய்ந்த ஆறே 4
1431 ūṉ amar talai ŏṉṟu enti * ulaku ĕlām tiriyum īcaṉ *
īṉ amar cāpam nīkkāy ĕṉṉa * ŏṇ puṉalai īntāṉ **
teṉ amar pŏzhilkal̤ cūzhnta * cĕṟi vayal tĕṉ tirupper *
vāṉavar-talaivaṉ nāmam * vāzhtti nāṉ uynta āṟe-4

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1431. When Shivā, carrying the skull of Nānmuhan and wandering all over the world, asked the gods of sky to remove his curse, Thirumāl gave Shivā the precious blood from his body and made Nānmuhan’s skull fall. I have praised the names of the chief of gods in the sky who stays in ThenThirupper (Koiladi) surrounded with flourishing fields and groves dripping with honey and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊன் அமர் மாம்சம் நிறைந்த பிரமனின்; தலை ஒன்று கபாலத்தை; ஏந்தி ஏந்தியவனாய்; உலகெலாம் உலகமெல்லாம் பிக்ஷார்த்தமாக; திரியும் ஈசன் திரியும் ஈசன்; ஈன் அமர் தண்மையை; சாபம் விளைவிக்கும் சாபத்தை; நீக்காய் நீக்கியருள்வாய்; என்ன என்று கூற; ஒண் புனலை மார்பிலிருந்த ஜலத்தால்; ஈந்தான் நீக்கினான்; தேன் அமர் வண்டுகள் நிறைந்த; பொழில்கள் சோலைகளால்; சூழ்ந்த செறி சூழந்த அடர்ந்த; வயல் கழனிகளையுடைய; தென் திருப்பேர் தென் திருப்பேர் நகரில்; வானவர் நித்யசூரிகளின்; தலைவன் தலைவனான எம்பெருமானின்; நாமம் நாமங்களை; வாழ்த்தி பாராயணம் செய்து; நான் உய்ந்த ஆறே! நான் உய்ந்து போனேன்

PT 5.9.5

1432 வக்கரன்வாய்முன்கீண்டமாயனே! என்றுவானேர்
புக்கு * அரண்தந்தருளாயென்னப்பொன்னாகத்தானை *
நக்கரியுருவமாகி நகம்கிளர்ந்திடந்துகந்த *
சக்கரச்செல்வன்தென்பேர்த் தலைவன்தாளடைந்துய்ந்தேனே!
1432 வக்கரன் வாய் முன் கீண்ட * மாயனே என்று வானோர்
புக்கு * அரண் தந்தருளாய் என்னப் * பொன் ஆகத்தானை **
நக்கு அரி உருவம் ஆகி * நகம் கிளர்ந்து இடந்து உகந்த *
சக்கரச் செல்வன் தென்பேர்த் * தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே 5
1432 vakkaraṉ vāy muṉ kīṇṭa * māyaṉe ĕṉṟu vāṉor
pukku * araṇ tantarul̤āy ĕṉṉap * pŏṉ ākattāṉai **
nakku ari uruvam āki * nakam kil̤arntu iṭantu ukanta *
cakkarac cĕlvaṉ tĕṉpert * talaivaṉ tāl̤ aṭaintu uynteṉe-5

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1432. When Hiranyan was afflicting the gods in the sky the gods went to Thirumāl and said to him, “You, the Māyan who split open the mouth of the Asuran Vakkaran, give us your grace and protect us, ” and the lord took the form of a laughing lion, went to Hiranyan and split open his chest with his claws. I have approached the feet of the precious god of ThenThirupper (Koiladi) who holds a discus and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் முன்பொரு சமயம்; வக்கரன் தந்தவக்ரன் என்ற அசுரனின்; வாய் கீண்ட வாயை கிழித்த; மாயவனே! என்று மாயவனே! என்று; வானோர் புக்கு தேவர்கள் வந்து; அரண் தந்து எங்களை காப்பாற்ற வேண்டும்; அருளாய் என்று துதிக்க; பொன் ஆகத்தானை இரணியனை; அரி உருவம் ஆகி நரசிம்மமாகி; நக்கு கிளர்ந்து கோபச் சிரிப்புடன்; நகம் இடந்து உகந்த நகங்களினால் கிழித்து உகந்த; சக்கரச்செல்வன் சக்கரச்செல்வனான பெருமானை; தென்பேர்த் தலைவன் தென் திருப்பேர் தலைவனை; தாள் அடைந்து பாதம் பணிந்து; உய்ந்தேனே நான் உய்ந்து போனேன்

