Chapter 10

Thirunandipuravinnagaram - (தீது அறு)

திருநந்திபுரவிண்ணகரம்
Thirunandipuravinnagaram - (தீது அறு)
This Divya Desam is located about three miles southwest of Kumbakonam. It is also known as Nathan Kovil. The presiding deity here is Jagannathan.
கும்பகோணத்திற்குத் தென்மேற்கே சுமார் மூன்று மைல் தொலைவிலுள்ளது இந்தத் திவ்விய தேசம். இதற்கு நாதன் கோவில் என்றும் பெயர். இங்குள்ள பெருமாளுக்கு ஜகந்நாதன் என்பது திருநாமம்.
Verses: 1438 to 1447
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • PT 5.10.1
    1438 ## தீது அறு நிலத்தொடு எரி காலினொடு * நீர் கெழு
    விசும்பும் அவை ஆய் *
    மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை * அவை
    ஆய பெருமான் **
    தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு * தட
    மார்வர் தகைசேர் *
    நாதன் உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
    நண்ணு மனமே 1
  • PT 5.10.2
    1439 உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு * ஏழும் ஒழி
    யாமை முன நாள் *
    மெய்யின் அளவே அமுதுசெய்ய வல * ஐயன் அவன்
    மேவும் நகர் தான் **
    மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு * மலர்
    கிண்டி அதன்மேல் *
    நைவளம் நவிற்று பொழில் * நந்திபுரவிண்ணகரம்
    நண்ணு மனமே 2
  • PT 5.10.3
    1440 உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் * ஒழி
    யாமை முன நாள் *
    தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த * தட
    மார்வர் தகை சேர் **
    வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி * மணி
    கங்குல் வயல் சூழ் *
    நம்பன் உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
    நண்ணு மனமே 3
  • PT 5.10.4
    1441 பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என *
    வந்த அசுரர் *
    இறைகள் அவை நெறு நெறு என வெறிய அவர் வயிறு அழல *
    நின்ற பெருமான் **
    சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல *
    அடிகொள் நெடு மா *
    நறைசெய் பொழில் மழை தவழும் * நந்திபுரவிண்ணகரம்
    நண்ணு மனமே 4
  • PT 5.10.5
    1442 மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என *
    வந்த அசுரர் *
    தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக * நொடி
    ஆம் அளவு எய்தான் **
    வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் * இவை
    அம்கை உடையான் *
    நாளும் உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
    நண்ணு மனமே 5
  • PT 5.10.6
    1443 தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் * துணை
    ஆக முன நாள் *
    வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் * இனிது
    மேவும் நகர் தான் **
    கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் * எழில்
    ஆர் புறவு சேர் *
    நம்பி உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
    நண்ணு மனமே 6
  • PT 5.10.7
    1444 தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் *
    நந்தன் மதலை *
    எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ *
    நின்ற நகர் தான் **
    மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் * மயில்கள்
    ஆடு பொழில் சூழ் *
    நந்தி பணிசெய்த நகர் * நந்திபுரவிண்ணகரம்
    நண்ணு மனமே 7
  • PT 5.10.8
    1445 எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று * முனி
    யாளர் திரு ஆர் *
    பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு *
    கூட எழில் ஆர் **
    மண்ணில் இதுபோல நகர் இல்லை என * வானவர்கள்
    தாம் மலர்கள் தூய் *
    நண்ணி உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
    நண்ணு மனமே 8
  • PT 5.10.9
    1446 வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக *
    மிக்க பெருநீர் *
    அங்கம் அழியார் அவனது ஆணை * தலை சூடும் அடியார்
    அறிதியேல் **
    பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி *
    எங்கும் உளதால் *
    நங்கள் பெருமான் உறையும் * நந்திபுரவிண்ணகரம்
    நண்ணு மனமே 9
  • PT 5.10.10
    1447 ## நறை செய் பொழில் மழை தவழும் * நந்திபுரவிண்ணகரம்
    நண்ணி உறையும் *
    உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் * அவை அம் கை உடை
    யானை ** ஒளி சேர்
    கறை வளரும் வேல் வல்ல * கலியன் ஒலி மாலை இவை
    ஐந்தும் ஐந்தும் *
    முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் *
    முழுது அகலுமே 10