PT 5.4.2

ஆலிலையில் பள்ளிகொண்ட மாயனது இடம்

1379 வையமுண்டுஆலிலைமேவுமாயன், மணிநீண்முடி *
பைகொள்நாகத்தணையான் பயிலும்இடமென்பரால் *
தையல்நல்லார்குழல்மாலையும் மற்றவர்தடமுலை *
செய்யசாந்தும்கலந்திழிபுனல்சூழ் தென்னரங்கமே.
1379 vaiyam uṇṭu āl ilai mevum māyaṉ * maṇi nīl̤ muṭi *
pai kŏl̤ nākattu aṇaiyāṉ * payilum iṭam ĕṉparāl ** -
taiyal nallār kuzhal mālaiyum * maṟṟu avar taṭa mulai *
cĕyya cāntum kalantu izhi puṉal cūzh * tĕṉ araṅkame-2

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1379. Our Māyan who swallowed the whole world and slept on a banyan leaf and who rests on the ocean on the snake Adisesha that has diamonds on his thousand heads stays in Thennarangam surrounded by the Kaveri flowing with abundant water mixed with sandal paste that had been smeared on women’s large breasts and with flowers from the garlands that adorned their beautiful hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நல்ல; தையலார் ஸ்த்ரீகளினுடைய; குழல் தலையிலணிந்த; மாலையும் பூமாலைகளும்; மற்று அவர் அவர்களுடைய; தட முலை மார்பகங்களில்; செய்ய சாந்தும் இருந்த சிவந்த சந்தனமும்; கலந்து கலந்து; இழி புனல் சூழ் பெருகும் நீர் சூழ்ந்த; தென் அரங்கமே ஸ்ரீரங்கம்; வையம் உண்டு உலகம் உண்டு; ஆலிலை மேவும் ஆலிலை மேல்; மாயன் சயனித்திருக்கும் மாயன்; மணி ரத்தினங்கள் இழைக்கப்பட்ட; நீள் முடி கிரீடமணிந்தவனும்; பை கொள் ஆதி சேஷன்; நாகத்து என்னும் நாகத்தை; அணையான் படுக்கையாகக் கொண்ட பெருமான்; பயிலும் இடம் இருக்கும் இடம்; என்பரால் என்று சொல்லுவர்