Chapter 4

Thiruvarangam 1 - (உந்திமேல் நான்முகனை)

திருவரங்கம் 1
Thiruvarangam 1 - (உந்திமேல் நான்முகனை)
Thiruvarangam is commonly known as Srirangam. It is often referred to as the earthly Vaikuntha. This temple is highly esteemed as 'Koyil' by Sri Vaishnavas. Located amidst the Kaveri River, this sacred place houses the deity Sri Ranganatha and the goddess Sri Ranganayaki. The lord is seen reclining on Adisesha, the divine serpent. Additionally, he holds the unique honor of being the deity glorified by the ten āzhvārs.
திருவரங்கத்தை ஸ்ரீரங்கம் என்று கூறுவது வழக்கம். பூலோக வைகுண்டம் என்று இதைக் கூறுவார்கள். ஸ்ரீவைஷ்ணவர்கள் கோயில் என்றே இதனைச் சிறப்பித்துச் சொல்வார்கள். காவிரி நதிக்கு இடையில் இத்தலம் இருக்கிறது. பெருமாள் ஸ்ரீரங்கநாதர். தாயார் ஸ்ரீரங்கநாச்சியார். பெருமாள் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக்கொண்டு இருக்கிறார். இவருக்குப் பதின்மர் பாடும் பெருமாள் என்றும் ஒரு பெருமை உண்டு.
Verses: 1378 to 1387
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will rule this world and then go to Vaikuṇṭam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 5.4.1

1378 உந்திமேல்நான்முகனைப்படைத்தான் உலகுண்டவன்
எந்தைபெம்மான் * இமையோர்கள்தாதைக்கு இடமென்பரால் *
சந்தினோடுமணியும்கொழிக்கும் புனல்காவிரி *
அந்திபோலும்நிறத்தார்வயல்சூழ் தென்னரங்கமே. (2)
1378 ## உந்திமேல் நான்முகனைப் படைத்தான் * உலகு உண்டவன்
எந்தை பெம்மான் * இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் **
சந்தினோடு மணியும் கொழிக்கும் * புனல் காவிரி *
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ் * தென் அரங்கமே 1
1378 ## untimel nāṉmukaṉaip paṭaittāṉ * ulaku uṇṭavaṉ
ĕntai pĕmmāṉ * imaiyorkal̤ tātaikku iṭam ĕṉparāl ** -
cantiṉoṭu maṇiyum kŏzhikkum * puṉal kāviri *
antipolum niṟattu ār vayal cūzh * tĕṉ araṅkame-1

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1378. Our father, the father of the gods who created Nānmuhan on his navel and swallowed all the seven worlds stays in Thennarangam surrounded with fields flourishing with paddy that is golden like the bright evening where the Kaveri flows carrying abundant sandalwood and jewels.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சந்தினோடு சந்தனக்கட்டைகளையும்; மணியும் நவரத்னங்களையும்; கொழிக்கும் தள்ளிக்கொண்டு பெருகும்; புனல் நீரையுடைய; காவிரி காவிரி நதியாலும்; அந்திபோலும் மாலைப் பொழுதின்; நிறத்து நிறத்தையுடைய; ஆர் வயல் சூழ் வயல்களாலும் சூழ்ந்த; தென் அரங்கமே ஸ்ரீரங்கம்; உந்தி மேல் நான்முகனை நாபியிலே பிரமனை; படைத்தான் ஸ்ருஷ்டித்தவனும்; உலகு பிரளயகாலத்தில்; உண்டவன் உலகை உண்டவனும்; எந்தை என் தந்தையான; பெம்மான் எம்பெம்மான்; இமையோர்கள் நித்யஸூரிகளுக்குத்; தாதைக்கு தலைவனான; இடம் பெருமான் இருக்குமிடம்; என்பரால் என்று சொல்லுவர்கள்