PT 5.9.6

1433 விலங்கலால்கடலடைத்து விளங்கிழைபொருட்டு * வில்லால்
இலங்கைமாநகர்க்கிறைவன் இருபது புயம்துணித்தான் *
நலங்கொள்நான்மறைவல்லார்கள் ஒத்தொலியேத்தக்கேட்டு *
மலங்குபாய்வயல்திருப்பேர் மருவிநான்வாழ்ந்தவாறே!
1433 விலங்கலால் கடல் அடைத்து * விளங்கிழை பொருட்டு * வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் * இருபது புயம் துணித்தான் **
நலம் கொள் நான்மறை வல்லார்கள் * ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு *
மலங்கு பாய் வயல் திருப்பேர் * மருவி நான் வாழ்ந்த ஆறே 6
1433 vilaṅkalāl kaṭal aṭaittu * vil̤aṅkizhai pŏruṭṭu * villāl
ilaṅkai mā nakarkku iṟaivaṉ * irupatu puyam tuṇittāṉ **
nalam kŏl̤ nāṉmaṟai vallārkal̤ * ottu ŏli ettak keṭṭu *
malaṅku pāy vayal tirupper * maruvi nāṉ vāzhnta āṟe-6

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1433. He built a bridge with stones to go to Lankā, shot arrows from his bow, cut off the twenty arms of Rāvana the king of Lankā and brought back his wife Sita ornamented with shining jewels. I went to ThenThirupper (Koiladi) where, when the Vediyar loudly recite the four Vedās, malanku fish in the fields hear them and jump in fright, and worshiped the lord and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விளங்கிழை ஒளியுள்ள ஆபரணங்களையுடைய; பொருட்டு ஸீதைக்காக; விலங்கலால் மலைகளால்; கடல் அடைத்து கடலில் அணைகட்டி; இலங்கை மா நகர்க்கு இலங்கை; இறைவன் அரசன் ராவணனின்; இருபது புயம் இருபதுதோள்களையும்; வில்லால் வில்லால்; துணித்தான் துணித்த பெருமானை; நலம் கொள் நல்லொழுக்கமுடைய; வல்லார்கள் வல்லார்கள்; நான்மறை ஒத்து வேதங்கள் ஓதும்; ஒலி ஏத்தக் கேட்டு ஒலியைக் கேட்டு; மலங்கு பாய் மீன்கள் துள்ளி ஓடும்; வயல் வயல்களையுடைய; திருப்பேர் மருவி திருப்பேர்நகரை அடைந்து; நான் வாழ்ந்தவாறே! நான் உய்ந்து போனேன்

PT 5.9.7

1434 வெண்ணெய்தானமுதுசெய்ய வெகுண்டுமத்தாய்ச்சியோச்சி *
கண்ணியர்குறுங்கயிற்றால் கட்டவெட்டென்றிருந்தான் *
திண்ணமாமதிள்கள்சூழ்ந்த தென்திருப்பேருள் * வேலை
வண்ணனார்நாமம் நாளும்வாய்மொழிந்துய்ந்தவாறே!
1434 வெண்ணெய் தான் அமுதுசெய்ய * வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி *
கண்ணி ஆர் குறுங் கயிற்றால் * கட்ட வெட்டென்று இருந்தான் **
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த * தென் திருப்பேருள் * வேலை
வண்ணனார் நாமம் நாளும் * வாய் மொழிந்து உய்ந்த ஆறே 7
1434 vĕṇṇĕy-tāṉ amutucĕyya * vĕkuṇṭu mattu āycci occi *
kaṇṇi ār kuṟuṅ kayiṟṟāl * kaṭṭa vĕṭṭĕṉṟu iruntāṉ **
tiṇṇa mā matil̤kal̤ cūzhnta * tĕṉ tirupperul̤ * velai
vaṇṇaṉār nāmam nāl̤um * vāy mŏzhintu uynta āṟe-7

