PT 10.7.6

என் மகளிடம் கண்ணன் வம்பு செய்தானே!

1913 மண்மகள்கேள்வன்மலர்மங்கைநாயகன்
நந்தன்பெற்றமதலை *
அண்ணல்இலைக்குழலூதிநம்சேரிக்கே
அல்லில்தான்வந்தபின்னை *
கண்மலர்சோர்ந்துமுலைவந்துவிம்மிக்
கமலச்செவ்வாய்வெளுப்ப *
என்மகள்வண்ணம்இருக்கின்றவாநங்காய்!
என்செய்கேன்? என்செய்கேனோ?
1913 maṇmakal̤ kel̤vaṉ malar maṅkai nāyakaṉ *
nantaṉ pĕṟṟa matalai *
aṇṇal ilaik kuzhal ūti nam cerikke *
allil-tāṉ vanta piṉṉai **
kaṇ malar corntu mulai vantu vimmik *
kamalac cĕvvāy vĕl̤uppa *
ĕṉ makal̤ vaṇṇam irukkiṉṟavā naṅkāy *
ĕṉ cĕykeṉ? ĕṉ cĕykeṉo?-6

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1913. A cowherdess says, “ O Yashodā, our lord who was carried to our cowherd village by his father Nandan at night when he was a child is the beloved of Lakshmi and of the earth goddess. He plays a bamboo flute and my daughter loves him. Her flower-like eyes are weary, her breasts are round, and her lotus-red mouth has grown pale. O beautiful friend, come and see how my daughter suffers. What can I do? What can I do?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நங்காய்! யசோதையே!; மண்மகள் பூமிப்பிராட்டியின்; கேள்வன் நாயகன்; மலர் மங்கை திருமகளின்; நாயகன் நாயகனான; நந்தன் பெற்ற நந்தகோபன் பெற்ற; மதலை குழந்தையான; அண்ணல் கண்ணன்; இலை இலையினாலான; குழல் புல்லாங்குழலை; ஊதி ஊதிக்கொண்டு; அல்லில் தான் இரவில்; நம் சேரிக்கே நம் சேரிக்கு; வந்த பின்னை வந்த பிறகு; கண் மலர் சோர்ந்து கண் மலர் வாடி; முலை வந்து விம்மி மார்பகங்கள் விம்மி; கமலச் செவ்வாய் தாமரைப் போன்ற உதடு; வெளுப்ப வெளுத்து; என்மகள் வண்ணம் என்மகளின் நிறம்; இருக்கின்ற வா பசலை போன்றாயிற்று; என் செய்கேன்? என் செய் கேனோ?