Chapter 7

Complains of the cowherd - (மானம் உடைத்து)

கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்
Complains of the cowherd - (மானம் உடைத்து)
The Gopis (cowherd women) complain about Krishna. The verses in this section are structured as if the Gopis are recounting Krishna's mischievous deeds to Yashoda, and Yashoda responds to their complaints. The āzhvār captures this dynamic, expressing the Gopis' grievances and Yashoda's replies in these verses.
ஆய்ச்சியர் கண்ணனைக்குறித்து முறையிடல். ஆயர் பெண்கள், கண்ணன் செய்யும் தீம்புகளை யசோதையிடம் பலவாறு சொல்லி முறையிடுவதாகவும், யசோதை பதில் கூறுவதாகவும் அமைந்துள்ளன ஈண்டுள்ள பாடல்கள்.
Verses: 1908 to 1921
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Getting freed from all hurdles
  • PT 10.7.1
    1908 மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம்
    அதனால் * பிறர் மக்கள் தம்மை *
    ஊனம் உடையன செய்யப் பெறாய் என்று *
    இரப்பன் உரப்பகில்லேன் **
    நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன் *
    நங்கைகாள் நான் என் செய்கேன்? *
    தானும் ஓர் கன்னியும் கீழை அகத்துத் *
    தயிர் கடைகின்றான் போலும் 1
  • PT 10.7.2
    1909 ## காலை எழுந்து கடைந்த இம் மோர் விற்கப்
    போகின்றேன் * கண்டே போனேன் *
    மாலை நறுங் குஞ்சி நந்தன் மகன் அல்லால் *
    மற்று வந்தாரும் இல்லை **
    மேலை அகத்து நங்காய் வந்து காண்மின்கள் *
    வெண்ணெயே அன்று இருந்த *
    பாலும் பதின் குடம் கண்டிலேன் * பாவியேன்
    என் செய்கேன்? என் செய்கேனோ? 2
  • PT 10.7.3
    1910 தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் *
    உறிமேலைத் தடா நிறைந்த *
    வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை *
    வாரி விழுங்கியிட்டு **
    கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் *
    கை எல்லாம் நெய் * வயிறு
    பிள்ளை பரம் அன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும் *
    பேதையேன் என் செய்கேனோ? 3
  • PT 10.7.4
    1911 மைந்நம்பு வேல் கண் நல்லாள் * முன்னம் பெற்ற
    வளை வண்ண நல் மா மேனி *
    தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது *
    அவன் இவை செய்தறியான் **
    பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வம் * பொதி அறை
    போகின்றவா தவழ்ந்திட்டு *
    இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை *
    என் செய்கேன்? என் செய்கேனோ? 4
  • PT 10.7.5
    1912 தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் *
    தோழிமார் ஆரும் இல்லை *
    சந்த மலர்க் குழலாள் * தனியே
    விளையாடும் இடம் குறுகி **
    பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் *
    படிறன் படிறுசெய்யும் *
    நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்? நங்காய் *
    என் செய்கேன்? என் செய்கேனோ? 5
  • PT 10.7.6
    1913 மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் *
    நந்தன் பெற்ற மதலை *
    அண்ணல் இலைக் குழல் ஊதி நம் சேரிக்கே *
    அல்லில் தான் வந்த பின்னை **
    கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் *
    கமலச் செவ்வாய் வெளுப்ப *
    என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் *
    என் செய்கேன்? என் செய்கேனோ? 6
  • PT 10.7.7
    1914 ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு
    அன்று * ஆயர் விழவு எடுப்ப *
    பாசன நல்லன பண்டிகளால் * புகப்
    பெய்த அதனை எல்லாம் **
    போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு *
    உன் மகன் இன்று நங்காய் *
    மாயன் அதனை எல்லாம் முற்ற * வாரி
    வளைத்து உண்டு இருந்தான் போலும் 7
  • PT 10.7.8
    1915 தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் *
    ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று *
    ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் * நான் இதற்கு
    எள்கி இவனை நங்காய் **
    சோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய் என்று *
    இரப்பன் உரப்பகில்லேன் *
    பேய்ச்சி முலை உண்ட பின்னை * இப்
    பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே 8
  • PT 10.7.9
    1916 ஈடும் வலியும் உடைய * இந் நம்பி
    பிறந்த எழு திங்களில் *
    ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி *
    யமுனை நீராடப் போனேன் **
    சேடன் திரு மறு மார்வன் * கிடந்து
    திருவடியால் * மலைபோல்
    ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை *
    உரப்புவது அஞ்சுவனே 9
  • PT 10.7.10
    1917 அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் *
    ஆயிரம் நாழி நெய்யை *
    பஞ்சிய மெல் அடிப் பிள்ளைகள் உண்கின்ற *
    பாகம் தான் வையார்களே **
    கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் * என்
    கைவலத்து ஆதும் இல்லை *
    நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ *
    என் செய்கேன்? என் செய்கேனோ? 10
  • PT 10.7.11
    1918 அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ
    நம்பீ * ஆயர் மட மக்களை? *
    பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள் *
    பின்னே சென்று ஒளித்திருந்து **
    அங்கு அவர் பூந் துகில் வாரிக்கொண்டிட்டு *
    அரவு ஏர் இடையார் இரப்ப *
    மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று *
    மரம் ஏறி இருந்தாய் போலும் 11
  • PT 10.7.12
    1919 அச்சம் தினைத்தனை இல்லை இப் பிள்ளைக்கு *
    ஆண்மையும் சேவகமும் *
    உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு *
    உரைத்திலன் தான் இன்று போய் **
    பச்சிலைப் பூங் கடம்பு ஏறி * விசைகொண்டு
    பாய்ந்து புக்கு * ஆயிர வாய்
    நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு *
    பிணங்கி நீ வந்தாய் போலும் 12
  • PT 10.7.13
    1920 தம்பரம் அல்லன ஆண்மைகளைத் *
    தனியே நின்று தாம் செய்வரோ? *
    எம் பெருமான் உன்னைப் பெற்ற வயிறு உடையேன் *
    இனி யான் என் செய்கேன்? **
    அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் *
    அங்கு அனல் செங் கண் உடை *
    வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு *
    பிணங்கி நீ வந்தாய் போலும் 13
  • PT 10.7.14
    1921 ## அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து
    அஞ்ச * அரு வரைபோல் *
    மன்னு கருங் களிற்று ஆர் உயிர் வவ்விய *
    மைந்தனை மா கடல் சூழ் **
    கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன் *
    காமரு சீர்க் கலிகன்றி *
    இன் இசை மாலைகள் ஈர் ஏழும் வல்லவர்க்கு *
    ஏதும் இடர் இல்லையே 14