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1434. When he stole butter, Yashodā the cowherdess was angry with him, hit him with her churning stick and tied him up with a small rope, but he kept quiet. Every day I praise the names of the ocean-colored god of ThenThirupper (Koiladi) surrounded with large strong walls and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெண்ணெய் தான் யசோதையின் வெண்ணெயை; அமுது செய்ய உண்டவனை; வெகுண்டு ஆய்ச்சி ஆய்ச்சி கோபத்துடன்; மத்து ஓச்சி மத்தை ஓங்கவும்; கண்ணி ஆர் முடிச்சுகள் நிறைந்த; குறுங்கயிற்றால் கட்ட சிறிய கயிற்றால் கட்டவும்; வெட்டென்று வெட்டென்று; இருந்தான் இருந்தான் கண்ணன்; திண்ண மா திடமான பெரிய; மதிள்கள் சூழ்ந்த மதிள்களாலே சூழ்ந்த; தென் திருப்பேருள் தென் திருப்பேர் நகரில் இருக்கும்; வேலை கடல்போன்ற; வண்ணனார் நிறத்தையுடையவனின்; நாமம் நாளும் நாமங்களை; வாய் மொழிந்து தினமும் ஜபித்து; உய்ந்தவாறே! நான் உய்ந்து போனேன்

PT 5.9.8

1435 அம்பொனாருலகமேழுமறிய ஆய்ப்பாடிதன்னுள் *
கொம்பனார்பின்னைகோலம் கூடுதற்கேறுகொன்றான் *
செம்பொனார்மதிள்கள்சூழ்ந்த தென்திருப்பேருள்மேவும் *
எம்பிரான்நாமம் நாளும்ஏத்திநானுய்ந்தவாறே!
1435 அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய * ஆய்ப்பாடி தன்னுள் *
கொம்பு அனார் பின்னை கோலம் * கூடுதற்கு ஏறு கொன்றான் **
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த * தென் திருப்பேருள் * மேவும்
எம்பிரான் நாமம் நாளும் * ஏத்தி நான் உய்ந்த ஆறே 8
1435 am pŏṉ ār ulakam ezhum aṟiya * āyppāṭi-taṉṉul̤ *
kŏmpu aṉār piṉṉai kolam * kūṭutaṟku eṟu kŏṉṟāṉ **
cĕm pŏṉ ār matil̤kal̤ cūzhnta * tĕṉ tirupperul̤ * mevum
ĕmpirāṉ nāmam nāl̤um * etti nāṉ uynta āṟe-8

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1435. The lord was born in a cowherd village of Gokulam and raised there, and killed seven bulls to marry Nappinnai, as beautiful as a vine, as the gods in the beautiful golden world of the sky saw and praised him. Every day I praise the names of our god of ThenThirupper (Koiladi) surrounded with precious walls shining like gold and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் பொன் ஆர் அழகிய பொன்போன்ற சிறந்த; உலகம் ஏழும் அறிய ஏழுலங்களும் அறிய; ஆய்ப்பாடி தன்னுள் ஆய்ப்பாடியில்; கொம்பனார் கொம்பு போன்ற; பின்னை நப்பின்னையுடன்; கோலம் கூடுதற்கு கூடுவதற்காக; ஏறு கொன்றான் எருதுகளை கொன்றான்; செம்பொனார் அழகிய சிவந்த பொன்போன்ற; மதிள்கள் சூழ்ந்த மதிள்களால் சூழந்த; தென் திருப்பேருள் தென் திருப்பேர்; மேவும் நகரிலிருக்கும்; எம்பிரான் எம்பிரானின்; நாமம் நாளும் நாமங்களை தினமும்; ஏத்தி சொல்லி துதித்து; நான் உய்ந்தவாறே! நான் உய்ந்து போனேன்

PT 5.9.9

1436 நால்வகைவேதமைந்துவேள்வி ஆறங்கம்வல்லார் *
மேலைவானவரின்மிக்க வேதியர்ஆதிகாலம் *
சேலுகள்வயல்திருப்பேர்ச் செங்கண்மாலோடும்வாழ்வார் *
சீலமாதவத்தர்சிந்தையாளி என்சிந்தையானே.
1436 நால் வகை வேதம் ஐந்து வேள்வி * ஆறு அங்கம் வல்லார் *
மேலை வானவரின் மிக்க * வேதியர் ஆதி காலம் **
சேல் உகள் வயல் திருப்பேர்ச் * செங் கண் மாலோடும் வாழ்வார் *
சீல மா தவத்தர் சிந்தை ஆளி * என் சிந்தையானே 9
1436 nāl vakai vetam aintu vel̤vi * āṟu aṅkam vallār *
melai vāṉavariṉ mikka * vetiyar āti kālam **
cel ukal̤ vayal tirupperc * cĕṅ kaṇ māloṭum vāzhvār *
cīla mā tavattar cintai āl̤i * ĕṉ cintaiyāṉe-9

