PT 5.9.6

திருப்பேர்நகர் சேர்ந்து நான் வாழ்ந்தேன்

1433 விலங்கலால்கடலடைத்து விளங்கிழைபொருட்டு * வில்லால்
இலங்கைமாநகர்க்கிறைவன் இருபது புயம்துணித்தான் *
நலங்கொள்நான்மறைவல்லார்கள் ஒத்தொலியேத்தக்கேட்டு *
மலங்குபாய்வயல்திருப்பேர் மருவிநான்வாழ்ந்தவாறே!
PT.5.9.6
1433 vilaṅkalāl kaṭal aṭaittu * vil̤aṅkizhai pŏruṭṭu * villāl
ilaṅkai mā nakarkku iṟaivaṉ * irupatu puyam tuṇittāṉ **
nalam kŏl̤ nāṉmaṟai vallārkal̤ * ottu ŏli ettak keṭṭu *
malaṅku pāy vayal tirupper * maruvi nāṉ vāzhnta āṟe-6

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1433. He built a bridge with stones to go to Lankā, shot arrows from his bow, cut off the twenty arms of Rāvana the king of Lankā and brought back his wife Sita ornamented with shining jewels. I went to ThenThirupper (Koiladi) where, when the Vediyar loudly recite the four Vedās, malanku fish in the fields hear them and jump in fright, and worshiped the lord and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விளங்கிழை ஒளியுள்ள ஆபரணங்களையுடைய; பொருட்டு ஸீதைக்காக; விலங்கலால் மலைகளால்; கடல் அடைத்து கடலில் அணைகட்டி; இலங்கை மா நகர்க்கு இலங்கை; இறைவன் அரசன் ராவணனின்; இருபது புயம் இருபதுதோள்களையும்; வில்லால் வில்லால்; துணித்தான் துணித்த பெருமானை; நலம் கொள் நல்லொழுக்கமுடைய; வல்லார்கள் வல்லார்கள்; நான்மறை ஒத்து வேதங்கள் ஓதும்; ஒலி ஏத்தக் கேட்டு ஒலியைக் கேட்டு; மலங்கு பாய் மீன்கள் துள்ளி ஓடும்; வயல் வயல்களையுடைய; திருப்பேர் மருவி திருப்பேர்நகரை அடைந்து; நான் வாழ்ந்தவாறே! நான் உய்ந்து போனேன்