PT 5.9.10

தேவர் உலகு கிடைக்கும்

1437 வண்டறைபொழில்திருப்பேர் வரியரவணையில்பள்ளி
கொண்டு * உறைகின்றமாலைக் கொடிமதிள்மாடமங்கை *
திண்திறல்தோள்கலியன் செஞ்சொலால்மொழிந்தமாலை *
கொண்டிவைபாடியாடக் கூடுவார்நீள்விசும்பே. (2)
PT.5.9.10
1437 ## vaṇṭu aṟai pŏzhil tirupper * vari aravu-aṇaiyil pal̤l̤i *
kŏṇṭu uṟaikiṉṟa mālaik * kŏṭi matil̤ māṭa maṅkai **
tiṇ tiṟal tol̤ kaliyaṉ * cĕñcŏlāl mŏzhinta mālai *
kŏṇṭu ivai pāṭi āṭak * kūṭuvar-nīl̤ vicumpe-10

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1437. Kaliyan with strong heroic arms, the king of Thirumangai where flags fly on the walls, composed a garland of pāsurams with beautiful words praising Thirumāl resting on Adisesha on the snake bed in Thirupper (Koiladi) surrounded with groves that swarm with bees. If devotees sing these pāsurams and dance, they will go to the high sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு அறை வண்டுகள் ரீங்கரிக்கும்; பொழில் சோலைகளையுடைய; திருப்பேர் திருப்பேர் நகரில்; வரி அரவு வரிகளையுடைய; அணையில் ஆதிசேஷ படுக்கையில்; பள்ளி கொண்டு சயனித்திருக்கும்; உறைகின்ற மாலை பெருமானைக் குறித்து; கொடி மதிள் கொடிகளுள்ள; மாட மாடங்கள் நிறந்த; மங்கை திருமங்கையில் பிறந்த; திண் திறல் மிக்க வலிய; தோள் தோள்களையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; செஞ் சொலால் அழகிய சொற்களால்; மொழிந்த அருளிச்செய்த; மாலை கொண்டு சொல்மாலையை; இவை பாடி ஆட பாடி ஆட வல்லவர்கள்; நீள் விசும்பே கூடுவர் பரமபதம் அடைவார்கள்