PT 5.9.7

கண்ணனின் பெயரையே சொல்லி உய்ந்தேன்

1434 வெண்ணெய்தானமுதுசெய்ய வெகுண்டுமத்தாய்ச்சியோச்சி *
கண்ணியர்குறுங்கயிற்றால் கட்டவெட்டென்றிருந்தான் *
திண்ணமாமதிள்கள்சூழ்ந்த தென்திருப்பேருள் * வேலை
வண்ணனார்நாமம் நாளும்வாய்மொழிந்துய்ந்தவாறே!
PT.5.9.7
1434 vĕṇṇĕy-tāṉ amutucĕyya * vĕkuṇṭu mattu āycci occi *
kaṇṇi ār kuṟuṅ kayiṟṟāl * kaṭṭa vĕṭṭĕṉṟu iruntāṉ **
tiṇṇa mā matil̤kal̤ cūzhnta * tĕṉ tirupperul̤ * velai
vaṇṇaṉār nāmam nāl̤um * vāy mŏzhintu uynta āṟe-7

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1434. When he stole butter, Yashodā the cowherdess was angry with him, hit him with her churning stick and tied him up with a small rope, but he kept quiet. Every day I praise the names of the ocean-colored god of ThenThirupper (Koiladi) surrounded with large strong walls and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெண்ணெய் தான் யசோதையின் வெண்ணெயை; அமுது செய்ய உண்டவனை; வெகுண்டு ஆய்ச்சி ஆய்ச்சி கோபத்துடன்; மத்து ஓச்சி மத்தை ஓங்கவும்; கண்ணி ஆர் முடிச்சுகள் நிறைந்த; குறுங்கயிற்றால் கட்ட சிறிய கயிற்றால் கட்டவும்; வெட்டென்று வெட்டென்று; இருந்தான் இருந்தான் கண்ணன்; திண்ண மா திடமான பெரிய; மதிள்கள் சூழ்ந்த மதிள்களாலே சூழ்ந்த; தென் திருப்பேருள் தென் திருப்பேர் நகரில் இருக்கும்; வேலை கடல்போன்ற; வண்ணனார் நிறத்தையுடையவனின்; நாமம் நாளும் நாமங்களை; வாய் மொழிந்து தினமும் ஜபித்து; உய்ந்தவாறே! நான் உய்ந்து போனேன்