PT 5.4.3

உலகளந்தவன் உறையும் இடம்

1380 பண்டுஇவ்வையமளப்பான் சென்று மாவலிகையில்நீர்
கொண்ட * ஆழித்தடக்கைக் குறளனிடமென்பரால் *
வண்டுபாடும்மதுவார்புனல் வந்திழிகாவிரி *
அண்டநாறும்பொழில்சூழ்ந்து அழகார்தென்னரங்கமே.
1380 paṇṭu iv vaiyam al̤appāṉ cĕṉṟu * māvali kaiyil nīr
kŏṇṭa * āzhit taṭak kaik * kuṟal̤aṉ iṭam ĕṉparāl ** -
vaṇṭu pāṭum matu vār * puṉal vantu izhi kāviri *
aṇṭam nāṟum pŏzhil cūzhntu * azhaku ār tĕṉ araṅkame-3

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1380. Our lord who went as a dwarf in ancient times, took water in his large hands from Mahabali and measured the world and sky stays in beautiful flourishing Thennarangam where the Kaveri flows with sweet honey-like water and bees sing and the fragrance of the groves rises to the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு வண்டுகள்; பாடும் ரீங்காரம் செய்யும்; மது வார் தேன் பெருகும்; புனல் வந்து நீர் வந்து; இழி பிரவகிக்கும்; காவிரி காவேரியினாலும்; அண்ட ஆகாச மெங்கும்; நாறும் நறுமணம் வீசும்; பொழில் சூழ்ந்து சோலைகளாலும் சூழ்ந்த; அழகு ஆர் தென் அரங்கமே அழகிய ஸ்ரீரங்கம்; பண்டு முன்பொருசமயம்; இவ் வையம் இப்பூமியை; அளப்பான் அளந்து தன் வசப்படுத்தி; சென்று கொள்வதற்காக; மாவலி கையில் மஹாபலியிடமிருந்து; நீர் கொண்ட தான நீரைப் பெற்ற; ஆழித் தடக் கை சக்கரக் கையாலே; குறளன் ஏற்றுக்கொண்ட வாமனன்; இடம் என்பரால் இடமென்று சொல்லுவர்