PT 5.4.2

1379 வையமுண்டுஆலிலைமேவுமாயன், மணிநீண்முடி *
பைகொள்நாகத்தணையான் பயிலும்இடமென்பரால் *
தையல்நல்லார்குழல்மாலையும் மற்றவர்தடமுலை *
செய்யசாந்தும்கலந்திழிபுனல்சூழ் தென்னரங்கமே.
1379 வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன் * மணி நீள் முடி *
பை கொள் நாகத்து அணையான் * பயிலும் இடம் என்பரால் **
தையல் நல்லார் குழல் மாலையும் * மற்று அவர் தட முலை *
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் * தென் அரங்கமே 2
1379 vaiyam uṇṭu āl ilai mevum māyaṉ * maṇi nīl̤ muṭi *
pai kŏl̤ nākattu aṇaiyāṉ * payilum iṭam ĕṉparāl ** -
taiyal nallār kuzhal mālaiyum * maṟṟu avar taṭa mulai *
cĕyya cāntum kalantu izhi puṉal cūzh * tĕṉ araṅkame-2

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1379. Our Māyan who swallowed the whole world and slept on a banyan leaf and who rests on the ocean on the snake Adisesha that has diamonds on his thousand heads stays in Thennarangam surrounded by the Kaveri flowing with abundant water mixed with sandal paste that had been smeared on women’s large breasts and with flowers from the garlands that adorned their beautiful hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நல்ல; தையலார் ஸ்த்ரீகளினுடைய; குழல் தலையிலணிந்த; மாலையும் பூமாலைகளும்; மற்று அவர் அவர்களுடைய; தட முலை மார்பகங்களில்; செய்ய சாந்தும் இருந்த சிவந்த சந்தனமும்; கலந்து கலந்து; இழி புனல் சூழ் பெருகும் நீர் சூழ்ந்த; தென் அரங்கமே ஸ்ரீரங்கம்; வையம் உண்டு உலகம் உண்டு; ஆலிலை மேவும் ஆலிலை மேல்; மாயன் சயனித்திருக்கும் மாயன்; மணி ரத்தினங்கள் இழைக்கப்பட்ட; நீள் முடி கிரீடமணிந்தவனும்; பை கொள் ஆதி சேஷன்; நாகத்து என்னும் நாகத்தை; அணையான் படுக்கையாகக் கொண்ட பெருமான்; பயிலும் இடம் இருக்கும் இடம்; என்பரால் என்று சொல்லுவர்

PT 5.4.3

1380 பண்டுஇவ்வையமளப்பான் சென்று மாவலிகையில்நீர்
கொண்ட * ஆழித்தடக்கைக் குறளனிடமென்பரால் *
வண்டுபாடும்மதுவார்புனல் வந்திழிகாவிரி *
அண்டநாறும்பொழில்சூழ்ந்து அழகார்தென்னரங்கமே.
1380 பண்டு இவ் வையம் அளப்பான் சென்று * மாவலி கையில் நீர்
கொண்ட * ஆழித் தடக் கைக் * குறளன் இடம் என்பரால் **
வண்டு பாடும் மது வார் * புனல் வந்து இழி காவிரி *
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து * அழகு ஆர் தென் அரங்கமே 3
1380 paṇṭu iv vaiyam al̤appāṉ cĕṉṟu * māvali kaiyil nīr
kŏṇṭa * āzhit taṭak kaik * kuṟal̤aṉ iṭam ĕṉparāl ** -
vaṇṭu pāṭum matu vār * puṉal vantu izhi kāviri *
aṇṭam nāṟum pŏzhil cūzhntu * azhaku ār tĕṉ araṅkame-3

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1380. Our lord who went as a dwarf in ancient times, took water in his large hands from Mahabali and measured the world and sky stays in beautiful flourishing Thennarangam where the Kaveri flows with sweet honey-like water and bees sing and the fragrance of the groves rises to the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு வண்டுகள்; பாடும் ரீங்காரம் செய்யும்; மது வார் தேன் பெருகும்; புனல் வந்து நீர் வந்து; இழி பிரவகிக்கும்; காவிரி காவேரியினாலும்; அண்ட ஆகாச மெங்கும்; நாறும் நறுமணம் வீசும்; பொழில் சூழ்ந்து சோலைகளாலும் சூழ்ந்த; அழகு ஆர் தென் அரங்கமே அழகிய ஸ்ரீரங்கம்; பண்டு முன்பொருசமயம்; இவ் வையம் இப்பூமியை; அளப்பான் அளந்து தன் வசப்படுத்தி; சென்று கொள்வதற்காக; மாவலி கையில் மஹாபலியிடமிருந்து; நீர் கொண்ட தான நீரைப் பெற்ற; ஆழித் தடக் கை சக்கரக் கையாலே; குறளன் ஏற்றுக்கொண்ட வாமனன்; இடம் என்பரால் இடமென்று சொல்லுவர்

