PT 5.9.4

அப்பக் குடத்தானை வாழ்த்தி நான் உய்ந்தேன்

1431 ஊனமர்தலையொன்றேந்தி உலகெலாம்திரியும்ஈசன் *
ஈனமர்சாபம்நீக்காயென்ன ஒண்புனலையீந்தான் *
தேனமர்பொழில்கள்சூழ்ந்த செறிவயல்தென்திருப்பேர் *
வானவர்தலைவன்நாமம் வாழ்த்திநானுய்ந்தவாறே!
PT.5.9.4
1431 ūṉ amar talai ŏṉṟu enti * ulaku ĕlām tiriyum īcaṉ *
īṉ amar cāpam nīkkāy ĕṉṉa * ŏṇ puṉalai īntāṉ **
teṉ amar pŏzhilkal̤ cūzhnta * cĕṟi vayal tĕṉ tirupper *
vāṉavar-talaivaṉ nāmam * vāzhtti nāṉ uynta āṟe-4

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1431. When Shivā, carrying the skull of Nānmuhan and wandering all over the world, asked the gods of sky to remove his curse, Thirumāl gave Shivā the precious blood from his body and made Nānmuhan’s skull fall. I have praised the names of the chief of gods in the sky who stays in ThenThirupper (Koiladi) surrounded with flourishing fields and groves dripping with honey and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊன் அமர் மாம்சம் நிறைந்த பிரமனின்; தலை ஒன்று கபாலத்தை; ஏந்தி ஏந்தியவனாய்; உலகெலாம் உலகமெல்லாம் பிக்ஷார்த்தமாக; திரியும் ஈசன் திரியும் ஈசன்; ஈன் அமர் தண்மையை; சாபம் விளைவிக்கும் சாபத்தை; நீக்காய் நீக்கியருள்வாய்; என்ன என்று கூற; ஒண் புனலை மார்பிலிருந்த ஜலத்தால்; ஈந்தான் நீக்கினான்; தேன் அமர் வண்டுகள் நிறைந்த; பொழில்கள் சோலைகளால்; சூழ்ந்த செறி சூழந்த அடர்ந்த; வயல் கழனிகளையுடைய; தென் திருப்பேர் தென் திருப்பேர் நகரில்; வானவர் நித்யசூரிகளின்; தலைவன் தலைவனான எம்பெருமானின்; நாமம் நாமங்களை; வாழ்த்தி பாராயணம் செய்து; நான் உய்ந்த ஆறே! நான் உய்ந்து போனேன்