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1436. I worship in my mind always the Vediyars of Thenthiruperur, who have done much tapas and are more skilled than the gods in the sky from the ancient times, in all the four Vedās, the five sacrifices and the six Upanishads. They live with lovely-eyed Thirumāl in the temple in Thirupper (Koiladi) surrounded with fields where fish frolic.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நால் வகை வேதம் நான்கு வேதங்களிலும்; ஐந்து வேள்வி ஐந்து வேள்வியிலும்; ஆறு அங்கம் ஆறு வேதாங்கங்களிலும்; வல்லார் வல்லவர்களாய்; மேலை மேலுலகத்திலுள்ள; வானவரின் தேவர்களைக் காட்டிலும்; மிக்க வேதியர் மேம்பட்ட வைதிகர்கள்; ஆதி காலம் வெகுகாலமாக; சேல் உகள் மீன்கள் துள்ளும்; வயல் வயல்களையுடைய; திருப்பேர்ச் திருப்பேர் நகரின்; செங் கண் சிவந்த கண்களையுடைய; மாலோடும் திருமாலோடும்; வாழ்வார் வாழ்பவர்களாய்; சீல மா நற்குணங்களுள்ள; தவத்தர் தவம் செய்பவர்களின்; சிந்தை ஆளி உள்ளத்தில் இருப்பவன்; என் சிந்தையானே என் சிந்தையிலும் உள்ளான்

PT 5.9.10

1437 வண்டறைபொழில்திருப்பேர் வரியரவணையில்பள்ளி
கொண்டு * உறைகின்றமாலைக் கொடிமதிள்மாடமங்கை *
திண்திறல்தோள்கலியன் செஞ்சொலால்மொழிந்தமாலை *
கொண்டிவைபாடியாடக் கூடுவார்நீள்விசும்பே. (2)
1437 ## வண்டு அறை பொழில் திருப்பேர் * வரி அரவு அணையில் பள்ளி *
கொண்டு உறைகின்ற மாலைக் * கொடி மதிள் மாட மங்கை **
திண் திறல் தோள் கலியன் * செஞ்சொலால் மொழிந்த மாலை *
கொண்டு இவை பாடி ஆடக் * கூடுவர் நீள் விசும்பே 10
1437 ## vaṇṭu aṟai pŏzhil tirupper * vari aravu-aṇaiyil pal̤l̤i *
kŏṇṭu uṟaikiṉṟa mālaik * kŏṭi matil̤ māṭa maṅkai **
tiṇ tiṟal tol̤ kaliyaṉ * cĕñcŏlāl mŏzhinta mālai *
kŏṇṭu ivai pāṭi āṭak * kūṭuvar-nīl̤ vicumpe-10

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1437. Kaliyan with strong heroic arms, the king of Thirumangai where flags fly on the walls, composed a garland of pāsurams with beautiful words praising Thirumāl resting on Adisesha on the snake bed in Thirupper (Koiladi) surrounded with groves that swarm with bees. If devotees sing these pāsurams and dance, they will go to the high sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு அறை வண்டுகள் ரீங்கரிக்கும்; பொழில் சோலைகளையுடைய; திருப்பேர் திருப்பேர் நகரில்; வரி அரவு வரிகளையுடைய; அணையில் ஆதிசேஷ படுக்கையில்; பள்ளி கொண்டு சயனித்திருக்கும்; உறைகின்ற மாலை பெருமானைக் குறித்து; கொடி மதிள் கொடிகளுள்ள; மாட மாடங்கள் நிறந்த; மங்கை திருமங்கையில் பிறந்த; திண் திறல் மிக்க வலிய; தோள் தோள்களையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; செஞ் சொலால் அழகிய சொற்களால்; மொழிந்த அருளிச்செய்த; மாலை கொண்டு சொல்மாலையை; இவை பாடி ஆட பாடி ஆட வல்லவர்கள்; நீள் விசும்பே கூடுவர் பரமபதம் அடைவார்கள்