PT 5.4.4

1381 விளைத்தவெம்போர் விறல்வாளரக்கன்நகர்பாழ்பட *
வளைத்தவல்வில்தடக்கையவனுக்கு இடமென்பரால் *
துளைக்கையானைமருப்பும் அகிலும்கொணர்ந்துந்தி * முன்
திளைக்கும்செல்வப்புனல்காவிரிசூழ் தென்னரங்கமே.
1381 விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் * நகர் பாழ்பட *
வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு * இடம் என்பரால் **
துளைக் கை யானை மருப்பும் அகிலும் * கொணர்ந்து உந்தி * முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் * தென் அரங்கமே 4
1381 vil̤aitta vĕm por viṟal vāl̤ arakkaṉ * nakar pāzhpaṭa *
val̤aitta val vil taṭakkai-avaṉukku * iṭam ĕṉparāl ** -
tul̤aik kai yāṉai maruppum akilum * kŏṇarntu unti * muṉ
til̤aikkum cĕlvap puṉal kāviri cūzh * tĕṉ araṅkame-4

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1381. Our god who as Rāma bent his bow and destroyed Lankā, the kingdom of the Rakshasā king Rāvana with a heroic sword and fought with him in a cruel battle stays in Thennarangam surrounded by the flourishing Kaveri and its abundant water that brings elephant tusks and akil and throws them onto its banks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துளைக் கை துதிக்கையையுடைய; யானை யானைகளின்; மருப்பும் தந்தங்களையும்; அகிலும் அகில் மரங்களையும்; கொணர்ந்து அடித்துக் கொண்டுவந்து; உந்தி முன் முன்னே தள்ளி; திளைக்கும் லீலாரஸமனுபவிக்கின்ற; செல்வப் புனல் தீர்த்தத்தையுடைய; காவிரி காவேரியினால்; சூழ் தென் அரங்கமே சூழ்ந்த ஸ்ரீரங்கம்; விளைத்த கடுமையான; வெம் போர் யுத்தத்தை உண்டாக்கின; விறல் வாள் வாட்படைவல்லன்; அரக்கன் இராவணனின்; நகர் நகரமாகிய; பாழ்பட இலங்கை அழியும்படியாக; வளைத்த வல்வில் வில் வளைத்த; தடக்கை விசாலமான கையை உடைய; அவனுக்கு பெருமானுக்கு; இடம் என்பரால் இடமென்று சொல்லுவர்

PT 5.4.5

1382 வம்புலாம்கூந்தல்மண்டோதரிகாதலன் வான்புக *
அம்புதன்னால்முனிந்த அழகனிடமென்பரால் *
உம்பர்கோனும்உலகேழும் வந்தீண்டிவணங்கும் * நல்
செம்பொனாரும்மதிள்சூழ்ந்து அழகார்தென்னரங்கமே.
1382 வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் * வான் புக *
அம்பு தன்னால் முனிந்த * அழகன் இடம் என்பரால் **
உம்பர் கோனும் உலகு ஏழும் * வந்து ஈண்டி வணங்கும் * நல்
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து * அழகு ஆர் தென் அரங்கமே 5
1382 vampu ulām kūntal maṇṭotari kātalaṉ * vāṉ puka *
ampu-taṉṉāl muṉinta * azhakaṉ iṭam ĕṉparāl ** -
umpar-koṉum ulaku ezhum * vantu īṇṭi vaṇaṅkum * nal
cĕmpŏṉ ārum matil̤ cūzhntu * azhaku ār tĕṉ araṅkame-5

