PT 5.4.6

பேய்ச்சி பாலுண்டபிரான் தங்கும் இடம்

1383 கலையுடுத்தஅகலல்குல் வன்பேய்மகள்தாயென *
முலைகொடுத்தாளுயிருண்டவன் வாழுமிடமென்பரால் *
குலையெடுத்தகதலிப் பொழிலூடும்வந்துஉந்தி * முன்
அலையெடுக்கும்புனல்காவிரிசூழ் தென்னரங்கமே.
1383 kalai uṭutta akal alkul * vaṉ pey makal̤ tāy ĕṉa *
mulai kŏṭuttāl̤ uyir uṇṭavaṉ * vāzhum iṭam ĕṉparāl ** -
kulai ĕṭutta katalip * pŏzhilūṭum vantu unti * muṉ
alai ĕṭukkum puṉal kāviri cūzh * tĕṉ araṅkame-6

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1383. Kannan who drank milk from the terrible devil Putanā and killed her after she had come wearing a lovely garment around her waist stays in Thennarangam surrounded by the Kaveri with its rolling waves that flows by banana groves filled with bunches of fruits.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குலை எடுத்த குலைகள் ஓங்கியிருக்கும்; கதலிப் வாழை; பொழில் தோப்புகளினுள்ளே புகுந்து; ஊடும் அம்மரங்களை; வந்து பறித்துக்கொண்டு வந்து; உந்தி முன் முன்னே தள்ளி; அலை எடுக்கும் அலை வீசும்; புனல் காவிரி நீரையுடைய காவிரி; சூழ் சூழ்ந்த; தென் அரங்கமே ஸ்ரீரங்கம்; கலை உடுத்த பட்டாடையணிந்த; அகல்அல்குல் அகன்ற இடையுடைய; தாய் என தாயான யசோதை போல் வந்த; வன் பேய் மகள் வலிய பூதனை; முலை கொடுத்தாள் பாலூட்ட; உயிருண்டவன் பிராணனை உண்ட; வாழ் கண்ணபிரான் வாழும்; இடம் என்பரால் இடமென்று சொல்லுவர்