பஹு வித உபகாரங்கள் கீழே அதுவும் போராது என்று பல அவதாரங்கள் இவருக்கு உபகரிக்கவே
அநேக அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு வந்து ரஷகன் ஆனவன் அவ்வவதார காலங்களிலே பிற் பாடர்க்கும் இழக்க வேண்டாத படி வந்து சந்நிஹிதனான தேசம் கோயில் -என்கிறார்- (நரசிங்கம் ரெங்கேந்திர சிங்கம் அமலன் -ஒரே தூண் இல்லை ஒருவனுக்கா இல்லை )
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த் தானுமாய தரணித் தலைவன் இடம்