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1382. The handsome Rāma who grew angry, bent his bow, and fought and sent to the sky the Rakshasā Rāvana, the beloved husband of Mandodari whose hair swarmed with bees stays in Thennarangam surrounded by beautiful golden walls where Indra the king of the gods and people of all the seven worlds come to worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உம்பர் தேவர்களுக்கு; கோனும் தலைவன் பிரமனும்; உலகேழும் வந்து ஏழு உலகத்தவர்களும் வந்து; ஈண்டி வணங்கும் ஒன்றாக வணங்கும்; நல் செம் நல்ல; பொன் ஆரும் செம்பொன்னோடு ஒத்த; மதிள் சூழ்ந்து மதிள்களால் சூழ்ந்த; அழகு ஆர் தென்அரங்கமே அழகிய ஸ்ரீரங்கம்; வம்பு உலாம் மணம் மிக்க; கூந்தல் கூந்தலை யுடைய; மண்டோதரி மண்டோதரியின்; காதலன் கணவன் இராவணன்; வான் புக வீர ஸ்வர்க்கமடைய; அம்பு தன்னால் அம்பு களைக் கொண்டு; முனிந்த அழகன் சீறி அழித்த; இடம் என்பரால் இடமென்று சொல்லுவர்

PT 5.4.6

1383 கலையுடுத்தஅகலல்குல் வன்பேய்மகள்தாயென *
முலைகொடுத்தாளுயிருண்டவன் வாழுமிடமென்பரால் *
குலையெடுத்தகதலிப் பொழிலூடும்வந்துஉந்தி * முன்
அலையெடுக்கும்புனல்காவிரிசூழ் தென்னரங்கமே.
1383 கலை உடுத்த அகல் அல்குல் * வன் பேய் மகள் தாய் என *
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் * வாழும் இடம் என்பரால் **
குலை எடுத்த கதலிப் * பொழிலூடும் வந்து உந்தி * முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் * தென் அரங்கமே 6
1383 kalai uṭutta akal alkul * vaṉ pey makal̤ tāy ĕṉa *
mulai kŏṭuttāl̤ uyir uṇṭavaṉ * vāzhum iṭam ĕṉparāl ** -
kulai ĕṭutta katalip * pŏzhilūṭum vantu unti * muṉ
alai ĕṭukkum puṉal kāviri cūzh * tĕṉ araṅkame-6

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1383. Kannan who drank milk from the terrible devil Putanā and killed her after she had come wearing a lovely garment around her waist stays in Thennarangam surrounded by the Kaveri with its rolling waves that flows by banana groves filled with bunches of fruits.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குலை எடுத்த குலைகள் ஓங்கியிருக்கும்; கதலிப் வாழை; பொழில் தோப்புகளினுள்ளே புகுந்து; ஊடும் அம்மரங்களை; வந்து பறித்துக்கொண்டு வந்து; உந்தி முன் முன்னே தள்ளி; அலை எடுக்கும் அலை வீசும்; புனல் காவிரி நீரையுடைய காவிரி; சூழ் சூழ்ந்த; தென் அரங்கமே ஸ்ரீரங்கம்; கலை உடுத்த பட்டாடையணிந்த; அகல்அல்குல் அகன்ற இடையுடைய; தாய் என தாயான யசோதை போல் வந்த; வன் பேய் மகள் வலிய பூதனை; முலை கொடுத்தாள் பாலூட்ட; உயிருண்டவன் பிராணனை உண்ட; வாழ் கண்ணபிரான் வாழும்; இடம் என்பரால் இடமென்று சொல்லுவர்

PT 5.4.7

1384 கஞ்சன்நெஞ்சும்கடுமல்லரும் சகடமுங்காலினால் *
துஞ்சவென்றசுடராழியான் வாழிடமென்பரால் *
மஞ்சுசேர்மாளிகை நீடகில்புகையும் * மறையோர்
செஞ்சொல்வேள்விப்புகையும்கமழும் தென்னரங்கமே.
1384 கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் * சகடமும் காலினால் *
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் * வாழ் இடம் என்பரால் **
மஞ்சு சேர் மாளிகை * நீடு அகில் புகையும் மறையோர் *
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் * தென் அரங்கமே 7
1384 kañcaṉ nĕñcum kaṭu mallarum * cakaṭamum kāliṉāl *
tuñca vĕṉṟa cuṭar āzhiyāṉ * vāzh iṭam ĕṉparāl ** -
mañcu cer māl̤ikai * nīṭu akil pukaiyum maṟaiyor *
cĕñcŏl vel̤vip pukaiyum kamazhum * tĕṉ araṅkame-7

