PT 5.9.1

பரமனைப் பாடி நான் உய்ந்தேன்

1428 கையிலங்காழி சங்கன் கருமுகில்திருநிறத்தன் *
பொய்யிலன்மெய்யன் தந்தாளடைவரேல்அடிமையாக்கும் *
செய்யலர்கமலமோங்கு செறிபொழில்தென்திருப்பேர் *
பையரவணையான்நாமம் பரவிநானுய்ந்தவாறே! (2)
PT.5.9.1
1428 ## kai ilaṅku āzhi caṅkaṉ * karu mukil tiru niṟattaṉ *
pŏy ilaṉ mĕyyaṉ-taṉ tāl̤ * aṭaivarel aṭimai ākkum *
cĕy alar kamalam oṅku * cĕṟi pŏzhil tĕṉ tirupper *
pai aravu-aṇaiyāṉ nāmam * paravi nāṉ uynta āṟe-1

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1428. The dark colored lord who carries a shining discus and a conch in his hands, is not false but a true god and if you approach him he will accept you as his devotee. I have praised the names of him who rests on Adisesha, the snake bed in ThenThirupper (Koiladi) surrounded by thick groves where beautiful lotuses bloom and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கை இலங்கு கையில்; ஆழி சங்கன் சங்கு சக்கரமுடையவனும்; கரு முகில் கருத்த மேகம்; திரு நிறத்தன் போன்ற நிறமுடையவனும்; பொய் இலன் பொய்யில்லாதவனும்; மெய்யன் தன் மெய்யனும்; தாள் அவன் பாதம்; அடைவரேல் பணிபவராகில்; அடிமை ஆக்கும் தனக்கு அடிமை ஆக்கிக் கொள்வான்; அலர் மலர்ந்த; கமலம் ஓங்கு செய் தாமரைகளுடன் கூடின; செறி பொழில் அடர்ந்த சோலைகளையுடைய; தென் திருப்பேர் தென் திருப்பேர் நகரில்; பை அரவு பரந்த படங்களுடைய பாம்பு; அணையான் படுக்கையிலிருக்கும்; நாமம் பெருமானின் நாமங்களை; பரவி பாராயணம் செய்து; நான் உய்ந்த ஆறே! நான் உய்ந்து போனேன்