PT 5.9.2

திருமாலைத் துதித்து நான் உய்ந்தேன்

1429 வங்கமார்கடல்களேழும் மலையும்வானகமும்மற்றும் *
அங்கண்மாஞாலமெல்லாம் அமுதுசெய்துமிழ்ந்தஎந்தை *
திங்கள்மாமுகிலணவு செறிபொழில்தென்திருப்பேர் *
எங்கள்மாலிறைவன்நாமம் ஏத்திநானுய்ந்தவாறே!
PT.5.9.2
1429 vaṅkam ār kaṭalkal̤ ezhum * malaiyum vāṉakamum maṟṟum *
am kaṇ mā ñālam ĕllām * amutucĕytu umizhnta ĕntai *
tiṅkal̤ mā mukil aṇavu * cĕṟi pŏzhil tĕṉ tirupper *
ĕṅkal̤ māl iṟaivaṉ nāmam * etti nāṉ uynta āṟe-2

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1429. I have praised the names of Thirumāl, our father who swallowed the seven oceans, the mountains, the sky and all the beautiful worlds and spat them out, the god of ThenThirupper (Koiladi) surrounded with thick groves that touch the dark clouds and the moon and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வங்கம் ஆர் மரக்கலங்கள் நிறைந்த; கடல்கள் ஏழும் கடல்கள் ஏழும்; மலையும் மலையும்; வானகமும் மற்றும் வானகமும் மற்றும்; அங்கண் மா அழகிய பரந்த; ஞாலம் எல்லாம் பூமியும் ஆகியவற்றை; அமுது செய்து அமுது செய்து; உமிழ்ந்த எந்தை ஸ்ருஷ்டித்த என் தந்தை; திங்கள் சந்திரனையும்; மா முகில் மேகத்தையும்; அணவு அளாவியிருக்கும்; செறி பொழில் அடர்ந்த சோலைகளையுடைய; தென் திருப்பேர் தென் திருப்பேர் நகரில்; எங்கள் மால் எங்கள் திருமால்; இறைவன் இறைவன்; நாமம் பெருமானின் நாமங்களை; ஏத்தி பாராயணம் செய்து; நான் உய்ந்த ஆறே! நான் உய்ந்து போனேன்