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1384. Our god who conquered Kamsan and the cruel wrestlers with his shining discus and defeated Sakatāsuran when he came as a cart stays in Thennarangam where the fragrance of the smoke of the sacrifices performed by the Vediyar reciting mantras and the fragrant smoke of the incense from the palaces spreads everywhere among the clouds floating above them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மஞ்சு மேகமண்டலத்தை; சேர் தொடுமளவு இருக்கும்; மாளிகை உயர்ந்த; நீடு மாளிகைகளிலுண்டான; அகில் புகையும் அகிற்புகையும்; மா மறையோர் சிறந்த வைதிகர்கள்; செஞ்சொல் விதிப்படி நடத்துகிற; வேள்வி யாகங்களிலுண்டான; புகையும் கமழும் ஹோம தூபமும் கமழும்; தென் அரங்கமே ஸ்ரீரங்கம்; கஞ்சன் நெஞ்சும் கம்ஸனுடைய மனமும்; கடு மல்லரும் கொடிய மல்லர்களும்; சகடமும் சகடாஸுரனும்; துஞ்ச காலினால் அழியும்படி காலினால்; வென்ற வென்ற; சுடர் ஒளிமிக்க; ஆழியான் சக்கரகையையுடைய; வாழும் பெருமான் வாழும்; இடம் என்பரால் இடமென்று சொல்லுவர்

PT 5.4.8

1385 ஏனமீனாமையோடு அரியும்சிறுகுறளுமாய் *
தானுமாய தரணித்தலைவனிடமென்பரால் *
வானும்மண்ணும்நிறையப் புகுந்துஈண்டிவணங்கும் * நல்
தேனும்பாலும்கலந்தன்னவர்சேர் தென்னரங்கமே.
1385 ஏனம் மீன் ஆமையோடு * அரியும் சிறு குறளும் ஆய் *
தானும் ஆய * தரணித் தலைவன் இடம் என்பரால் **
வானும் மண்ணும் நிறையப் * புகுந்து ஈண்டி வணங்கும் * நல்
தேனும் பாலும் கலந்த * அன்னவர் சேர் தென் அரங்கமே 8
1385 eṉam mīṉ āmaiyoṭu * ariyum ciṟu kuṟal̤um āy *
tāṉum āya * taraṇit talaivaṉ iṭam ĕṉparāl **
vāṉum maṇṇum niṟaiyap * pukuntu īṇṭi vaṇaṅkum * nal
teṉum pālum kalanta * aṉṉavar cer tĕṉ araṅkame-8

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1385. The matchless lord of the earth who took the form of a boar, fish, turtle, man-lion and a dwarf stays in Thennarangam where the people of the earth and the gods of the sky gather together, mixing like milk and honey, and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானும் விண்ணுலகத்தவரும்; மண்ணும் மண்ணுலகத்தவரும்; நிறைய ஏராளமாக; புகுந்து வந்து சேர்ந்து; ஈண்டி ஒன்றாகத்திரண்டு; வணங்குதல் நல் வணங்கும் நல்ல; தேனும் மதுரமான தேனும்; பாலும் பாலும் ஒன்றாக இருக்கும்; கலந்தன்னவர் சுவையை ஒத்த பக்தர்கள்; சேர் கூடியிருக்கும்; தென் அரங்கமே ஸ்ரீரங்கம்; ஏனம் மீன் வராஹம் மீன்; ஆமையோடு ஆமை; அரியும் நரசிம்மம்; சிறு குறளும் ஆய் வாமனன்; தானும் ஆய ராமனுமாக; தரணி அவதரித்தவனான; தலைவன் தலைவன் இருக்கும்; இடம் என்பரால் இடமென்று சொல்லுவர்

PT 5.4.9

1386 சேயன்என்றும்மிகப்பெரியன் நுண்நேர்மையினாய * இம்
மாயையையாரும்அறியாவகையான் இடமென்பரால் *
வேயின்முத்தும்மணியும்கொணர்ந்து ஆர்ப்புனல்காவிரி *
ஆயபொன்மாமதிள்சூழ்ந்த அழகார்தென்னரங்கமே.
1386 சேயன் என்றும் மிகப் பெரியன் * நுண் நேர்மையன் ஆய * இம்
மாயையை ஆரும் அறியா * வகையான் இடம் என்பரால் **
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து * ஆர் புனல் காவிரி *
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து * அழகு ஆர் தென் அரங்கமே 9
1386 ceyaṉ ĕṉṟum mikap pĕriyaṉ * nuṇ nermaiyaṉ āya * im
māyaiyai ārum aṟiyā * vakaiyāṉ iṭam ĕṉparāl ** -
veyiṉ muttum maṇiyum kŏṇarntu * ār puṉal kāviri *
āya pŏṉ mā matil̤ cūzhntu * azhaku ār tĕṉ araṅkame-9

