PT 10.7.8

கண்ணனை அதட்ட அஞ்சுவேன்

1915 தோய்த்ததயிரும்நறுநெய்யும்பாலும்
ஓரோர்குடம்துற்றிடுமென்று *
ஆய்ச்சியர்கூடியழைக்கவும்
நான்இதற்கெள்கிஇவனைநங்காய்! *
சோத்தம்பிரான்! இவைசெய்யப்பெறாயென்று
இரப்பன்உரப்பகில்லேன் *
பேய்ச்சிமுலையுண்டபின்னை
இப்பிள்ளையைப்பேசுவதுஅஞ்சுவனே.
1915 toytta tayirum naṟu nĕyyum pālum *
or or kuṭam tuṟṟiṭum ĕṉṟu *
āycciyar kūṭi azhaikkavum * nāṉ itaṟku
ĕl̤ki ivaṉai naṅkāy **
cottam pirāṉ ivai cĕyyap pĕṟāy ĕṉṟu *
irappaṉ urappakilleṉ *
peycci mulai uṇṭa piṉṉai * ip
pil̤l̤aiyaip pecuvatu añcuvaṉe-8

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1915. Yashodā says, “The cowherd women got together and called me. They said, ‘See, we kept the fermented yogurt, fragrant ghee and milk in various pots, but they are all empty now. ’ I felt ashamed and told my friends, ‘He is my dear lord! I can only plead with him not to do these naughty things, I can’t scold him. How could I scold my child who drank milk from the devil Putanā and killed her? I am afraid of scolding him. ’”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நங்காய்! யசோதையே!; தோய்த்த தயிரும் தோய்த்த தயிரும்; நறு நெய்யும் பாலும் நறு நெய்யும் பாலும்; ஓர் ஓர் குடம் ஓவ்வொரு குடத்திலிருந்தும்; துற்றிடும் என்று கண்ணன் உண்டுவிடுவான் என்று; ஆய்ச்சியர் கூடி ஆய்ச்சியர் கூடி; அழைக்கவும் என்னை அழைத்தும்; நான் இதற்கு இந்தச் செயலுக்கு நான்; எள்கி இவனை ஈடுபட்டு இவனை நோக்கி; பிரான்! பெருமானே!; சோத்தம் உன்னை வணங்குகிறேன்; இவை செய்ய இப்படிப்பட்ட தப்புக்காரியங்களை; பெறாய்! என்று இனி செய்யாதே என்று; இரப்பன் வேண்டிக்கொள்வேனே அன்றி; உரப்பகில்லேன் கோபித்துக் கொள்ளமாட்டேன்; பேய்ச்சி முலை பூதனையின் பாலை; உண்ட பின்னை உண்ட பின்; இப் பிள்ளையை இப்பிள்ளையை; பேசுவது கடிந்து கொள்ள; அஞ்சுவனே அஞ்சுகிறேன்