PT 5.4.4

வில்லால் இலங்கையழித்த பிரானின் இடம்

1381 விளைத்தவெம்போர் விறல்வாளரக்கன்நகர்பாழ்பட *
வளைத்தவல்வில்தடக்கையவனுக்கு இடமென்பரால் *
துளைக்கையானைமருப்பும் அகிலும்கொணர்ந்துந்தி * முன்
திளைக்கும்செல்வப்புனல்காவிரிசூழ் தென்னரங்கமே.
1381 vil̤aitta vĕm por viṟal vāl̤ arakkaṉ * nakar pāzhpaṭa *
val̤aitta val vil taṭakkai-avaṉukku * iṭam ĕṉparāl ** -
tul̤aik kai yāṉai maruppum akilum * kŏṇarntu unti * muṉ
til̤aikkum cĕlvap puṉal kāviri cūzh * tĕṉ araṅkame-4

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1381. Our god who as Rāma bent his bow and destroyed Lankā, the kingdom of the Rakshasā king Rāvana with a heroic sword and fought with him in a cruel battle stays in Thennarangam surrounded by the flourishing Kaveri and its abundant water that brings elephant tusks and akil and throws them onto its banks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
துளைக் கை துதிக்கையையுடைய; யானை யானைகளின்; மருப்பும் தந்தங்களையும்; அகிலும் அகில் மரங்களையும்; கொணர்ந்து அடித்துக் கொண்டுவந்து; உந்தி முன் முன்னே தள்ளி; திளைக்கும் லீலாரஸமனுபவிக்கின்ற; செல்வப் புனல் தீர்த்தத்தையுடைய; காவிரி காவேரியினால்; சூழ் தென் அரங்கமே சூழ்ந்த ஸ்ரீரங்கம்; விளைத்த கடுமையான; வெம் போர் யுத்தத்தை உண்டாக்கின; விறல் வாள் வாட்படைவல்லன்; அரக்கன் இராவணனின்; நகர் நகரமாகிய; பாழ்பட இலங்கை அழியும்படியாக; வளைத்த வல்வில் வில் வளைத்த; தடக்கை விசாலமான கையை உடைய; அவனுக்கு பெருமானுக்கு; இடம் என்பரால் இடமென்று சொல்லுவர்