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1386. The god whom people praise saying, “He is the greatest god. He is far from our eyes, and he is forthright and impartial. No one knows his māya. ” stays in Thennarangam surrounded by precious golden walls where the Kaveri with its abundant water brings jewels and pearls from bamboo canes that have split open and leaves them on its banks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேயின் மூங்கில்களிலிருந்து முதிர்ந்த; முத்தும் முத்துக்களையும்; மணியும் ரத்னங்களையும்; கொணர்ந்து தள்ளிகொண்டுவந்து; ஆர் புனல் நிறைத்திருக்கும் நீரையுடைய; காவிரி காவிரியாலும்; ஆய பொன் அழகிய பொன் போன்ற; மா மதிள் பெரிய மதிள்களாலும்; சூழ்ந்து அழகு ஆர் சூழ்ந்த அழகிய; தென் அரங்கமே ஸ்ரீரங்கம்; என்றும் எந்நாளும்; சேயன் தூரத்திலிருப்பவன்; மிகப் பெரியன் மிகப் பெரியவன்; நுண் அதிஸூக்ஷ்மமானவன்; நேர்மையன் ஆய இம் நேர்மையானவனுமான; ஆரும் அறியா யாராலும் அறியமுடியாத; மாயை இந்த மாய சக்தியையுடைய; வகையான் பெருமான்; இடம் என்பரால் இடமென்று சொல்லுவர்

PT 5.4.10

1387 அல்லிமாதரமரும் திருமார்வனரங்கத்தை *
கல்லின்மன்னுமதிள் மங்கையர்கோன்கலிகன்றிசொல் *
நல்லிசைமாலைகள் நாலிரண்டுமிரண்டும் * உடன்
வல்லவர்தாம்உலகாண்டு பின்வானுலகாள்வரே. (2)
1387 ## அல்லி மாதர் அமரும் * திரு மார்வன் அரங்கத்தை *
கல்லின் மன்னு மதிள் * மங்கையர் கோன் கலிகன்றி சொல் **
நல் இசை மாலைகள் * நால் இரண்டும் இரண்டும் உடன் *
வல்லவர் தாம் உலகு ஆண்டு * பின் வான் உலகு ஆள்வரே 10
1387 ## alli mātar amarum * tiru mārvaṉ araṅkattai *
kalliṉ maṉṉu matil̤ * maṅkaiyar-koṉ kalikaṉṟi cŏl **
nal icai mālaikal̤ * nāl iraṇṭum iraṇṭum uṭaṉ *
vallavar-tām ulaku āṇṭu * piṉ vāṉ ulaku āl̤vare-10

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1387. Kaliyan, the chief of Thirumangai surrounded by walls stronger than mountains composed ten pāsurams on the god (Arangan) on whose chest Lakshmi stays on a beautiful lotus. If devotees learn and recite this garland of ten musical pāsurams, they will rule the world and go to the spiritual world and rule it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அல்லி தாமரையில் பிறந்த; மாதர் அமரும் திருமகள் அமரும்; திரு மார்வன் மார்பையுடைய; அரங்கத்தை எம்பெருமானைக் குறித்து; கல்லின் கல்லாலே; மன்னு மதிள் கட்டப் பட்ட மதிளையுடைய; மங்கையர் கோன் திருமங்கைத் தலைவன்; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொல் அருளிச்செய்த; நல் இசை நல்ல இசையோடு கூடின; மாலைகள் சொல் மாலையாகிய; நால் இரண்டும் இரண்டும் உடன் பத்துப் பாசுரங்களையும்; வல்லவர் தாம் ஓதவல்லவர்கள்; உலகு இவ்வுலகத்தில்; ஆண்டு பின் ஸ்ரீரங்கத்திலுள்ள பெருமானின் குணங்களை அநுபவித்து; வான் உலகு ஆள்வரே பரமபதத்தையும் ஆள்வர்